சொந்த தொழில் துவங்குவது என்பது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி சவால் நிறைந்த விஷயம். தொழில் துவங்கிவிட்டால் போதுமா, அதில் வெற்றி பெற்று முன்னணி பிராண்ட் அல்லது நிறுவனமாக வலம் வருவது என்பது எவ்வளவு கடனம் என்பதை விவரிக்க தேவையில்லை. இது அனைத்தும் Housewife ஆக இருந்து தொழில் துவங்குபவர்களுக்கு பல மடங்கு அதிக சவாலாக இருக்கும்.
இப்படி பல வருடமாக Housewife ஆக இருந்து பிஸ்னஸ்வுமென் ஆக உயர்ந்தவர் தான் ஷீலா கோச்சௌஃப், இவர் ஒரு தொழிலதிபரின் மனைவி என்பதால் சில விஷயங்கள் எளிதாக இருந்திருக்கலாம் என நினைக்கலாம், ஆனால் அங்கு தான் பிரச்சனையே.. ஷீலா கோச்சௌஃப்-வின் கணவர் 2 முக்கிய கண்டிஷன் வைத்தார்.

அதையும் தாண்டி 1995 ஆம் ஆண்டு V-ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார் ஷீலா கோச்சௌஃப் (Sheela Kochouseph). அவரது குடும்பம் வர்த்தகத்திலும் சரி தொழில்துறையிலும் சரி நன்கு உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு குடும்பம்.
இதனாலேயே பல பிரச்சனைகள் எழுந்தது. ஷீலா-வின் கணவர் பிஸ்னஸ் துவங்கும் ஐடியா-வை முன்வைத்த போது அவருடைய கணவர் இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளார். தொழிலை துவங்க குடும்ப பணத்தை எடுக்க கூடாது. வீட்டுக்கு அருகில் இருக்கும் காலியான அலுவலகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம், ஆனால் அதற்கு மாத வாடகை கொடுக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக இல்லத்தரசியாக இருந்த ஷீலா-வுக்கு பிஸ்னஸ் துவங்குவதில் இருக்கும் பிரச்சனையை விடவும் கணவன் வைத்த கண்டிஷன் மிகவும் கடுமையாக இருந்தது. ஆனாலும் மனம் தளராமல் கணவரின் சவாலை ஏற்று, வங்கியில் ஒரு சிறிய கடனைப் பெற்று, வி-ஸ்டார் கிரியேஷன்ஸ் என்ற தனது சொந்த உள்ளாடை பிராண்டைத் தொடங்க முடிவு செய்தார்.
ஷீலா வங்கியில் கடன் வாங்கி 1995 இல் 10 பேரை வேலைக்கு அமர்த்த முடிவு செய்தார், ஆரம்பத்தில் இந்நிறுவனம் ஆடை வணிகமாகத் தொடங்கியது. பின்னர், கேரளாவில் உள்ள பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளாடைகள் மும்பை மற்றும் பெங்களூரில் இருந்து வாங்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதை அறிந்தார் ஷீலா. இது மட்டும் அல்லாமல் கேரள மாநிலத்தில் உள்ளூர் உள்ளாடை பிராண்ட் எதுவும் இல்லை என்பதையும் தெரிந்துக்கொண்டார்.
ஷீலா கோச்சௌஸ்ஃப் இதை பெரிய வாய்ப்பாக பார்த்தார், உடன் ஸ்டார்ட்அப் நிறுவனமான வி-ஸ்டார் கிரியேஷன்ஸ் மூலம் சில அழகான டிசைன்கள் மற்றும் எளிமையான வண்ணங்களில் பெண்கள் உள்ளாடைகள் தயாரிக்கத் தொடங்கும் என்று முடிவு செய்தார். ஆரம்பத்தில், ப்ரா மற்றும் உள்ளாடைகள் 10 ஊழியர்களால் கையால் தைக்கப்பட்டன.
பளிச்சிடும் டிசைன்கள் இல்லாமல் உள்ளாடை தயாரிக்கப்பட்டது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஷீலா-வின் எளிய டிசைன் மற்றும் மலிவு விலை காரணமாக வி-ஸ்டார் கிரியேஷன்ஸ் வேகமாக வளரத் தொடங்கியது, இப்போது பல மில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக உயர்ந்துள்ளது.
1995 ஆம் ஆண்டில் ஷீலா கோச்சௌஃப் நிறுவிய வி-ஸ்டார் கிரியேஷன்ஸ் 2022 ஆம் ஆண்டில் சுமார் 500 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் ஷீலா கோச்சௌஃப்பின் மொத்த நிகர மதிப்பு ரூ.540 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications