டெல்லி: இந்தியாவின் உயரிய கல்வி நிறுவனமான ஐஐடியில் நடப்பு ஆண்டில் படிப்பை முடித்த சுமார் 7,000 மாணவர்கள் வேலை வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது.
ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு கேம்பஸ் இண்டர்வியூக்கள் மூலம் கண்டிப்பாக வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் அண்மையில் வெளியான ஆர்டிஐ தகவல் அதற்கு மாறாக அமைந்துள்ளது.

2023-24 ஆம் கல்வியாண்டில் பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ எனப்படும் ப்ளேஸ்மென்ட் பருவமானது கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இந்த நிலையில் ஐஐடியில் பட்டப்படிப்பை முடித்த சுமார் 7,000 மாணவர்கள் இதுவரை எந்த ஒரு வேலை வாய்ப்பையும் பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஐஐடி கான்பூரில் பயின்ற முன்னாள் மாணவர் ஆன தீரஜ் சிங் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில் இது வெளிவந்துள்ளது.
இந்தியாவில் உள்ள 23 ஐஐடிகளிலும் படிப்பை முடித்த மாணவர்கள் நடப்பாண்டில் வேலை வாய்ப்பு பெறுவது சவால் மிகுந்ததாக இருக்கிறது என தெரியவந்துள்ளது. ஐஐடி டெல்லியில் கல்வி பயின்ற மாணவர்கள் சுமார் 400 பேர் இதுவரை வேலை வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அதேபோல ஐஐடி பாம்பேயில் பயின்ற சுமார் 250 மாணவர்களுக்கு இதுவரை வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த சூழலில் ஐஐடி டெல்லி, தங்களிடம் பயின்று பெரிய நிறுவனங்களில் வேலை செய்து வரும் முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோர்களை தொடர்பு கொண்டு, தற்போது படிப்பை முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாம். ஐஐடி டெல்லியின் வேலைவாய்ப்பு சேவை அலுவலகம் தற்போது படிப்பை முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தர தேவையான உதவிகளை செய்யும்படி முன்னாள் மாணவர்களுக்கு தகவல்கள் அனுப்பி இருப்பது செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் நிறுவனமும் கடந்த இரண்டு மாதங்களாகவே தங்களது முன்னாள் மாணவர்களை தொடர்பு கொண்டு தற்போது படிப்பை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருமாறு கேட்டு வருவது தெரியவந்துள்ளது.
இந்த குழுமத்தின் துணை தலைவரான ராம்கோபால் ராவ் பல்வேறு காரணங்களால் நடப்பாண்டில் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு என்பது குறைந்திருப்பதாக கூறியுள்ளார். 20% முதல் 30% மாணவர்கள் வரை நடப்பாண்டில் வேலை வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார். சேட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு தளங்களும் இதற்கு ஒரு காரணம் என்ற கருத்தையும் ராம்கோபால் ராவ் முன் வைத்துள்ளார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தீரஜ் சிங் பெற்றுள்ள தகவல்கள் தற்போது கல்வி பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பல்வேறு சவால்கள் இருக்கின்றன என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் மொத்தம் உள்ள 23 ஐஐடி களில் சுமார் 7000 மாணவர்கள் இதுவரை கேம்பஸ் பிளேஸ்மென்ட்டில் வேலை வாய்ப்பு கிடைக்காமல் இருக்கின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை 3,400 ஆக இருந்துள்ளது. கேம்பஸ் இன்டர்வியூக்களில் கலந்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை 1.2 மடங்கு அதிகரித்துள்ளது, ஆனால் அவர்கள் வேலை வாய்ப்பு பெறுவது குறைந்துள்ளது என்பதே நடைமுறையில் இருக்கும் உண்மை என தீரஜ் சிங் கூறியுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications