ஹோம் லோன் வாங்கும்போது அவற்றோடு ஒரு காப்பீட்டு திட்டத்தையும் வங்கிகள் வழங்குவது சகஜம். இதுபோன்ற ஹோம் லோன் புரொடக்சன் பாலிசி அல்லது டேர்ம் பாலிசி உங்களுடைய நிலுவையில் உள்ள கடனைப் பாதுகாக்கும் நோக்கில் வழங்கப்படுகின்றன. ஆனால் காப்பீடுகளை வாங்குவது கட்டாயம் இல்லை.. இருந்தாலும் காப்பீடு பெறுவது நன்மை அளிக்குமா? என்பது குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம்.
காப்பீட்டின் பின்னால் இருக்கும் அடிப்படைகளை முதலில் பார்ப்போம். எந்த ஒரு வங்கி அல்லது ஹௌசிங் லோன் வழங்கும் நிறுவனமும் உங்கள் வீட்டுக் கடனுடன் காப்பீட்டை வாங்கும் படி கட்டாயப்படுத்தாது. ஏனெனில் வீட்டுக்கடன் பெறுவதோடு காப்பீட்டை வழங்குவது சட்டவிரோதமானது என்று ஆர்பிஐ தெளிவாகக் கூறியுள்ளது. ஆனால் முற்றிலும் தன்னார்வமாக யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். கடன் வழங்குபவர்கள் ஒரு குறிப்பிட்ட பாலிசியை உங்களிடம் வலியுறுத்தினாலும் கூட, எந்தப் பாலிசியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது உங்கள் கையில் தான் உள்ளது. கடன் பெறுபவர்களோ கடன் வாங்கும் போதே கடனை பாதுகாப்பதற்கு கண்டிப்பாக காப்பீடு தேவை என்று நம்பி பாலிசி வாங்கிவிடுகின்றனர்.

வீட்டுக் கடன் காப்பீடு என்றால் என்ன?: கடன் வாங்கியவர் துரதிஷ்டவசமாக முன்கூட்டியே இறந்துவிட்டால் நிலுவையில் உள்ள கடனை செலுத்துவதற்காக வாங்கப்படும் காப்பீடு தான் இந்த வீட்டுக் கடன் காப்பீடு. இதன் மூலம் உங்கள் குடும்பம் ஈஎம்ஐ-களை செலுத்தவோ அல்லது நீங்கள் சொத்தை பிணையமாக வைத்து கடன் வாங்கி இருப்பீர்கள் அந்த சொத்தை இழக்கவோ வேண்டியதில்லை. சில காப்பீடுகள் கடன் தொகையுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. கடன்காலம் மற்றும் நிலுவைத் தொகையின் அளவை பொறுத்துதான் இந்த வகை காப்பீடுகள் வழங்கப்படும்.
ஹோம் லோன் காப்பீடு வாங்குவதற்கு பதிலாக டேர்ம் இன்சூரன்ஸ் கூட வாங்கலாம். அவற்றுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
பாதுகாப்பு: உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நிலுவையில் உள்ள கடன் தொகையை விட அதிக அளவிலான பணம் கிடைக்க வழிவகை செய்யும். இது அவர்களுக்கு தங்களுடைய வீட்டை அடமானத்திலிருந்து மீட்கவும் சரி.. மற்ற நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் சரி கண்டிப்பாக உதவியாக இருக்கும்.
பட்ஜெட்டுக்கு ஏற்றது: டேர்ம் இன்சூரன்ஸ் பொதுவாக குறைவான கட்டணத்துடன் கூடிய காப்பீடாகும். லோன் காப்பீட்டை விட இது போன்ற டேர்ம் இன்சூரன்ஸ் திட்டங்கள் குறைந்த கட்டணத்திலேயே அதிக பாதுகாப்பை வழங்குகின்றன.
பிற நன்மைகள்: டேர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தால் க்ரிட்டிக்கல் இல்னஸ் அல்லது விபத்து மரணங்கள் போன்றவை ஏற்பட்டால் கூடுதல் ரைடர்களையும் தேர்ந்தெடுக்கலாம்.
போர்ட்டபிலிட்டி: நீங்கள் ஒரு நிதி நிறுவனத்தில் ஹோம் லோன் பெற்றிருக்கிறீர்கள் அப்போதே ஒரு ஹோம் லோன் காப்பீட்டையும் வாங்கி இருக்கிறீர்கள். ஆனால் அதன் பிறகு மீண்டும் உங்களுடைய ஹோம் லோனை ட்ரான்ஸ்ஃபர் செய்ய விரும்புகிறீர்கள் என்றால் ஹோம் லோன் காப்பீட்டை புதிய நிதி நிறுவனத்திற்கு மாற்ற முடியாது. ஆனால் டேர்ம் இன்சூரன்ஸ் அப்படி இல்லை.
வீட்டுக் கடன் காப்பீடு: சில சூழ்நிலைகளில் ஹோம் லோன் காப்பீடுகள் பயனுள்ளதாக இருக்கும். ஹோம் லோன் காப்பீடு பெறுவதால் வேலை இழப்பின் போது ஏற்படும் நிதி சிக்கல்களை சமாளிக்கலாம். ஆனால் டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசிகளோடு ஒப்பிடுகையில் இவற்றின் பிரீமியம் சற்று அதிகமாக இருக்கும்.
உங்கள் வீட்டுக் கடனுடன் காப்பீடு வாங்குவது கட்டாயம் இல்லை என்றாலும், ஒரு வித நிதி பாதுகாப்பை வைத்திருப்பது புத்திசாலித்தனமான நடவடிக்கை. குறிப்பாக உங்கள் குடும்பத்தின் வீடு ஆபத்தில் இருக்கும் போது இது போன்ற ஹோம் லோன் காப்பீட்டுகளை வாங்கி வைத்திருந்தால் அவசர காலங்களில் உதவியாக இருக்கும். எனவே நீங்கள் வீட்டுக் கடன் வாங்கும் போது அவர்கள் சொல்லும் காப்பீட்டை பெறுவதற்கு பதிலாக பல்வேறு ஆப்ஷன்களை ஒப்பிட்டுப் பார்த்து டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசி நல்லதா அல்லது ஹோம் லோன் பாலிசி நல்லதா என்பதை உங்கள் நிதி நலனை பொறுத்து ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications