மத்திய பட்ஜெட்டில் பல்வேறு முக்கியமான அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது தனிப்பட்ட பயன்பாட்டுக்காக வெளிநாட்டில் இருந்து வாங்கக்கூடிய பொருட்களுக்கான இறக்குமதி வரி தொடர்பாக வெளியான அறிவிப்பு தான்.
நாம் வெளிநாடுகளுக்கு செல்கிறோம் அங்கே நமக்கு பிடித்த அல்லது குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், போன்கள் மற்றும் துணிமணி, பிராண்டட் ஷூக்கள் உள்ளிட்டவற்றை வாங்குகிறோம். அதனை இந்தியாவிற்கு கொண்டு வரும்போது 20 சதவீத வரி செலுத்தியாக வேண்டி இருக்கிறது. அதேபோல நீங்கள் இந்தியாவிலிருந்து கொண்டு ஆன்லைனில் ஆர்டர் செய்தாலும் 20% இறக்குமதி வரி என்பது உண்டு.

இந்த வரியை தான் நிர்மலா சீதாராமன் மாற்றி அமைத்திருக்கிறார். அதாவது நீங்கள் வெளிநாட்டில் இருந்து ஒரு பொருளை வாங்கிக்கொண்டு இந்தியாவிற்கு வருகை தருகிறீர்கள் அல்லது ஈகாமர்ஸ் தளங்கள் வழியாக வெளிநாட்டிலிருந்து ஒரு பொருளை ஆர்டர் செய்து பெறுகிறீர்கள், ஷாப்பிங் செய்கிறீர்கள் எனும் போது அந்த பொருட்களுக்கு இதுநாள் வரை விதிக்கப்பட்டு வந்த 20 சதவீத இறக்குமதி வரி 10 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் நீங்கள் வாங்கக்கூடிய அல்லது வெளிநாட்டிலிருந்து கொண்டு வரக்கூடிய பொருள் வர்த்தக ரீதியாகவோ விற்பனைக்காக பயன்படுத்தக் கூடாது . உங்களுடைய தனிப்பட்ட பயன்பாட்டிற்கான பொருளாக மட்டுமே அது இருக்க வேண்டும் அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த பொருளுக்கு இறக்குமதி வரி 20 சதவீதத்திலிருந்து 10% ஆக குறையும்.
எனவே துணிமணிகள், ஷூ, மொபைல் போன், டேப்லட்கள் மற்றும் பிற கருவிகளை நீங்கள் இனி குறைந்த கட்டணத்திற்கு வாங்க முடியும். ஆன்லைன் தளங்களில் நீங்கள் ஷாப்பிங் செய்கிறீர்கள் என்றால் முன்பை விட இனி குறைந்த கட்டணத்தில் இந்த பொருட்கள் கிடைக்கும். ஏனெனில் இதற்கான இறக்குமதி வரி என்பது குறைக்கப்பட்டிருக்கிறது. தற்போது இருக்கக்கூடிய ஜென் ஸீ இளைஞர்கள் பல்வேறு வெளிநாட்டு பிராண்டுகளின் பொருட்களை நேரடியாக வாங்கி அணிய வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.
கொரிய நாட்டு பொருட்களுக்கு இந்திய சந்தையில் தனி வரவேற்பே இருக்கிறது. இனி கொரியாவில் இருந்தே பிராண்டட் பொருட்களை அதிகாரப்பூர்வமாக நீங்கள் ஆர்டர் செய்து பயன்படுத்த முடியும். தவறான வழிகளில் இந்த பொருட்கள் இந்தியாவை வந்து அடைவது தடுக்கப்படும். மேலும் மக்கள் ஒரிஜினல் பிராண்ட்ட் பொருட்களை நேரடியாக அதை விற்பனை செய்யும் நிறுவனத்திடமே வாங்க கூடிய வாய்ப்பை பெறுவார்கள்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications