இந்தியாவின் பிரபல சமூக வலைத்தளமான ஷேர்சாட், தனது மொத்த ஊழியர்களில் சுமார் 5% பேரை பணிநீக்கம் செய்ய உள்ளது. இந்தியாவின் பல முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அடுத்தக்கட்ட வளர்ச்சியை எட்ட முடியாத காரணத்தால் புதிய முதலீடுகளை ஈர்க்க முடியாமல் உள்ளது.
இந்த நிலையில் ஷேர்சாட் போல செலவுகளை குறைத்தும், தனது சேவைகளை முடக்கியும் நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்தி வருகிறது. லாக்டவுன் காலத்தில் பெரும் முதலீட்டை திரட்டிய நிறுவனங்களில் ஒன்றாக இருந்த ஷேர்சாட் கடந்த 3 வருடத்தில் பல முறை ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மனிகன்ட்ரோல் வெளியிட்டுள்ள தகவல்கள் படி, ஷேர்சாட் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த சுமார் 20 முதல் 30 ஊழியர்கள் இந்த பணிநீக்கத்தால் பாதிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த பணிநீக்கம் அனைத்தும் இந்நிறுவனத்தின் வருடாந்திர செயல்திறன் மதிப்பாய்வு செயல்முறையின் அடிப்படையில் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது, அதாவது அன்டர் பர்பாமென்ஸ் பிரிவில் இருக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
ஒவ்வொரு ஆண்டும் செயல்திறன் அளவுகோலில் குறைந்த அளவில் உள்ள சுமார் 3-4% ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது வழக்கமான நடைமுறையாக எங்கள் நிறுவனத்தில் உள்ளது என ஷேர்சாட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஷேர்சாட் நிறுவனத்தில் இது முதல் முறையாக பணிநீக்கம் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு ஆண்டுகளில், நான்கு முறை தனித்தனியாக 850 க்கும் அதிகமான ஊழியர்கள் நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டு இயங்குவது மட்டும் அல்லாமல் பல பணிகளையும், அணிகளையும் தொடர்ந்து மறுசீரமைப்பு செய்து வருவதும் நடக்கிறது.


Click it and Unblock the Notifications