பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்யப் போகிறீர்களா? 5 அசத்தல் டிப்ஸ்.. இதை தெரிஞ்சிகிட்டா பணமழை தான்!

சென்னை: இந்தியாவில் நிலையான வருமானத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு நிலையான வைப்புத்தொகைகள் (FDகள்) விருப்பமான தேர்வாக இருக்கும். இருப்பினும் FD-களில் முதலீடு செய்வதற்கு முன்பு கவனிக்கப்படாத சில விஷயங்களில் ஒன்று அதன் முதிர்வு காலம். இது முதலீட்டின் வருமானம் மற்றும் தனிப்பட்ட நபரின் பணப்புழக்கத்தை கணிசமாக பாதிக்கிறது. சரியான FD காலத்தை தேர்ந்தெடுப்பது உங்கள் நிதி இலக்குகளை எளிதில் அடைய உதவுகிறது. இந்தப் பதிவில் FD-களை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு ஒருவர் கவனிக்க வேண்டியவற்றைப் பார்ப்போம்.

FD திட்டங்களின் முதிர்வு காலம் என்பது, நீங்கள் செய்யும் முதலீடுகள் லாக் செய்து வைக்கப்பட்டு இருக்கும் காலத்தைக் குறிக்கிறது. இது சில நாட்கள் முதல் பல ஆண்டுகள் வரை இருக்கலாம். ஒரு தனி நபர் குறுகிய கால FD-களைத் தேர்ந்தெடுத்தால் அவருக்கு குறைந்த வட்டி விகிதங்களே வழங்கப்படுகின்றன. ஆனால் உங்களுடைய முதலீட்டை எளிதில் குறிப்பிட்ட நாட்கள் முடிந்தவுடன் எடுத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் நீண்ட காலம் அதிக வட்டி விகிதங்களை பெற வேண்டும் என்று ஆசைப்பட்டால், அதற்கு நீண்ட கால FD-களைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.

பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்யப் போகிறீர்களா? 5 அசத்தல் டிப்ஸ்.. இதை தெரிஞ்சிகிட்டா பணமழை தான்!

உங்கள் தேவைகளுடன் இணைத்துப் பாருங்கள்: எதற்காக FD திட்டங்களில் முதலீடு செய்கிறீர்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய இலக்கு அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் அல்லது ஒரு ஆண்டுகளுக்குள்ளேயே வருகிறதா.. என்பதை முதலில் பாருங்கள். உங்கள் நிதி இலக்குகளுக்கு ஏற்ப முதிர்வு காலத்தை தேர்ந்தெடுப்பது சிறந்தது. சிலருக்கு அடுத்து வரும் 1 ஆண்டுக்குள் தேவை இருக்கலாம். இதுபோன்ற நபர் எனில் 2 முதல் 3 ஆண்டுகள் முதிர்வு காலத்தைக் கொண்ட FD திட்டங்களை தேர்ந்தெடுக்கக் கூடாது.

வட்டி விகிதத்தை சரிபார்க்கவும்: FD-களில் வழங்கப்படும் வட்டி விகிதங்கள் முதிர்வு காலத்தின் அடிப்படையில் மாறுபடும். பொதுவாக நீண்ட முதிர்வு காலத்தைக் கொண்ட FD-கள் அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. FD திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தரும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்க்கவும். வட்டி விகித மாற்றங்களுக்கு எதிராகவும் பணத்தை இன்னும் அதிகமாக வளர்க்கவும் முதலீட்டை பல FD-க்களாகப் பிரித்து முதலீடு செய்யலாம்.

வரி தாக்கங்கள்: FD வட்டி மீது விதிக்கப்படும் வரியானது, உங்கள் வருமானத்தை கணிசமாக பாதிக்கும். குறுகிய கால FD-கள் ஒட்டுமொத்த வட்டியை குறைக்க உதவும். இதன் விளைவாக வரி விதிக்கக்கூடிய வருமானம் குறையும். தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தின் அடிப்படையில் வரிவிதிப்பின் தாக்கத்தை மதிப்பிடவும் மற்றும் வரி-சேமிப்பு FD-கள் போன்ற விருப்பங்களை ஆராயவும்.

பண வீக்கம் மற்றும் வருமானம்: நீண்டகால FD-கள் அதிக வருமானத்தை அளிக்கும்போது, அவற்றில் பணம் வீக்கத்தின் விளைவுகளையும் சேர்த்து கருத்தில் கொள்வது மிகவும் முக்கியமானது. நீண்ட லாக்கின் காலம் இருந்தாலும், பணவீக்கம் காரணமாக உங்கள் நிதியின் உண்மையான மதிப்பில் குறைவு ஏற்படலாம். நீங்கள் சம்பாதித்த வட்டி பணவீக்க விகிதத்தை விட அதிகமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

FD லேடரிங்: உங்கள் FD திட்டங்களை பல்வேறு காலகட்டங்களில் பன்முகப்படுத்தி முதலீடு செய்வதை இது குறிக்கிறது. அதாவது உங்களிடம் ரூ. 5 லட்சம் பணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். தற்போது ரூ. 1 லட்சத்தை ஓராண்டு FD திட்டங்களிலும், மீதமுள்ள ரூ. 2 லட்சத்தை மூன்றாண்டுக்கான FD திட்டங்களிலும், மீதமுள்ள இன்னொரு ரூ. 2 லட்சத்தை 5 ஆண்டுக்கான FD திட்டங்களிலும் பிரித்து முதலீடு செய்யலாம். ஒரு வருடங்களுக்குப் பிறகு ஒரு ஆண்டுக்கான FD திட்டம் முதிர்வு அடையும்போது, அந்த வட்டியையும் அசலையும் சேர்த்து எடுத்து மீண்டும் இன்னொரு FD திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த முறையெ FD லேடரிங் எனப்படுகிறது. இதுபோல் முதிர்வு பெறும் FD திட்டங்களை எடுத்து மீண்டும் மீண்டும் மற்றொரு FD-களில் முதலீடு செய்து லாபம் பெறுவதை இது குறிக்கிறது.

தனிப்பட்ட தேவைகள், வட்டி விகிதம் மற்றும் கால அளவு ஆகியவற்றை மதிப்பீடு செய்வதன் மூலம், உங்கள் நிதி இலக்குகளுக்கு ஏற்ப உங்கள் FD முதலீட்டை சிறப்பாக செயல்படுத்தலாம். எனவே, உங்கள் நிதி இலக்குகளை அடைய நீங்கள் விரும்பினால், கவனமாக திட்டமிட்டு, உங்கள் தேவைகளுக்கு ஏற்ற கால அளவைக் கொண்ட FD-களைத் தேர்வு செய்யுங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+