உலக அளவில் பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களை பணிநீக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன . குறிப்பாக அமேசான் நிறுவனம் அண்மையில் மிகப்பெரிய ஒரு பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது .
அமேசான் நிறுவனத்தின் பணி நீக்க நடவடிக்கையில் இந்தியாவில் வேலை செய்யக்கூடிய அமேசான் ஊழியர்களும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். ஏற்கனவே டிசிஎஸ் உள்ளிட்ட பெரு நிறுவனங்களின் பணி நீக்க நடவடிக்கை ஒரு புறம் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடிய சூழலில் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களும் அடுத்தடுத்து பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு அதனை நடைமுறைப்படுத்துவது ஊழியர்களை இன்னும் அதிர்வடைய செய்திருக்கிறது.

பல்வேறு நிறுவன ஊழியர்களும் இந்த பணிநீக்க நடவடிக்கை எந்த அளவுக்கு கொடூரமான முறையில் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது என்பது குறித்து தொடர்ச்சியாக ரெடிட் தளத்தில் பதிவு செய்த வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக அமேசான் நிறுவனத்தில் வேலை செய்து வரக்கூடிய ஊழியர்கள் பலரும் சமூக வலைதள பக்கங்களில் இந்த பணி நீக்கம் எப்படி பலரையும் பாதித்திருக்கிறது என்பது குறித்து விரிவாக பதிவு செய்து வருகின்றனர்.

ரெடிட் பக்கத்தில் ஒரு நபர் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவு கண்ணீரை வரவழைக்கும் வகையில் இருக்கிறது. அதில் என்னுடைய நண்பர் அமேசானின்ல் வேலை செய்கிறார் அவர் கூறியது கேட்டு நான் அதிர்ந்து விட்டேன் என தெரிவித்திருக்கிறார் . அவர் கண் முன்னாலேயே ஒரு மொத்த டீமே வேலையிலிருந்து நீக்கப்பட்டு இருக்கின்றனர். மேலாளர் உட்பட அவருக்கு கீழ் பணியாற்றி அனைவருமே ஒரே வினாடியில் வேலையில் இருந்து அனுப்பப்பட்டு இருக்கின்றனர் என கூறியுள்ளார்.
வர்கள் அனைவரும் டீமாக அலுவலகத்தை விட்டு சோகத்துடனும் கண்ணீருடனும் வெளியேறியது பார்ப்பதற்கு அதிர்ச்சியாக இருந்ததாக என தெரிவித்தாராம. அதாவது பணி நீக்கம் செய்யப்பட்ட அறிவிப்பு வந்த அடுத்த நொடியே அவர்களின் லேப்டாப் உள்ளிட்ட அனைத்தும் ஒப்படைத்து விட்டு அனைவரும் வெளியேறி விட்டதாக கூறுகிறார்.
இந்த பணி நீக்கம் என்பது மிகப்பெரிய அளவில் இருக்கிறது மொத்த டீமும் வெளியேற்றப்படுகிறது டெஸ்டிங் டீமில் அவர்களுக்கு என்ன நடக்கிறது என புரிந்து கொள்ள கூட கால அவகாசம் கிடையாது என்கிறார். பணிநீக்கம் குறித்த ஈமெயில் வந்த அடுத்த நொடியே அவர்களின் லேப்டாப் அனைத்தும் உடனடியாக அவர்களிடம் இருந்து கைப்பற்றப்படுகின்றன என கூறியுள்ளார். பலரும் இதே போல தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை பதிவிட்டு வருகின்றனர். அமேசான் நிறுவனம் செவ்வாய்க்கிழமை அன்று தங்களுடைய ஊழியர்களில் 14,000 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
More From GoodReturns

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications