ஐடி துறையில் அடுத்த புயல்.. வரலாறு காணாத பணிநீக்கங்கள்.. 50,000 பேரின் நிலை என்ன..?

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை (IT) தற்போது ஒரு பெரிய சவாலை எதிர்கொண்டு வருகிறது. உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக, ஐடி துறையில் வரலாறு காணாத பணிநீக்கங்கள் நிகழக்கூடும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்து வரும் ஐடி துறை, பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்களை இழக்கும் அபாயம் எழுந்துள்ளது. இது, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் எதிர்காலம் குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஐடி துறையில் அடுத்த புயல்.. வரலாறு காணாத பணிநீக்கங்கள்.. 50,000 பேரின் நிலை என்ன..?

50,000 பேர் வேலை இழக்க வாய்ப்பு : சமீபத்திய அறிக்கைகளின்படி, இந்த ஆண்டின் இறுதிக்குள் 50,000-க்கும் மேற்பட்ட ஐ.டி ஊழியர்கள் வேலையை இழக்க நேரிடலாம் என்று கூறப்படுகிறது. 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' வெளியிட்டுள்ள ஒரு தகவலின்படி, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடையே கிட்டத்தட்ட 25,000 ஊழியர்கள் ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை இந்த ஆண்டில் இரண்டு மடங்காக அதிகரிக்கக்கூடும் என தெரிகிறது.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட HFS ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) ஃபில் ஃபெர்ஷ்ட் கூறுகையில், பெரிய நிறுவனங்கள் இந்த ஆண்டு கணிசமான எண்ணிக்கையிலான ஊழியர்களை ரகசியமாக பணிநீக்கம் செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், டீம்லீஸ் டிஜிட்டல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான நிதி ஷர்மா கூறுகையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் பணிநீக்கங்களால் பாதிக்கப்படும் ஐ.டி ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 55,000 முதல் 60,000 வரை உயரக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நிறுவனங்களின் மறைமுக உத்திகள் : பணிநீக்கங்களை செயல்படுத்த ஐ.டி நிறுவனங்கள் பல்வேறு உத்திகளை கையாள்வதாகவும் கூறப்படுகிறது. சில நிறுவனங்கள் வெளிப்படையாகப் பணிநீக்கம் செய்யாமல், ஊழியர்களின் மோசமான செயல்பாட்களை காரணம் காட்டி அவர்களை வேலையில் இருந்து நீக்குவதாகவும், மற்ற சில நிறுவனங்கள் பதவி உயர்வுகளை தாமதப்படுத்துவது அல்லது ஊழியர்களை சுயமாக முன்வந்து ராஜினாமா செய்ய வற்புறுத்துவது போன்ற மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இது ஊழியர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை தந்துள்ளது.

அதேபோல், நாட்டின் முன்னணி ஐ.டி நிறுவனங்களும் இதில் விதிவிலக்கல்ல. சமீபத்தில், டிசிஎஸ் (TCS) மற்றும் ஆக்சென்ச்சர் (Accenture) போன்ற நிறுவனங்கள் பெரிய அளவிலான பணிநீக்கங்களை அறிவித்துள்ளன. அதன்படி, டிசிஎஸ் நிறுவனம் மார்ச் 2026 ஆம் ஆண்டுக்குள் சுமார் 12,000 ஊழியர்களை குறைக்க திட்டமிட்டுள்ளது.

அதே சமயம், உலக அளவில் செயல்படும் ஆக்சென்ச்சர் நிறுவனம், கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் மட்டும் உலகம் முழுவதும் 11,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செயற்கை நுண்ணறிவு பல பணிகளை திறமையாகச் செய்ய தொடங்கியிருப்பதால், வழக்கமான பணிகளைச் செய்யும் ஊழியர்களின் தேவை குறைகிறது. இதுவே இந்த மெகா பணிநீக்கங்களுக்கு பின்னணியில் உள்ள முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.

ஐடி துறையின் இந்த மாற்றங்கள், ஊழியர்களை தங்கள் திறன்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன. அதேசமயம், இனி செயற்கை நுண்ணறிவுடன் இணைந்து செயல்படக்கூடிய சிறப்புத் திறன்கள் கொண்ட ஊழியர்களுக்கே சந்தையில் அதிக வாய்ப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+