பெரும் கோடீஸ்வரர்கள் மிகவும் எளிமையாக வாழ்வது எல்லாம் அந்த காலம் என பலரும் கேட்டு இருப்போம், இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு எவ்வளவு ஜாலியாக இருக்க முடியுமோ, அவ்வளவு ஜாலியாக இருக்க வேண்டும் என்பது இன்றைய இளைய தலைமுறையின் ஐடியாவாக உள்ளது.
இந்த நிலையில் இன்றும் பலரும் முட்டி மோதும் பங்குச்சந்தையில் முதலீடு செய்து சுமார் 100 கோடிக்கும் அதிகமாக முதலீட்டு மதிப்பையும், டிவிடென்ட் மூலமாகவே பல லட்சங்களை அள்ளும் ஒரு முதியவர் சட்டை கூட போடாமல் ஜாலியா பேசுகிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும் வாயடைத்து போனார்கள் என்பது தான் உண்மை.

டிவிட்டரில் ராஜீவ் மேத்தா என்பவர் பதிவிட்ட வீடியோவில் வரும் முதியவர் தான் இன்று பங்கு முதலீட்டு சந்தையில் டிரெண்டிங் ஆக உள்ளார். நீண்ட கால முதலீடு எந்த அளவுக்கு பலன் அளிக்கும் என்பதை 70mm ஸ்கிரீனில் டால்பி அட்மாஸ் எஃபக்ட் உடன் காட்டி வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த வீடியோவில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பல கோடிக்கு அதிபதியான இந்த முதியவர் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்கிறார் என்பது தான்.
ட்விட்டரில் ராஜீவ் மேத்தா பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், முதியவர் ரூ.80 கோடி மதிப்புள்ள எல் அண்ட் டி, ரூ.21 கோடி மதிப்புள்ள அல்ட்ராடெக் சிமென்ட் பங்குகள், ரூ.1 கோடி மதிப்பிலான கர்நாடக வங்கியின் பங்குகளை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனாலும் இன்னும் எளிமையான வாழ்க்கை வாழ்கிறார் எனராஜீவ் மேத்தா பேசுகிறார்.
இந்த வீடியோ ட்விட்டரில் இதுவரை சுமார் 12 லட்சம் பேர் பார்த்துள்ளனர், சுமார் 1239 பேர் ரீடிவீட் செய்துள்ளனர், 271 பேர் கமெண்ட் செய்துள்ளனர்.
இந்த பதிவிற்கு பதில் அளித்த கேபிடல் மைண்ட் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தீபக் ஷெனாய், இந்த வீடியோவில் வருவது போல் 27,000 எல்&டி பங்குகளின் மொத்த மதிப்பு ரூ.8 கோடி என்றும், அல்ட்ராடெக் பங்குகளின் மதிப்பு ரூ.3.2 கோடி என்றும், கர்நாடகா வங்கியின் பங்குகள் ரூ.10 லட்சம் மதிப்பு இருக்கும் என விளக்கியுள்ளார்.

ஆக இந்த முதியவரின் மொத்த முதலீட்டு மதிப்பு 102 கோடி ரூபாய் இல்லை, 11.3 கோடி ரூபாய் மட்டுமே என்பது தெளிவானது. ஆனாலும் ராஜீவ் மேத்தா இந்த பதிவை இன்னும் திருத்தவில்லை. இந்த நிலையில் டிவிட்டர் வாசி ஒருவர் ரூ.3.5 கோடி பங்குகளில் இருந்து ரூ.6 லட்சம் ஈவுத்தொகை பெறலாம் என்று கூறியுள்ளார்.
இதேபோல் மற்றொரு டிவிட்டர்வாசி பணம் சரியாகப் பயன்படுத்தப்படாவிட்டால் மதிப்பற்றதாகிவிடும் என்று கூறியுள்ளார். மொத்தமாக பணத்தை பங்குகளில் முடக்கிக் கொண்டால் அப்புறம் என்ன பிரயோஜனம்? பணம் எரிபொருள் போன்றது, டேங்கில் நிறைய வைத்திருப்பதால் என்ன பயன்? எளிமையாக வாழ்வது ஒரு விஷயம் ஆனால் பணத்தை மொத்தமாக செலவழிப்பது வேறு. பலர் அதிகப்படியாக சேர்த்த பணத்தை பிற விஷயத்தில் மாற்றுவதில் அதிகப்படியான சவால்களை எதிர்கொள்கின்றனர் என்று கூறினார்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications