உலகில் பிற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருப்பதாகப் பல தரப்பினர் கூறினாலும் இந்தியாவில் அடுத்தடுத்து பல முன்னணி நிறுவனங்கள் பணிநீக்கம் செய்வது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த நிலையில் இந்தியாவின் சமூக வலைத்தளப் பிரிவில் பிரபலமான நிறுவனமாக இருக்கும் சேர்சாட் நிறுவனம் தனது ஊழியர்களை நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் மூன்லைட்டிங் மற்றும் போலி ஆவணங்கள் கீழ் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதைத் தொடர்ந்து ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அடுத்தடுத்துப் பணிநீக்கம் செய்து வருகிறது.
சேர்சாட்
சேர்சாட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மொஹல்லா டெக் பிரைவேட் லிமிடெட் இன்று தனது வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்யும் மிகவும் முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இந்த அறிவிப்பால் ஒட்டுமொத்த சேர்சாட் மற்றும் அதன் கிளை பிராண்டுகளில் பணியாற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜீத்11
சேர்சாட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மொஹல்லா டெக் அறிவிப்பின் படி இக்குழுமத்தில் இருக்கும் பேன்டசி கேமிங் பிரிவான ஜீத்11 (jeet11) தளத்தை மொத்தமாக மூட உள்ளதாக அறிவித்துள்ளது.இந்தியாவில் ஆன்லைன் கேமிங் பிரிவு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் மொஹல்லா டெக் தனது ஜீத்11 பிரிவு மூடியுள்ளது.
100 ஊழியர்கள்
இதன் மூலம் சுமார் 100 ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட உள்ளதாகவும், இதில் பெரும்பாலும் டெக் பிரிவு அல்லாத ஊழியர்கள் தான், ஜீத் 11 பிரிவின் டெக் ஊழியர்கள் அனைவரையும் சேர்சாட் மற்றும் மோஜ் ஆகிய பிரிவுகளின் கீழ் சேர்க்க உள்ளதாக அறிவித்துள்ளது.
மொஹல்லா டெக்
மொஹல்லா டெக் இதுகுறித்த அறிவிப்பில் ஒவ்வொரு காலகட்டத்திலும் வர்த்தகத்தை மறு ஆய்வு செய்யும் பொருட்டுத் தற்போது கேமிங் பிரிவான ஜீத் 11 மூடவும், பெரும்பாலான ஊழியர்களைத் தக்க வைத்துக்கொண்டு சில ஊழியர்கள் மட்டுமே பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
5 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம்
இந்தப் பணிநீக்கத்தின் மூலம் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 5 சதவீதத்திற்கும் குறைவான ஊழியர்களை மட்டுமே பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர். இந்தப் பணிநீக்கம் மூலம் மொஹல்லா டெக் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இன்னும் வேகமாகவும், உறுதியாகவும் பயணிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.
கேமிங் துறை
மொஹல்லா டெக், 2 வருடத்திற்கு முன்பு தான் கேமிங் துறையில் களமிறங்குவதற்காக ஜீத் 11 தளத்தைப் புதிய முயற்சியாகத் துவங்கியது, ஜீத் 11 மூடியது மூலம் இப்பிரிவில் செலவு செய்யப்பட்டு வரும் தொகை குறைய உள்ளது, மேலும் இதன் மூலம் 100 ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற உள்ளனர்.
MPL நிறுவனம்
இந்த வருடம் சிகோயா கேப்பிடல் நிறுவனத்தின் முதலீட்டில் இயங்கும் கேமிங் தளமான MPL நிறுவனம் சுமார் 100 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது மட்டும் அல்லாமல் இந்தோனேஷியா சந்தையை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
இந்தியாவில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெரும்பாலானவை வட்டி விகித உயர்வால் தொடர்ந்து புதிய முதலீடுகளைத் திரட்ட முடியாமல் நிதிப் பற்றாக்குறையால் மாட்டிக்கொண்டு உள்ளது. இதுமட்டும் அல்லாமல் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அனைத்தும் தொடர்ந்து முதலீட்டை வெளியேற்றி வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications