மும்பை: உலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலரும் கலந்து கொள்ளும் வகையில் அம்பானி குடும்பத்தின் திருமண விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.
ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு, தொழிலதிபர் வீரேன் மெர்ச்சென்ட் மற்றும் ஷைலா மெர்ச்சென்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சென்ட் திருமணம் இன்று துவங்கி 3 நாட்கள் மும்பையில் பிரம்மாண்டத்தின் உச்சத்தில் நடைபெறுகிறது.

இந்த திருமண விழாவில் இந்தியா மற்றும் உலகின் முன்னணி நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொள்கின்றனர். இது முகேஷ் அம்பானியின் அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கை உலகிற்கு காட்டும் வகையில் அமைந்துள்ளது.
உலகின் முன்னணி முதலீட்டாளர்களும் இந்த ஆனந்த் - ராதிகா திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளனர். இதோடு புகழ்பெற்ற கல்வியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், மருத்துவர்கள் என பல பிரபலங்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.
இப்படி ஆனந்த் - ராதிகா திருமணத்திற்கு வரும் கார்ப்ரேட் தலைவர்களின் லிஸ்ட்-ஐ நீங்களே பாருங்க ஆடிப்போயிருவீங்க.
- அமீன் நாசர், தலைவர் மற்றும் சிஇஓ, Aramco
- H. E. கல்தூன் அல் முபாரக், சிஇஓ மற்று்ம நிர்வாக இயக்குனர் - முபதாலா
- முர்ரே ஆச்சின்க்ளோஸ், சிஇஓ- bp
- ராபர்ட் டட்லி, முன்னாள் சிஇஓ - bp, Aramco நிர்வாக உறுப்பினர்
- மார்க் டக்கர், HSBC ஹோல்டிங்ஸ் பிஎல்சி - குழு தலைவர்
- பெர்னார்ட் லூனி, bp முன்னாள் சிஇஓ,
- சாந்தனு நாராயண், தலைமை நிர்வாக அதிகாரி, அடோப்
- மைக்கேல் கிரிம்ஸ், நிர்வாக இயக்குனர், மோர்கன் ஸ்டான்லி
- ஜெய் லீ, நிர்வாகத் தலைவர், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ்
- தில்ஹான் பிள்ளை, சிஇஓ, Temasek Holdings
- எம்மா வால்ம்ஸ்லி, சிஇஓ, GlaxoSmithKline
- டேவிட் கான்ஸ்டபிள், சிஇஓ, Fluor Corporation
- ஜிம் டீக், சிஇஓ, எண்டர்பிரைஸ் ஜிபி
- கியானி இன்ஃபான்டினோ, IOC உறுப்பினர், FIFA தலைவர்
- ஜுவான் அன்டோனியோ சமரன்ச், துணைத் தலைவர், ஐஓசி
- Ngozi Okonjo-Iweala, இயக்குநர் ஜெனரல்- WTO
- தினேஷ் பாலிவால், பார்ட்னர், KKR
- லிம் சோவ் கியாட், தலைமை நிர்வாக அதிகாரி, ஜிஐசி
- மைக்கேல் க்ளீன், மேனேஜிங் பார்ட்னர், எம்.க்ளீன் & கம்பெனி
- படர் முகமது அல்-சாத், இயக்குனர், KIA
- Yoshihiro Hyakutome, மூத்த நிர்வாக நிர்வாக அதிகாரி, SMBC
- கலீல் முகமது ஷெரீப் ஃபௌலாதி, துணைத் தலைவர், ADIA
- பீட்டர் டயமண்டிஸ், செயல் தலைவர், Singularity University
- ஜனவரி மகம்பா, வெளியுறவு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க ஒத்துழைப்பு
- ஜேம்ஸ் டெய்க்லெட், சிஇஓ, லாக்ஹீட் மார்ட்டின்
- எரிக் கேன்டர், துணைத் தலைவர், மொய்லிஸ் மற்றும் கம்பெனி
- என்ரிக் லோரெஸ், தலைவர் மற்றும் சிஇஓ, HP Inc.
- Borje Ekholm, தலைவர் மற்றும் சிஇஓ, எரிக்சன்
- வில்லியம் லின், நிர்வாக துணைத் தலைவர், bp
- Tommi Uitto, தலைவர், நோக்கியா மொபைல் நெட்வொர்க்ஸ்
- கிளாரா வு சாய், இணை நிறுவனர், ஜோ மற்றும் கிளாரா சாய் அறக்கட்டளை
- Pano Christou, சிஇஓ, Pret a Manger
- சர் மார்ட்டின் சோரெல், நிறுவனர், WPP
பிற பிரபலங்கள்:
- மைக் டைசன், அமெரிக்க தொழில்முறை குத்துச்சண்டை வீரர்
- ஜான் செனா, WWF வீரர், ஹாலிவுட் நடிகர்
- ஜீன்-கிளாட் வான் டாம், ஹாலிவுட் நடிகர்
- கெய்னன் வார்சமே (க'னான்), பாடகர், பாடலாசிரியர், ராப்பர்
- லூயிஸ் ரோட்ரிக்ஸ் (லூயிஸ் ஃபோன்சி), பாடகர்
- டிவைன் இகுபோர் (ரெமா), பாடகர், ராப்பர்
- கிம் கர்தாஷியன், மீடியா பிரபலம்
- க்ளோ கர்தாஷியன், மீடியா பிரபலம்
- ஜெய் ஷெட்டி, பாட்காஸ்டர், ஆசிரியர், பயிற்சியாளர்
- ஜெஃப் கூன்ஸ், கலைஞர்


Click it and Unblock the Notifications