கத்தார் நாட்டின் உயர்மட்ட அரசு அதிகாரியான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி செவ்வாய்கிழமை அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.
2020 முதல் இப்பதவியில் இருந்த கத்தார் நாட்டின் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல் அஜீஸ் அல் தானிக்குப் பதிலாக நியமிக்கப்பட்டு உள்ளார் என கத்தார் நாட்டின் அரசு ஊடகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி புதிய அரசாங்கத் தலைவராக பதவியேற்றார் என்று எவ்விதமான விபரங்களும் இல்லாமல் கத்தார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. யார் இந்த ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி..?
கத்தார் அமீர்
கத்தாரின் ஆளும் அமீர், ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி தான் உயர் பதவிகளில் இருப்பவரை நியமிப்பார். பொதுவாக கத்தார் நாட்டின் உயரிய அரசு பதவிகளில் ஆளும் அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர்களை தான் நியமிக்கப்படுவார்கள். மற்ற வளைகுடா அரபு நாடுகளைப் போலவே, அரசியல் பெரும்பாலும் ஆளும் குடும்பத்துடன் மட்டுமே உள்ளது, இதனால் அரசு குடும்பத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் குறித்து எப்போதும் பொதுவெளியில் வெளியிடுவது அரிது.
Al Thani குடும்பம்
கத்தார் நாட்டின் உயரிய பதவி அமீர், அதன் பின்பு பிரதமர். தற்போது அமீர் பதவியில் Al Thani குடும்பத்தை சேர்ந்த ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி உள்ளார். 1851 முதல் கத்தார் 8 தலைவர்களை Al Thani குடும்பத்தில் இருந்து பார்த்துள்ளது.
அரசு உயர் பதவிகள்
இந்த நிலையில் Al Thani குடும்ப உறுப்பினர்கள் தான் அந்நாட்டின் அனைத்து அரசு பதவிகளிலும் இருப்பார்கள், இது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் தற்போது புதிகாக கத்தார் நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டு உள்ளார் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி.
ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான்
ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் 2016 முதல் கத்தார் நாட்டின் வெளியுறவு அமைச்சராக பணியாற்றினார் மற்றும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகியவற்றின் 3 1/2 வருட பொருளாதாரப் புறக்கணிப்பு காலக்கட்டத்தில் கத்தார் நாட்டின் வழிநடத்திய தலைவர்களில் முகமது பின் அப்துல்ரஹ்மான் மிகவும் முக்கியமானவர். இந்த பொருளாதாரப் புறக்கணிப்பு ஜனவரி 2021 இல் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்
2020 ஆம் ஆண்டு முதல் கத்தார் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பிரதமராகவும் இருக்கும் ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல் அஜீஸ் அல் தானிக்குப் பதிலாக தற்போது முகமது பின் அப்துல்ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
கத்தார் உறவு
எரிவாயு நிறைந்த கத்தார் இந்த உலகின் செல்வசெழிப்பு நிறைந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. உலக நாடுகள் உடனான கத்தார் நாட்டின் உறவு கடந்த இரண்டு ஆண்டுகளில் மேம்பட்டுள்ளன. கடந்த ஆண்டு கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்திய நிலையில் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் கத்தாருக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications