சென்னை: அன்றாட வாழ்வின் அத்தியாவசிய பொருள்களில் ஒன்றாக ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்ட இன்றைய காலகட்டத்தில், சைபர் தாக்குதல்களின் அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது. நமது தனிப்பட்ட தகவல்கள், முகவரி விவரங்கள் போன்றவை ஹேக்கர்களால் திருடப்படும் அபாயம் இருப்பதால், நம் ஸ்மார்ட்போன்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். இந்தக் கட்டுரையில், ஸ்மார்ட்போன் பயனர்கள் ஹேக்கர்களிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள செய்ய வேண்டிய 7 முக்கியமான விஷயங்களை நேஷனல் செக்யூரிட்டி ஏஜென்சி (NSA) வழங்கியுள்ளது. அவற்றை இந்தப் பதிவில் பார்ப்போம்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மோசடி காரணமாக ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்கள் தங்களது சொந்த தகவல்கள் மட்டும் அல்லாமல் அதிக அளவிலான தொகையையும் இழந்து வருகின்றனர். இது தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேஷனல் செக்யூரிட்டி ஏஜென்சி 7 பாதுகாப்பு வழிகளை வழங்கி உள்ளது.

ஏதாவது ஒரு சின்ன ட்ரிக்கை வைத்து இது போன்ற சைபர் கிரிமினல்கள் உங்கள் ஸ்மார்ட்போன்களின் தகவல்களைத் திருடுகின்றனர். எனவே, பயனர்கள் தங்களது சாதனங்களை புதுப்பித்து வைத்திருப்பதுடன், பொது வைஃபை நெட்வொர்க்குகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும், ஹேக்கர்களைத் தடுக்க சில நெறிமுறைகளைப் பின்பற்றவும் வலியுறுத்தப்படுகின்றனர்.
சாப்ட்வேர் அப்டேட்களை செய்யுங்கள்(Update Software): ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அவ்வப்போது சாப்ட்வேர் அப்டேட்களின் புதுப்பிப்புகளை வெளியிடுகின்றன. இந்த புதுப்பிப்புகள் பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்வதற்காக வழங்கப்படுகின்றன. எனவே, உங்கள் ஸ்மார்ட்போன் சாப்ட்வேர் அப்டேட்களை புதுப்பித்துக் கொள்வது அவசியம்.
அங்கீகரிக்கப்பட்ட ஆப்களைப் பதிவிறக்குங்கள் (Download Apps Only from Official Stores): அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர்களில் இருந்து மட்டுமே உங்களுக்கு தேவைப்படும் ஆப்-களை டவுன்லோட் செய்ய வேண்டும். மற்ற மூன்றாம் தரப்பு இணையதளங்கள் மூலம் ஏதேனும் ஆப்-ளை டவுன்லோட் செய்வதால், தீங்கிழைக்கும் வைரஸ் உங்கள் ஃபோனில் டவுன்லோட் ஆவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர்களான கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோர்களில் மட்டுமே டவுன்லோட் செய்யவும்.
பொது Wi-Fi இணைப்புகளைப் பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள் (Public Wi-Fi): பொது Wi-Fi நெட்ஒர்க்குகள் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதில்லை. இதனால், ஹேக்கர்கள் உங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி, அடையாள மற்றும் நிதி தகவல்களை திருட அதிக வாய்ப்பு உள்ளது. மோசடி செய்பவர்கள் "Cafe1" போன்ற உண்மையான Wi-Fi பெயரை ஒத்த "Cafe01" போன்ற போலி Wi-Fi பெயரை உருவாக்கி, மக்களை தவறாக அதைப் பயன்படுத்த தூண்டுகிறார்கள்.
இவ்வாறு பயனர்கள் இணைந்த பிறகு, ஹேக்கர்கள் ஆன்லைனில் நீங்கள் டைப் செய்யும் எந்த தகவலையும் திருட "online victim profiling" என்ற முறையைப் பயன்படுத்தலாம். மேலும், நீங்கள் Wi-Fi நெட்ஒர்க்கில் இருந்து துண்டித்த பிறகும் கூட, உங்கள் ஃபோனின் டேட்டாக்களை தொடர்ந்து திருடுவதற்கான மென்பொருளை (malware) உங்கள் சாதனத்தில் இன்ஸ்டால் செய்யலாம். 2023 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, கணக்கெடுக்கப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர் விமான நிலையங்கள், ஹோட்டல்கள் அல்லது உணவகங்கள் போன்ற பொது இடங்களில் பொது Wi-Fi ஐப் பயன்படுத்தும் போது தங்கள் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
என்கிரிப்டட் ஆப்-களை பயன்படுத்துங்கள் (Use Encrypted Apps): என்கிரிப்ஷன் என்பது உங்களுடைய வாய்ஸ் நோட்கள், டெக்ஸ்டுகள், மற்றும் இதர டேட்டாக்களை குறியீடுகளாக மாற்றும் முறையாகும். இதனால் ஹாக்கர்களுக்கு உங்களுடைய டேட்டாக்களை திருடுவது கடினமாக இருக்கலாம். பிரபலமான ஆப்களான வாட்சப் மற்றும் டெலிகிராம் ஆகியவை இந்த முறையைப் பயன்படுத்துகின்றன. இதனால் ஹேக்கர்கள், உங்கள் டேட்டாவை திருடும் அபாயம் குறைவதோடு, உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும். ஆனால் 2019ஆம் ஆண்டு வாட்ஸ்அப் "Zero Click" தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் நாம் எந்தவித ஆப்களையும் 100 % பாதுகாப்பானவை என்று கூற முடியாது. நாம் பார்த்து பயன்படுத்துவதில் தான் இருக்கிறது.
தேவையற்ற லிங்குகள் மற்றும் அட்டாச்மென்ட்களை கிளிக் செய்யாமல் இருங்கள் (Avoid Clicking on Suspicious Links and Attachments): உங்களுக்குத் தெரியாத நம்பர்களில் இருந்து வரும் SMS அல்லது மெயில்-இல் உள்ள லிங்க்குகளை கிளிக் செய்வதைத் தவிர்க்கவும்.
வாரத்திற்கு ஒரு முறை உங்கள் ஃபோனை ரீபூட் செய்யுங்கள் (Reboot your device every week): zero-click தாக்குதல்கள் மற்றும் ஸ்பியர்-ஃபிஷிங் மோசடிகளைத் தடுக்க, வாரத்திற்கு ஒரு முறை உங்கள் ஸ்மார்ட்போனை ரீபூட் செய்யுங்கள்.
பயனர்கள் தங்கள் ஃபோனை ரீபூட் செய்யாவிட்டால், திறந்திருக்கும் இணையதள முகவரிகளை ஹேக்கர்கள் பயன்படுத்தக் கூடும். இதனால் மால்வேர் (malware) எனப்படும் தீங்கிழைக்கும் மென்பொருளை உங்கள் சாதனத்தில் இன்ஸ்டால் செய்து விடுவார்கள்.
2015 ஆம் ஆண்டு பீவ் ஆராய்ச்சி நிறுவனம் (Pew Research) நடத்திய ஆய்வில், கிட்டத்தட்ட பாதி ஸ்மார்ட்போன் பயனர்கள், தங்கள் செல்போனை ரீபூட் செய்வதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
உங்கள் மைக்குகள் மற்றும் கேமராக்களை மூடும் கவர்களைப் பயன்படுத்துங்கள்: என்றாவது நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் பொருள்கள், உங்களுக்கு இணையதளத்தில் காண்பித்து உள்ளதா.. நீங்கள் பேசுவது அனைத்தையும் உங்கள் போன் கேட்டுக் கொண்டிருக்கிறது. இது சைபர் தாக்குதல்களுக்கும் பயன்படுத்தப்படலாம். எனவே, உங்கள் கேமரா மற்றும் மைக்குகளை மூடும் கவர்களைப் பயன்படுத்துங்கள்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications