சென்னை: இந்தியாவில் இது வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலம் .வழக்கமாக ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான அவகாசம் வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அது செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
வருமான வரி கணக்கு: சம்பளதாரர்கள் தற்போது வருமானவரி கணக்கினை தாக்குதல் செய்யும் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். தற்போது வரை 1.23 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பழைய வரி மற்றும் புதிய வரி கணக்கு என இரண்டு முறைகளில் நாம் வருமான வரியை தாக்கல் செய்யலாம்.

வருமான வரி உச்ச வரம்பு: பழையவரி நடைமுறையின் படி 60 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆண்டுக்கு 2.5 லட்சத்திற்கும் மேல் வருமானம் கொண்டிருந்தால் கட்டாயம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். இதுவே 60 முதல் 80 வயதுக்கு உட்பட்டவர்கள் எனில் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது கட்டாயம், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டு வருமான வரி உச்ச வரம்பு 5 லட்சம் ரூபாயாக இருக்கிறது.
என்ன விலக்கு: புதியவரி நடைமுறையின் படி ஆண்டுக்கு 3 லட்சத்திற்கு மேல் வருமானம் கொண்டிருக்கும் அனைவருமே வருமானவரி கணக்கினை தாக்கல் செய்தாக வேண்டும். எனக்கு இந்த வரம்பிற்கு கீழ் தான் இருக்கிறது நான் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாமா என்ற சந்தேகம் எழலாம். இந்திய வருமான வரி சட்டம் வருமான வரி உச்ச வரம்பிற்கு கீழ் உள்ளவர்கள் கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய தேவையில்லை என கூறுகிறார்.
சில நிபந்தனைகள் உள்ளன: சில சமயங்களில் இந்த வருமான வரம்பிற்குள் இல்லாதவர்களும் கூட கணக்கு தாக்கல் செய்ய வேண்டியிருக்கும். இதற்கென சில விதி விலக்குகளை வருமான வரி துறை பட்டியலிட்டுள்ளது. என்னுடைய வருமானம் ஆண்டுக்கு 3 லட்சத்திற்குள் தான் இருக்கிறது ஆனால் பின்வரும் ஏதேனும் ஒரு நிபந்தனையில் நீங்கள் இருந்தால் கட்டாயம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தாக வேண்டும்.
யாருக்கெல்லாம் கட்டாயம்:
- உங்களுடைய சேமிப்பு கணக்கில் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்திருந்தால்
- நீங்கள் ஒன்று அல்லது மேற்பட்ட நடப்பு கணக்குகளில் 1 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்திருந்தால்
- நீங்கள் ஒரு தொழில் நடத்துகிறீர்கள் அந்த தொழிலின் மூலம் உங்களுக்கு ஆண்டுக்கு 60 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் வருகிறது என்றால் கட்டாயம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்
- உங்களுடைய வீட்டு மின்சார கட்டணம் ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய்க்கு மேல் வருகிறது
- உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்த ஒருவருக்கோ வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கு நீங்கள் 2 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் செலவு செய்திருந்தால்
- நிதியாண்டுக்கான டிடிஎஸ் /டிசிஎஸ் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால்
- வெளிநாட்டு சொத்துக்களில் இருந்து உங்களுக்கு வருமானம் வருகிறது என்றால் கட்டாயம் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்தாக வேண்டும்
இந்திய வருமான வரித்துறை அனைத்து நிதி பரிவர்த்தனைகளையும் கண்காணிக்கிறது. எனவே எனக்கு குறிப்பிட்ட அளவு வருமானம் இல்லை ஆனால் மேலே கூறிய ஏதேனும் ஒன்றில் நான் வருகிறேன் என்பவர்கள் கட்டாயம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் இல்லையென்றால் நோட்டீஸ் வருவதற்கு வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications