விளையாட்டாக துவங்கப்பட்ட ஒரு கிரிப்டோகரன்சி என்றால் அது ஷிபா இனு, துவக்கத்தில் எலான் மஸ்க் முதல் பல முன்னணி முதலீட்டாளர்கள் இதைப் பெரிய அளவில் பாராட்டிய காரணத்தால் உலகமும் முழுவதும் பிரபலமானது. இதன் எதிரொலியாக இன்று வெறும் 9 மாத காலத்தில் 8,00,000 சதவீதம் உயர்ந்துள்ளது.
நீங்கள் படித்தது சரி தான்.. 1000 ரூபாய் முதலீடு செய்திருந்தால் இன்று 80 லட்சம் ரூபாய்.
ஷிபா இனு காயின்
ஷிபா இனு காயின் விளையாட்டுக்காக மிகவும் குறைந்த விலையில் அதிகப்படியான காயின்களை உருவாக்கப்பட்டுப் புழக்கத்திற்கு வந்தது. ஆனால் பல கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளத்தில் இது சேர்க்கப்படவில்லை, கடந்த ஒரு வாரத்தில் உலகின் பல முன்னணி கிரிப்டோ வர்த்தகத் தளத்தில் ஷிபா இனு காயின் வர்த்தகத்திற்காகச் சேர்க்கப்பட்டது.
பசியில் இருக்கும் சிங்கம்
ஏற்கனவே அதிகளவிலான சப்ளையில் இருக்கும் ஷிபா இனு காயின் முதலீடு செய்ய அள் இல்லாமல் இருந்த வேளையில் இந்த இணைப்பு, பசியில் இருக்கும் சிங்கத்திற்குக் கொழு கொழுவென மான் கிடைத்தது போல் முதலீட்டைக் கொட்டி தீர்த்தனர்.
8,00,000 சதவீதம் உயர்வு
இதன் விளைவு தான் இந்த 8,00,000 சதவீதம் உயர்வு. 2021 பிப்ரவரி மாத துவக்கத்தில் ஒரு ஷிபா இனு காயின் 0.00000001 டாலர் மட்டுமே, இன்று 0.00008 டாலர் வரையில் உயர்ந்துள்ளது, அதிகப்படியாக 0.000089 டாலர். இன்னுமமும் 1 டாலர் கூட அடையாக ஷிபா இனு காயின் மொத்த சந்தை மதிப்பு 44 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
சந்தை புழக்கம்
கிரிப்டோ சந்தையில் தற்போது 58,97,39,00,81,35,977 ஷிபா இனு காயின் புழக்கத்தில் உள்ளது. அதிகப்படியான புழக்கம் மட்டும் தான் காரணமா என்றால் நிச்சயம் இல்லை. ஷிபா இனு தற்போது நவ் பேமெண்ட்ஸ் வாயிலாகப் பேமெண்ட் செய்யத் துவங்கப்பட்டு உள்ளது.
NFT மற்றும் ETF
இதுமட்டும் அல்லாமல் NFT மற்றும் ETF அறிமுகம் செய்யப்பட்டுப் புதிய வர்த்தகத்திற்கும் முதலீட்டுக்கும் வழிவகுக்கப்பட்டு ஷிபா இனு-வின் பயன்பாட்டு அளவு பெரிய அளவில் விரிவடைந்துள்ளது. இப்போது முதலீடு செய்தாலும் ஏகப்பட்ட லாபம் கிடைக்கும். இதேபோல் தடாலடியாகவும் சரியவும் வாய்ப்பு உள்ளது எனவே முதலீடு செய்யும் முன் உஷாராக முதலீடு செய்யுங்கள்.
பிட்காயின்
ஷிபா இனு உயர்வின் மூலம் இன்று பல முன்னணி கிரிப்டோகரன்சிகள் பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இன்று ஒரு பிட்காயின் விலை 3.42 சதவீதம் அதிகரித்து 61,131.40 டாலரை எட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications