அமெரிக்காவில் பணிபுரியும் ஒரு ஐடி ஊழியர் மும்பைக்கு இடம்பெயர்வது குறித்து ரெட்டிட் தளத்தில் வெளியிட்ட பதிவு தான் தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது. செனோராலன் என்ற பெயர் கொண்ட ரெட்டிட் பயனாளர் ஒருவர் தனக்கு இந்தியாவில் வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் ஊதியத்தில் தனக்கு இந்த புதிய வேலை கிடைத்துள்ளது மும்பையில் நான் வேலை செய்யப் போகிறேன் ஆனால் மும்பையில் நான் குடிப்பெயர்வது சரியான முடிவாக இருக்குமா என பதிவு செய்திருந்தார்.
மெக்சிகன் அமெரிக்கரான செனோராலன் வெஸ்டர்ன் கவர்னர் பல்கலைக்கழகத்தில் சைபர் செக்யூரிட்டி பிரிவில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். தன்னிடம் தற்போது நான்கு லட்சம் டாலர்கள் சேமிப்பு இருப்பதாக கூறியுள்ளார். தனக்கு 10 ஆண்டுகளாக ஐடி துறையில் பணி அனுபவம் இருக்கிறது என கூறியுள்ளார்.

அண்மையில் தனக்கு மும்பையில் ஒரு வேலை வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் எனக்கு ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் ஊதியம் கிடைக்க இருக்கிறது நான் இப்போது மும்பைக்கு இடம் பெயர வேண்டும் என்றால் அங்கே வாழ்க்கை நிலை எப்படி இருக்கும் என்பது குறித்து தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என பதிவு செய்திருக்கிறார்.
அவரது பதிவுக்கு ஏராளமானவர்களும் பதில் தெரிவித்துள்ளனர். சில பயனாளர்கள் மும்பை வாழ்க்கை மிகச் சிறந்த முறையில் இருக்கும் நீங்கள் நிச்சயமாக மும்பைக்கு வரலாம் என தெரிவித்துள்ளனர். ஒரு கோடி ரூபாய் ஆண்டு சம்பளத்தில் மும்பையில் வாழ்க்கை என்பது மிகவும் சௌகரியமானதாக இருக்கும். நீங்கள் உங்களுக்கு பிடித்தமான பல விஷயங்களை மும்பையில் செய்ய முடியும் என ஒருவர் பதிவிட்டுள்ளார். சிலர் மும்பைக்கு குடி பெயர்வது குறித்து சாதகமாக கருத்து தெரிவித்திருக்கும் நிலையில், சிலர் அதற்கு எதிரான கருத்தை தெரிவித்து இருக்கின்றனர்.
ஊதியம் அதிகமாக இருந்தாலும் உங்களுக்கு அன்றாட வாழ்க்கையை இங்கே மேற்கொள்வது சவால் மிக்கதாக இருக்கும் ஏனெனில் இங்கே பொது போக்குவரத்து எப்பொழுதும் கூட்டமாக இருக்கும் மாசு அதிகம் உங்களது வாழ்க்கை தரத்தை இது குறைக்கும் எனவே இதை எல்லாம் சிந்தித்து முடிவெடுங்கள் என ஒரு பயனர் கூறியுள்ளார். ஒரு பயனர் மும்பையில் நீங்கள் வசிக்க போகும் பகுதியை பொறுத்து உங்கள் வாழ்க்கை நிலை அமையும் என கூறியுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications