ஜெய்ப்பூர்: இந்தியாவில் அழகு சார்ந்த தொழில்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம் தான். குறிப்பாக தலைமுடி பிரச்னையை தீர்க்க எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய மக்கள் தயாராக இருக்கின்றனர். அப்படி தலைமுடி பிரச்னையை தீர்க்கும் ஒரு ஸ்டார்ட் அப் குறித்து விரிவாக பார்க்கலாம்..
அழகான கூந்தல் வேண்டும் என்பது தான் பலரது விருப்பம். எனவே தான் முடி உதிர்தல் ,வழுக்கை ஏற்படுதல் ஆகிய பிரச்னைகள் மக்களின் தன்னம்பிக்கையையே குறைத்துவிடுகின்றன. இந்தியாவில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தற்போது இருக்கக்கூடிய பெரிய பிரச்சனை தலைமுடி உதிர்தல்.

இதை தடுக்க தடுப்பதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்கின்றனர். இறுதியில் அவர்கள் நாடிச் செல்வது இதற்கு ஒரு எளிய தீர்வினை தரக்கூடிய விக் அல்லது ஹேர் எக்ஸ்டென்சன்ஸ்.
விக்கு தயாரிப்பதன் மூலம் பல லட்சம் ரூபாயை ஈட்டும் ஒரு பெண் ஷார்க் டேங்க் இந்தியாவின் மூன்றாவது சீசனில் பங்கேற்று நடுவர்களிடமிருந்து முதலீட்டை ஈர்த்துள்ளார். ஷெல் ஹேர் நிறுவனத்தின் நிறுவனர் ஷெல்லி பல்சாந்தினி. அஜ்மீரை சேர்ந்த இவர் 2020ஆம் ஆண்டு ஷெல் ஹேர் என்ற பெயரில் ஹேர் எக்ஸ்டென்ஷன், விக், டாப்பர்ஸ் ஆகியவற்றை தயாரிக்கும் ஒரு ஸ்டார்ட் அப்பை நிறுவினார்.
தற்போது ஐடி துறையில் எம்எஸ்சி பயின்று வரும் இவர் தன்னுடைய கல்லூரி நிர்வாகத்தின் உதவியோடு ஸ்டார்ட் அப்பையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ஷெல் ஹேர் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப, முடிகளை வாங்கி தைத்து புதுப்புது வடிவங்களில் விக்கு தயாரித்து விற்பனை செய்கிறது.
தற்போது சந்தையில் உள்ள முன்னணி பிராண்டுகளை ஒப்பிடும் போது 30% வரை குறைவான தொகைக்கு விற்பனை செய்வதால் ஷெல் ஹேரின் விக்குகள் மற்றும் ஹேர் எக்ஸ்டென்சல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
முதன்முதலில் 2000 ரூபாய்க்கு மனிதர்களின் முடிகளை வாங்கி அதிலிருந்து விக்குகளை தைத்து தனது வீட்டில் இருந்தவர்களுக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் விற்பனை செய்து வந்துள்ளார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து இதனை ஒரு தொழிலாக மாற்ற வேண்டும் என அவர் நினைத்தார்.
ஷெல் ஹேர் என பெயர் சூட்டி இதற்கென ஒரு இணையதளத்தை உருவாக்கினார். இந்த இணையதளத்தில் பல்வேறு ஆர்டர்களை பெற்று இவர் ஆண்டுக்கு 1.2 கோடி வருவாய் ஈட்டுகிறார். ஷார்க் டேங்க் இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்று தனது நிறுவனம் குறித்து நடுவர்களிடம் எடுத்துரைத்து கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், ரூ.10 கோடி முதலீடு தேவைப்படுவதாக கூறினார்.
மேலும் தனது நிறுவனத்தில் மூன்று சதவிகிதம் ஈக்விட்டி பங்குகளை தருவதாக கூறியுள்ளார் . நடுவர் அமன் குப்தா இதனை ஏற்று அவரது நிறுவனத்தில் முதலீடு செய்ய முன் வந்துள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications