கிரிப்டோகரன்சி வர்த்தகத்தையும் முதலீட்டையும் தொடர்ந்து ஆதரித்து வரும் டெஸ்லா குழுமத்தின் தலைவரான எலான் மஸ்க் வார்த்தைகளையும், ட்வீட்டுகளையும் நம்பி பல கோடி பேர் கிரிப்டோகரன்சி சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு எலான் மஸ்க் தலைமை வகிக்கும் டெஸ்லா பிட்காயின் பேமெண்ட் ஆக ஏற்பதாக அறிவித்த அடுத்த சில வாரத்தில் அதன் முடிவில் இருந்து பின்வாங்கியது. இதேபோல் டோஜ்காயின்-க்குத் தனிப்பட்ட முறையில் ஆதரவு தெரிவித்து அதிகளவில் முதலீடு செய்த எலான் மஸ்க், சீன அரசின் உத்தரவால் பிட்காயின், டோஜ்காயின் சரிவைச் சந்தித்தது.
இந்தச் சூழ்நிலையில் புதிதாக ஒரு கிரிப்டோகரன்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் எலான் மஸ்க். இதனால் மொத்த கிரிப்டோசந்தையும் குழப்பத்திலும், தடுமாற்றம் அடைந்துள்ளது.
எலான் மஸ் கிரிப்டோ
எலான் மஸ்க்-ஐ நம்புவோர் கோடிக் கணக்கில் இருக்கும் நிலையில், கிரிப்டோகரன்சி குறித்து இவர் செய்யும் ஒவ்வொரு ட்வீட்-ம் முதலீட்டுச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையில் எலான் மஸ்க் பிட்காயின், டோஜ்காயின் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது ஷிபா இனு என்னும் புதிய கிரிப்டோ-வை ஆதரித்துள்ளார்.
எலான் மஸ்க் டிவிட்டர்
சமீபத்தில் எலான் மஸ்க் தனது டிவிட்டரில் "My Shiba Inu will be named Floki" என ட்வீட் செய்தார். அதாவது தான் முதலீடு செய்து கைப்பற்றியுள்ள ஷிபா இனு கிரிப்டோகாயினுக்கு ஃபோல்கி எனப் பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த ட்வீட் வெளியான உடனே ஷிபா இனு மதிப்பு தாறுமாறாக உயர்ந்துள்ளது.
ஷிபா இனு கிரிப்டோ
சமீபத்தில் டோஜ்காயின் 6 வார உயர்வை எட்டிய நிலையில் எலான் மஸ்க் ஷிபா இனு கிரிப்டோவை ஆதரித்ததன் மூலம் இதன் மதிப்பு 16 சதவீதம் அதிகரித்து $0.00000790 என்ற உச்சத்தை அடைந்தது. அதன் பின்பு கணிசமாகச் சரிவடைந்து $0.000007393 அளவீட்டில் உள்ளது.
இதற்கிடையில் டோஜ்காயின் சரிவைச் சந்தித்துள்ளது.
ட்விட்டர் பதிவுகள்
இந்நிலையில் ட்விட்டர் தளத்தில் பிட்காயின் ஆதிக்கத்தைக் குறைக்க டோஜ்காயின் வந்த நிலையில், தற்போது டோஜ்காயினைத் தீர்த்துக்கட்ட வந்துள்ளது தான் ஷிபா இனு என்றும் கூறுகின்றனர். இதுமட்டும் அல்லாமல் பல எலான் மஸ்க்-ஐ திட்டி தீர்த்தும், இவருடைய பேச்சைக் கேட்க கூடாது என்றும் தெரிவித்து வருகின்றனர்.
28வது மதிப்புதக்க கிரிப்டோகரன்சி
ஷிபா இனு-வின் தடாலடி வளர்ச்சி மூலம் 28வது மதிப்புதக்க கிரிப்டோகரன்சியாக உயர்ந்துள்ளது. டோஜ்காயின் போலவே மிகவும் குறைந்த மதிப்புடைய ஷிபா இனு விரைவில் டோஜ்காயினுக்குப் போட்டியாக உருவெடுக்கும் எனக் கருதப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications