உலகின் முன்னணி ஃபேஷன் பிராண்டுகளாக கருதப்படும் "Dior" மற்றும் "Giorgia Armani" போன்ற பிராண்டுகளின் ஹேண்ட்பேக்குகள் பார்ப்பதற்கு ஸ்டைலாக, மக்களிடையே பிரபலமாக இருந்தாலும், அவற்றின் விலை பலருக்கும் அதிகமானதாகத் தோன்றலாம். ஆனால், இந்த பிராண்டுகள் தங்கள் ஹேண்ட்பேக்குகளை எவ்வாறு உற்பத்தி செய்கின்றன, எவ்வாறு லாபம் ஈட்டுகின்றன என்பது பற்றிய தகவல்கள் பெரும்பாலும் மறைக்கப்பட்டே இருந்து வருகின்றன. இன்று, பிரபல ஃபேஷன் நிறுவனங்களின் லாப ரகசியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
1946-ஆம் ஆண்டில் கிறிஸ்டியன் டியரால் நிறுவப்பட்ட "டியோர்" பிராண்ட், அதன் உயர்தர ஃபேஷன், ஆக்சஸரீஸ், வாசனை திரவியங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்களுக்காகக் கொண்டாடப்படும் ஒரு புகழ்பெற்ற பிரெஞ்சு ஆடம்பர ஃபேஷன் ஹவுஸ் ஆகும். அதன் ஹேண்ட்பேக்குகளை உலகம் முழுவதும் உள்ள பல பிரபலங்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இத்தாலிய வழக்குரைஞர்களின் சமீபத்திய விசாரணையில், டியோர் மற்றும் மற்றொரு இத்தாலிய ஆடம்பர பொருட்களை விற்பனை செய்யும் ப்ராண்டான ஜியோர்ஜியா அர்மானி பல்லாயிரக்கணக்கான டாலர்களுக்கு விற்பனை செய்யப்படும் இந்த ஹேண்ட்பேக்குகளை உற்பத்தி செய்ய மிகக் குறைந்த தொகையையே செலவிடுகின்றன என்பது தெரியவந்துள்ளது.
தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) வெளியிட்ட அறிக்கையின்படி, Dior தனது விற்பனையாளர்களுக்கு ஒரு ஹேண்ட்பேக்குக்கு வெறும் 53 யூரோ மட்டுமே செலவு செய்து உற்பத்தி செய்கிறது. இது இந்தியா மதிப்புக்கு ரூ. 4,778 மட்டுமே. பின்னர் அதை கடைகளில் 2,600 யூரோ என்ற விலையில் விற்பனை செய்கிறது. இது இந்திய மதிப்புக்கு ரூ.2.34 லட்சம்.
அதே போல Armani நிறுவனம் தனது ஹேண்ட்பேக்குகளை விற்பனையாளரிடமிருந்து 93 யூரோ என்ற விலையில் வாங்குகிறது. இது இந்திய ரூபாய்க்கு ரூ.8,385. பின்னர் தங்கள் பிராண்டு ஹேண்ட்பேக்குகளை 250 யூரோ என்ற விலையில் மறுவிற்பனை செய்கிறது. இந்திய மதிப்பில் ரூ.22,540. கடைசியில் கடைகளில் சுமார் 1,800 யூரோ என்ற விலையில் விற்பனை செய்கிறது. இது இந்திய ரூபாயில் ரூ.1.62 லட்சம் என்று WSJ தெரிவித்துள்ளது.
இந்த செலவுகளில் மூலப்பொருட்களுக்கான செலவுகள் மற்றும் வடிவமைப்பு, விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற கூடுதல் செலவுகள் அடங்காது என்றும் WSJ அறிக்கை தெரிவித்துள்ளது. இத்தாலிய வழக்குரைஞர்கள் தங்கள் பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனங்களை மேற்பார்வை செய்யத் தவறியதற்காக இந்த லக்ஸரி பிராண்டுகளை சாடியுள்ளனர்.
இருப்பினும், இந்த விசாரணை தொடர்பாக இந்த நிறுவனங்கள் எந்தக் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ள வேண்டியதில்லை. Dior நிறுவனம் இதுவரை வெளியான அறிக்கை குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆனால், Armani நிறுவனம் தவறான பயன்பாடுகளைக் குறைக்க கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதிகாரிகளுடன் முழு ஒத்துழைப்புடன் செயல்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பிரபல ஃபேஷன் நிறுவனங்களின் லாப விகிதம் மிக அதிகமாக இருப்பதற்கான காரணங்கள் இப்போது தெளிவாகியுள்ளன. உயர்ந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் இந்த லக்ஸுரி பொருட்களின் தயாரிப்பு செலவு மிகக் குறைவு என்பதே அதிர்ச்சி அளிக்கும் உண்மை. இதனை விட, மூலப்பொருள், வடிவமைப்பு போன்ற செலவுகள் கூட இந்தக் கணக்கில் இல்லை. மார்க்கெட்டிங் செய்வது தான் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்று பலரும் கூறி வருகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications