மும்பை: பாலிவுட் பிரபலங்கள் பலரும் நடிப்பை தாண்டி பங்குச் சந்தைகள் மற்றும் ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்வதன் மூலம் பெருமளவிலான சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளனர். அந்த வகையில் குறிப்பிடத்தக்க ஒரு பாலிவுட் பிரபலம் தான் விவேக் ஓபராய். 1200 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட நபராக இருக்கிறார்.
இதில் பெரும்பாலான பணம் இவருக்கு பல்வேறு தொழில்களிலும் பல்வேறு நிறுவனங்களின் பங்குகளிலும் முதலீடு செய்வதன் மூலமே கிடைத்திருக்கிறது. இளம் வயதிலிருந்து விவேக் ஓபராய்க்கு தொழில்களின் ஈடுபடுவதில் ஆர்வம் இருந்தது.

பாலிவட்டில் நடிகராக நுழைவதற்கு முன்னரே அவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக வேலை செய்து வந்தவர். 15 வயதிலிருந்து அவருக்கு பங்குச்சந்தைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு அது தொடர்பாக தேடிப் படித்து பங்குச்சந்தை முதலீடுகள் குறித்து தெரிந்து கொண்டாராம்.
இதனை அடுத்து பங்குச்சந்தை தரகர்களிடம் சென்று பங்குச்சந்தை எப்படி செயல்படுகிறது என்பது குறித்து பயிற்சி பெற்று தன்னுடைய 16 ஆவது வயதிலேயே தனக்கென ஒரு போர்ட்போலியோவை உருவாக்கி வைத்திருக்கிறார்.
19 வயதாகும்போது இவர் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஸ்டார்ட் அப்பை நிறுவினார் 22 வயது ஆகும்போது அந்த ஸ்டார்ட் அப்பை ஒரு பெரு நிறுவனத்திற்கு விற்பனை செய்து கணிசமான தொகையை லாபமாக பார்த்தாராம்.
இவர் நடிப்பு ஒருபுறம் இருந்தாலும் தன்னுடைய முழு கவனத்தை தொழில் மற்றும் பங்குச்சந்தை முதலீடுகளில் வைத்திருந்தது இதன் மூலம் நமக்கு தெரிய வருகிறது மும்பையில் இருக்கும் மித்திபாய் கல்லூரியில் காமர்ஸ் பிரிவில் பட்டப் படிப்பை முடித்த விவேக் ஓபராய், பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஆரம்ப நிலையிலேயே முதலீடு செய்துள்ளார்.
ஓபராய் ஃபேமிலி ஆபீஸ் என்ற பெயரில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் ஒரு நிறுவனத்தை தொடங்கினார் . இந்த நிறுவனத்தின் பணி வளர்ந்து வரக்கூடிய ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்வதாகும். அவருடைய இந்த முதலீட்டு உத்திகள் தான் தற்போது 1200 கோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரராக மாற்றி இருக்கிறது. இவருடைய சொத்தில் 60% பங்குச்சந்தை முதலீடுகளின் மூலம் கிடைத்திருக்கிறதாம்.
திரைப்படங்களில் நடிப்பது மற்றும் நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம் 40% கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது விவேக் ஓபராய் Solitario என்ற ஒரு வைர நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் 18 நாடுகளில் கடைகளை திறந்து வைர நகைகளை விற்பனை செய்து வருகிறது. நிதி ரீதியாக தான் இத்தனை ஒழுக்கமாக இருப்பதற்கு காரணம் தன்னுடைய தந்தை சுரேஷ் ஓபராய் தான் காரணம் என்கிறார் விவேக் ஓபராய்.
Story Written by: Devika
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications