ஜப்பானை சேர்ந்த ஒரு இளைஞர் சும்மா இருந்து கொண்டே ஆண்டுக்கு 68 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். அதெப்படி சும்மா இருந்து சம்பாதிக்க முடியும் என கேள்வி எழலாம். ஆனால் அதனை சாத்தியப்படுத்தி இருக்கிறார் இந்த நபர்.
ஜப்பானை சேர்ந்த 41 வயதான இளைஞர் தான் சோஜி மோரிமோட்டோ. இவர் புதுமையான ஒரு வேலையில் ஈடுபட்டு அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார். அதாவது சும்மா இருப்பது தான் இவருடைய வேலை. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வசித்து வரக்கூடிய மோரிமோட்டோ கடந்த நான்கு ஆண்டுகளாக தனிமையில் வாடும் நபர்களுக்கு துணையாக இருக்கும் வேலையை செய்து வருகிறார்.

அதாவது தன்னையே வாடகைக்கு விடுகிறார். தனிமையில் இருக்கும் நபர்கள் இவரை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம். இவர் அவர்களுடன் சென்று சும்மா இருப்பார். அதாவது துணையாக இருப்பார், அவர்களுடன் பேசுவார், உணவருந்துவார். பாலியல் ரீதியான தொடர்பு தவிர அனைத்து வகையிலும் துணையாக இருப்பார். இதற்காக ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு என கட்டணம் வசூல் செய்கிறார்.
இவ்வாறு கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் அவர் சுமார் 68 லட்சம் ரூபாயை ஊதியமாக பெற்றிருக்கிறார். இவர் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார். 2018 ஆம் ஆண்டில் அவருடைய நிறுவனம் நீங்கள் புதிதாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை , இந்த நிறுவனத்திற்காக நீங்கள் எதையும் செய்ய செய்யாமல் இருக்கிறீர்கள் எனக் கூறி வேலையை விட்டு நீக்கினார்களாம்.
இந்த நிலையில் மோரிமோட்டோ எக்ஸ் பக்கத்தில் தனக்கென ஒரு கணக்கை தொடங்கி தனியாக இருக்கும் நபர்களுக்கு துணையாக என்னை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என பதிவிட்டு இருந்தார். ஆனால் எதிர்பார்த்ததை விட அதிகமாக பலரும் அவரை வாடகைக்கு எடுத்து துணையாக வைத்திருந்தார்களாம். எக்ஸ் பக்கத்தில் இவரை லட்சக்கணக்கானவர்கள் பின் தொடர்கின்றனர்.
இசை நிகழ்ச்சி அல்லது பார்ட்டிகளுக்கு தனியாக செல்ல விரும்பாதவர்கள் இவரை வாடகைக்கு எடுத்து உடன் அழைத்து செல்வார்களாம். இவர் அவர்களோடு சென்று உணவருந்தி விட்டு அவர்களோடு பேசி பழகிவிட்டு திரும்ப வந்து விடுவாராம்.
சில சமயங்களில் நான் நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டி இருந்திருக்கிறது, குளிரில் நீண்ட நேரம் நின்று இருக்கிறேன், முன்பின் தெரியாத நபர்களோடு பார்ட்டியில் கலந்து கொண்டிருக்கிறேன், மிகப்பெரிய ஒரு மேடையில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன்னிலையில் நான் நின்று இருக்கிறேன் என மோரிமோட்டோ கூறுகிறார்.
என்னுடைய குடும்பத்திற்காக நான் சம்பாதிக்க வேண்டும், அதற்காகத்தான் இப்படி ஒரு வேலையை தேர்ந்தெடுத்தேன், ஆனால் நான் எதிர்பார்த்ததை விட இந்த வேலையில் நல்ல ஊதியம் கிடைக்கிறது எனக் கூறியுள்ளார். ஓராண்டுக்கு ஆயிரம் கோரிக்கைகள் இவருக்கு வருகிறதாம். தன்னை வாடகைக்கு எடுப்பவர்கள் எவ்வளவு வாடகை செலுத்த வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ள இவர் விட்டுவிடுவாராம்.
சராசரியாக இவர் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை துணையாக செல்வதற்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் கேட்பாராம். ஜப்பானில் தற்போது சிங்கிளாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
திருமணம் காதல் போன்ற கமிட்மெண்டுக்குள் செல்ல யாரும் விரும்பவில்லை எனவே இவ்வாறு தனிமையாக இருப்பவர்களுடன் டின்னர் செல்வதற்கு , பார்ட்டிக்கு செல்வதற்கு என ஆட்களை தேடுகின்றனர் .அந்த சமயங்களில் இது போன்ற நபர்கள் அவர்களுக்கு உதவியாக இருக்கின்றனர் என நோமுரா ஆய்வு நிறுவனம் கூறுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications