இணையவழி குற்றம் அல்லது சைபர் குற்றம் என்பது, இணையம் அல்லது டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் சட்டவிரோதச் செயல்களைக் குறிக்கிறது. இணையவழி குற்றங்களில், கணினி ஒரு இலக்காகவோ அல்லது குற்றச்செயலை செய்யவோ பயன்படுத்தப்படுகிறது. அதிவேகமாக இணைய பயன்பாட்டால் உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் கையடக்கமாக பயன்படுத்தும் செல்போன் மூலம் உடனுக்குடன் அறிந்து கொள்ளும் அளவுக்கு அறிவியில் வளர்ச்சி அடைந்துள்ளதால், இது இணையவழி குற்றங்கள் அதிகரிப்பதற்கும் வழிவகுத்துள்ளது.
அந்த வகையில், தொலைபேசியில் வந்த இணைப்பை கிளிக் செய்ததால் ரூ.2.19 லட்சம் இழந்த அதிர்ச்சி சம்பவம் இணையத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இணைய வழி குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், புதுப்புது உத்திகளை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடும் குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.

சமூகத்தில் கணினிகளின் பயன்பாடு அதிகரித்து வருவதால் சைபர் கிரைம் குற்றங்கள் ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சைபர் குற்றங்களான ஹேக்கிங் அதாவது அதிநவீன தீங்கிழைக்கும் மென்பொருள் தாக்குதல்கள், இணைய நிதி மோசடிகள், KYC மோசடி, கிரிப்டோகரன்சி மோசடிகள், டிஜிட்டல் கைது போன்றவை மிகவும் அதிகமாக நிகழ்கின்றன.
இந்தநிலையில்,மங்களூருவை சேர்ந்த 38 வயது வசுந்தா கோபாலகிருஷ்ண ஷெணாய் என்ற பெண், சைபர் மோசடியில் சிக்கி ரூ.2.19 லட்சம் இழந்தார். இது கடந்த காலங்களில் பார்க்கப்பட்ட போலி பார்சல், டிஜிட்டல் கைது அல்லது வோர்க் ஃப்ரம் ஹோம் மோசடிகளுக்கு மாறுபட்டதாக அமைந்தது. வசுந்தா ஒரு வங்கியின் மேலாளராக பணியாற்றி வந்தார். மோசடி சம்பவம் துவங்கிய விதம், அவருக்கு "interviewshine.co.in" என்ற இணையதளத்துக்கான இணைப்புடன் கூடிய ஒரு எஸ்எம்எஸ் கிடைத்தது. இது உண்மையான வேலை வாய்ப்பு விளம்பரம் என்று நம்பி அவர் அந்த இணைப்பை கிளிக் செய்தார்.
இதைத் தொடர்ந்து, அவரது ஜிமெயில் மற்றும் அமேசான் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது. இந்தப் பக்கங்களில் சேமிக்கப்பட்டிருந்த முக்கிய தகவல்கள், க்ரெடிட் கார்டு விபரங்கள் உள்ளிட்டவை மோசடிகளால் அணுகப்பட்டது.மூன்று மணி நேரத்திற்குள் பல சோதனைப் பரிமாற்றங்கள் மூலம் ரூ.2,19,500 வசுந்தாவின் வங்கிக் கணக்குகள் மற்றும் அமேசான் கார்டுகளிலிருந்து திருடப்பட்டது.
திடீரென ஏற்பட்ட இழப்பை உணர்ந்த வசுந்தா உடனடியாக காவல்துறையில் புகார் செய்தார். மத்திய சைபர் குற்றப்பிரிவில் (CEN Station) 66(D) ஐடி சட்டம் மற்றும் BNS Act 318(2), 318(4) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து சைபர் பாதுகாப்பின் அவசியத்தை மேலும் வலியுறுத்துகிறது. சர்வசாதாரணமாக தோன்றும் இணையதள இணைப்புகள் மற்றும் விளம்பர எஸ்எம்எஸ்களால் (SMS) பயனர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.வசுந்தா உள்ளிட்ட பலர் மீது ஏற்படும் இத்தகைய மோசடிகளை கட்டுப்படுத்த, மக்களும் தங்களது மொபைல் பாதுகாப்பு முறைகளை உறுதி செய்துகொள்வதோடு, விரைவாக புகார் செய்வது முக்கியம் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications