இப்போதெல்லாம் மின்சார கட்டணத்தை பார்க்கும் போதே படபடப்பு ஏற்பட்டு விடுகிறது. அதுவும் கோடை மாதமாக இருந்தால், சொல்லவே வேண்டாம். ஃபேன் மற்றும் ஏசி இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. இதன் விளைவாக கோடை மாதங்களில் கரண்ட் பில் வழக்கத்தை விட சற்று அதிக அளவில் இருக்கும். சமீப காலமாக சோசியல் மீடியா தளங்களிலும் பலர் தங்களுடைய கரண்ட் பில் ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்து வருகின்றனர். இதனால் பலர் மெழுகுவர்த்திக்கு மாறலாமா? என்ற யோசனையில் இருக்கலாம். கவலைப்படத் தேவையில்லை. நீங்கள் கீழ்காணும் குறிப்புகளை பின்பற்றினாலே போதும் உங்களுடைய கரண்ட் பில்லை கணிசமாக குறைக்க முடியும்.
LED விளக்குகளுக்கு மாறுங்கள்: மின்சார கட்டணத்தில் மின் விளக்குகள் ஒரு பெரும் பங்கு வகிக்கின்றன. LED விளக்குகளுக்கு மாறுவது, உங்கள் மின்சார கட்டணத்தில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். LED விளக்குகள் 75% வரை குறைவான மின்சாரத்தை பயன்படுத்துகின்றன. மேலும் பாரம்பரிய விளக்குகளை விட மிக நீண்ட காலம் நீடிக்கும். கூடுதலாக, பகல் நேரத்தில் இயற்கை வெளிச்சத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பயன்பாட்டில் இல்லாத போது எப்போதும் விளக்குகளை ஆஃப் செய்து விடுங்கள்.

ஆற்றல் திறன் மிக்க எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு மாறுதல்: புதிய சாதனங்கள் வாங்கும் போது "எனர்ஜி ஸ்டார்" லேபில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வகையான தயாரிப்புகள் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏஜென்சியால் நிர்ணயிக்கப்பட்டு உருவாக்கப்படுகின்றன. இதனை பயன்படுத்தும் போது மின்சார கட்டணத்தை வெகுவாக குறைக்க முடியும். உதாரணமாக 5 ஸ்டார் ஏசி-கள் 2 ஸ்டார் ஏசி-களை விட அதிக செயல்திறனை வெளிப்படுத்தும். ஆனால் அதற்கான மின்சார கட்டணம் குறைவாகவே இருக்கும்.
ஸ்விட்ச் ஆஃப் செய்து வையுங்கள்: எந்த ஒரு சாதனங்களையும் பயன்படுத்தாமல் இருக்கும்போது ஆஃப் செய்து விடுங்கள். எப்படி நாம் இருக்கும் இடத்தில் பேனை ஆன் செய்து வைக்கிறோமோ.. அதேபோல அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் உடனே பேனை ஆஃப் செய்ய வேண்டும். இது போன்ற சிறு விஷயங்களை பயன்படுத்தினாலேயே, மின்சார கட்டணங்களை வெகுவாக குறைக்க முடியும். பலர் மொபைலின் சார்ஜர் ஸ்விட்சை ஆப் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டு மொபைலை மட்டும் எடுத்துக் கொள்கின்றனர். இதுபோன்ற சிறு விஷயங்களையும் கூர்ந்து கவனிப்பது உங்களுடைய மின்சார கட்டணத்தை குறைக்க உதவும்.
சோலார் பேனல்களை அமைத்தல்: சோலார் பேனல்களை நிறுவுவது காலப்போக்கில், உங்கள் மின் கட்டணத்தை குறைக்க உதவும். ஆரம்ப முதலீடு சற்று அதிகமாக இருந்தாலும், சோலார் பேனல்கள் உங்கள் வீட்டிற்கு தேவைப்படும் மின்சாரத்தை தானாகவே உருவாக்கும். இதன் மூலம் உங்களுக்கு கணிசமான சேமிப்பு ஏற்படும். மேலும் அரசு சார்பில் பல சோலார் பேனல்கள் அமைக்க வரி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளும் கிடைக்கிறது. இது நீண்ட காலத்திற்கு உங்கள் மின்சார கட்டணத்தை குறைக்க உதவும்.
சலவை பழக்கங்களை நடைமுறைப்படுத்துங்கள்: வாஷிங் மெஷின்களுக்கு பதிலாக கைகளால் துணி துவைப்பதன் மூலம் அதிலிருந்து செலவாகும் மின்சாரத்தை குறைக்க முடியும். அதேபோல வாஷிங் மெஷின் கொண்டு துணிகளை காய வைப்பதற்கு பதிலாக வெளியில் காய வைக்கும் பழக்கமும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications