இந்தியாவில் உள்ள பெரும்பாலான உணவகங்கள் பயன்படுத்தும் முக்கிய பில்லிங் மென்பொருளின் தரவுகளை வருமான வரித்துறை பெற்று, பெரும் அளவிலான வரி ஏய்ப்புகளை கண்டுபிடித்துள்ளது. இது தமிழகத்தின் உணவகத் தொழிலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 70,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு நடந்த வர்த்தகத்தை வருமான வரித்துறைக்கு அறிவிக்காமல் ஹோட்டல் உரிமையாளர்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தமிழகத்தில் உள்ள உணவகங்களும் ஈடுப்பட்டு உள்ளதால், உணவகங்கள் இனி கடுமையான சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வரி ஏய்ப்பு தொடர்பான இந்த தகவல், உணவக உரிமையாளர்களை எச்சரிக்கையுடன் இருக்கச் செய்துள்ளது.

பில்லிங் மென்பொருள் தரவுகளின் ஆய்வு
இந்தியாவில் 10 சதவீதத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் பயன்படுத்தும் ஒரு முக்கிய பில்லிங் மென்பொருளின் Back-end தரவுகளை வருமான வரித்துறை பெற்றுள்ளது. இதன் மூலம் நாட்டில் 1.7 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவகங்களின் தரவுகளை ஆராய்ந்துள்ளனர்.
பிரியாணி மோசடி
இந்தியா முழுவதும் பரவி இருந்த சுமார் ரூ.70,000 கோடி வரி ஏய்ப்பு மோசடி தான் "பிரியாணி டாக்ஸ் ஸ்காம்" என்று அழைக்கப்படுகிறது. வருமான வரித்துறை ஹைதராபாத்தில் உள்ள சில பிரபல பிரியாணி உணவகங்களில் நடந்த வழக்கமான சோதனையிலிருந்து இந்த விசாரணையை தொடங்கியது. பின்னர் இது நாடு முழுவதும் 1.7 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவக ஐடிகளை உள்ளடக்கிய பெரிய விசாரணையாக விரிந்தது.
இந்த மோசடி எப்படி நடந்தது?
நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்ட ஒரு பில்லிங் சாப்ட்வேர் மூலம் இந்த மோசடி நடந்ததுள்ளது என கண்டறியப்பட்டு உள்ளது. சுமார் 60 டெராபைட்டுக்கும் அதிகமான பரிவர்த்தனை தரவுகளை ஆய்வு செய்தபோது, 2019-20 முதல் சுமார் ரூ.70,000 கோடி விற்பனை வருவாய் மறைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அந்த சாப்ட்வேர் ஒரு கிளிக்கில் 30 நாட்கள் வரையிலான விற்பனை பதிவுகளை முழுமையாக அழிக்க அனுமதித்தது. குறிப்பாக காசு (cash) பரிவர்த்தனைகள் அதிகமாக நீக்கப்பட்டதால், சராசரியாக 25-27% வரை விற்பனை மறைக்கப்பட்டதாக அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர். இதனால் வருமான வரியும் ஜிஎஸ்டியும் குறைவாக செலுத்தப்பட்டன.
கர்நாடகாவில் மட்டும் சுமார் ரூ.2,000 கோடி, தெலங்கானாவில் ரூ.1,500 கோடி, தமிழ்நாட்டில் ரூ.1,200 கோடி வரையிலான விற்பனை பதிவுகள் நீக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது.
ஏஐ மென்பொருள்
பொதுவாக இத்தகைய தரவுகளை ஆய்வு செய்ய வேண்டுமெனில் பல மாதங்கள், சில நேரத்தில் வருடங்கள் கூட ஆகலாம், ஆனால் வருமான வரித்துறையினர் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு பகுப்பாய்வு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, உணவகங்கள் எவ்வாறு ரொக்கப் (Cash Transaction) பில்களை பதிவு செய்த பிறகு நீக்கியுள்ளன என்பதை கண்டறிந்துள்ளனர்.
5 ஆண்டில் பெரும் மோசடி
சில உணவகங்கள் குறிப்பிட்ட தேதிகளின் அனைத்து பில்களையும் பதிவுக்குப் பிறகு அழித்துள்ளன. இதன் விளைவாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் 70,000 கோடி ரூபாய் அளவிலான வர்த்தகத்தை உணவகங்தள் வருமான வரித்துறைக்கு அறிவிக்காமல் இருந்தது தெரியவந்துள்ளது.
இந்த மென்பொருளின் பெயரை அரசு வெளியிடவில்லை, ஆனால் இது போன்ற தொழில்நுட்பங்கள் கிளவுட் அடிப்படையில் இயங்குவதால், நீக்கப்பட்ட பதிவுகளும் லாக் செய்யப்பட்டிருக்கும் என்பதால் வருமான வரித்துறை தற்போது மொத்த பில்களையும் பெற்றுள்ளது.
ஹைதராபாத்தில் மட்டுமா?
ஜிஎஸ்டி எண்கள், டெலிவரி தரவுகள் மற்றும் உள்துறை சாப்ட்வேர் பதிவுகளை ஒப்பிட்டு பார்த்தபோது, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் இதே போன்ற முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
3 முக்கிய மாநிலங்கள் - தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இந்த வரி ஏய்ப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
பிரியாணி மீது மட்டும் டார்கெட்டா?
இது பிரியாணி உணவையோ அல்லது பிரியாணி கடைகளையோ குறிவைக்கும் விசாரணை அல்ல. தொழில்துறையில் பயன்படுத்தப்பட்ட சாப்ட்வேர் மூலம் நடந்த விற்பனை மறைப்பதை தான் வருமான வரித்துறை விசாரணை கவனம் செலுத்துகிறது.
வரி ஏய்ப்பின் விளைவுகள்
இந்த கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், வரி பாக்கி மற்றும் அபராதங்களை கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த சில நாட்கள் அல்லது வாரங்களில், ஜிஎஸ்டி துறை மற்றும் வருமான வரித்துறை உணவகங்களுக்கு விசாரணை நோட்டீஸ்களை அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் எந்த தொழிலாக இருந்தாலும், கணக்கியல் அல்லது பில்லிங் மென்பொருள்களைப் பயன்படுத்தினால், அவை பெரும்பாலும் கிளவுட் இணைப்புடன் இருக்கும். எனவே, நீக்கப்பட்ட பதிவுகளை வரித்துறை அழுத்தம் கொடுத்து பெறலாம்.
இது சிறு உணவகங்கள் முதல் பெரிய சங்கிலி உணவகங்கள் வரை அனைவருக்கும் பொருந்தும். தமிழகத்தில் இது போன்ற மென்பொருள்களைப் பயன்படுத்தும் உணவகங்கள், தங்கள் கணக்குகளை சரிபார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
உணவக உரிமையாளர்களுக்கு அட்வைஸ்
உணவகத் தொழிலில் இருப்பவர்கள் தங்கள் கணக்குகளை தீவிரமாக பராமரிக்க வேண்டும். வரி ஏய்ப்பு முயற்சிகள் நீண்ட காலத்தில் பெரும் இழப்புகளை ஏற்படுத்தும். சரியான வரி செலுத்துதல் மூலம் தொழிலை பாதுகாக்கலாம்.
இந்த விவகாரம் எந்த பில்லிங் மென்பொருள் என்பதை யூகிக்க வைத்தாலும், அனைத்து தொழில்முறை உரிமையாளர்களும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications