ஸ்டார்ட்அப் உள்ளிட்ட டெக் நிறுவனங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகளவில் 4 லட்சத்து 25 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் 36 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
2023 ஆம் ஆண்டில் விடுமுறை நாட்களிலும், முன் அறிவிப்பு இல்லாமல் டெக் நிறுவனங்கள் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியது மட்டும் அல்லாமல் அதில் பலர் இன்றளவும் வேலைவாய்ப்பு இல்லாமல் பணியாற்றி வருவது பெரும் அதிர்ச்சி சோகமாக உள்ளது.

layoff.fyi நிறுவனத்தின் இணையதளம் டெக் துறையில் வேலை நீக்கம் பற்றி ஆய்வு செய்தது. இதில் 1,175 டெக் கம்பெனிகள் இந்த ஆண்டு 2 லட்சத்து 60 ஆயிரத்து 771 ஊழியர்களை உலகளவில் வேலையில் இருந்து நீக்கியுள்ளன.
பெரிய பெரிய டெக் நிறுவனங்களும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் ஏகப்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்தன. இந்த நடவடிக்கை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 2022 ஆம் ஆண்டில் 1061 டெக் நிறுவனங்கள் 1 லட்சத்து 64 ஆயிரத்து 769 ஊழியர்களை வேலையில் இருந்து தூக்கின.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சராசரியாக 582 ஊழியர்கள் தினமும் வேலையை இழந்தனர். இது ஒரு மணிநேரத்துக்கு 24 பேர் வேலை இழப்பதற்கு சமமமாகும். துறைகள் வாரியாகப் பார்த்தால் ரீடெய்ல்-டெக், கன்ஸ்யூமர்-டெக், ஃபின்-டெக் ஆகியவைதான் பெரும்பான்மை ஊழியர்களை வெளியேற்றியுள்ளன.
பேடிஎம் நிறுவனம் செலவுகளைக் குறைப்பதற்காக ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. சோசியல் மீடியா பிளாட்பார்மான ஷேர்சாட் தனது நிறுவனத்தில் இருந்து 15 சதவீத ஊழியர்களை வெளியேற்றியது.
கேம் ஸ்ட்ரீமிங் பிளாட்பார்மான Loco அதன் 36 சதவீத ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது. கூகுள் ஆதரவு பெற்ற எஜுடெக் பிளாட்பார்மான அட்டா247 300 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது. பைஜூஸ் 5000 ஊழியர்கள் வரை வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்தது. கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 10 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கியது. செப்டம்பரில் மட்டும் 400 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications