முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் சமீபத்தில் குஜராத்தின் ஜாம்நகரில் திருமணத்துக்கு முந்தைய விழாக்களை கொண்டாடினர். இந்த நிகழ்வு இந்தியாவை மட்டுமின்றி உலகம் மழுவதையும் கவர்ந்த நவீன கால திருமண வைபோகமாகும்.
ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்துற்கு முந்தைய விழாக்கள் மார்ச் 1 முதல் 3 வரை 3 நாட்கள் நடைபெற்றன. இதில் ஈஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஷ்லோகா மேத்தா, ஆனந்த் பிரமல், கோகிலாபென் அம்பானி உள்ளிட்ட அம்பானி குடும்ப உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

அவர்களுடன் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், மெட்டா தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க், அமெரிக்க முனனாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மகள் இவான்கா டிரம்ப் உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்றனர்.
இந்த மூன்று நாள் விழாவுக்கு மொத்தம் ரூ.1260 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிக்கே இவ்வளவு செலவு ஆகியிருந்தால் திருமணத்துக்கு எவ்வளவு செலவை அம்பானி குடும்பத்தார் செய்யப் போகின்றனர் என மக்கள் ஆச்சரியப்படுகின்றனர்.
விருந்தினர்களை உபசரிப்பதற்காக கேட்டரிங் ஒப்பந்தத்துக்கு மட்டும் 200 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். இதற்காக இந்தூரில் இருந்து சிறந்த சமையல் கலைஞர்கள் 25 பேர் உணவு தயாரிப்பதற்காக அழைத்து வரப்பட்டனர்.
2500 க்கும் மேற்பட்ட வித்தியாசமான உணவுகள் பரிமாறப்பட்டன. ஒரு உணவு மீண்டும் அடுத்த வேளைக்கு சமைக்கப்படவில்லை.
பிரேக் பாஸ்ட்டுக்கு 250 ஐட்டங்களும், லஞ்சுக்கு 250 ஐட்டங்களும் டின்னருக்கு 80 ஐட்டங்களும், நள்ளிரவு விருந்துக்கு 70 ஐட்டங்களும் பரிமாறப்பட்டன.
இந்த விருந்துகளில் பிரபலமான மொஹந்தல், பேடா, சுர்மா லட்டு, கேசர் பேடா, ஹல்வாசன், சுராதி காரி, பிஸ்தா மித்தாய் போன்ற குஜராத்தி உணவுகள், சமோசா, ஜிலேபி, தோக்லா, காதியா நம்கீன் தயாரித்து வழங்கப்பட்டது. இத்துடன் சிவப்பு சட்னியுடன் கூடிய காய்கறி சாண்ட்விச், ஆம் பன்னா பானம், பல வகையான பேக், கிரேக்க யோகர்ட் ஆகியவையும் அடங்கும்.
3 நாள் நிகழ்ச்சிகளின் போதும் வந்திருந்தவர்களைக் கவரும் வகையில் புதுமையான மலர் அலங்காரங்களை ஜெஃப் லீதம் செய்தார். ரியாலிட்டி டிவி நட்சத்திரமும் தொழிலதிபருமான கிம் கர்தாஷியன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் சேரந்து பணியாற்றிய அனுபவம் பெற்றவர் ஜெஃப் லீதம்.
இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்காக இந்திய மற்றும் வெளிநாட்டு விருந்தினர்களுக்காக தனிப்பட்ட சார்ட்டர்டு விமானங்களை முகேஷ் அம்பானி ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த விழாவுக்காகவே கட்டப்பட்ட சொகுசு பங்களாக்களில் அனைத்து விருந்தினர்களும் தங்க வைக்கப்பட்டனர்.
முதல் நாள் நிகழ்ச்சியில் உலகப் புகழ்பெற்ற பாப் இசைப் பாடகி ராபியின் ரிஹானாவின் கச்சேரி நடைபெற்றது. இரண்டு மணிநேரம் நடைபெற்ற கச்சேரிக்கு ரிஹானா ரூ.52 கோடி ரூபாயை வசூலித்துள்ளார்.
அனந்த் அம்பானியும் ராதிகா மெர்ச்சன்ட்டும் ஜனவரி 2023 இல் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். அவர்களது திருமணம் இந்த ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.
Story Written By: I.Jayachandran


Click it and Unblock the Notifications