அண்மையில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனம் தங்களுடைய முதல் எலக்ட்ரிக் சியுவி (crossover utility vehicle (CUV)) கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. எம்ஜி விண்ட்சார் (MG Windsor EV) என இந்த காருக்கு பெயரிடப்பட்டுள்ளது.
இதன் விலை சுமார் 9.9 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது காரின் விலை தான், இதன் எக்ஸ் ஷோரூம் விலை குறித்த விரிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலும் எம்ஜி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பேட்டரி தொடர்பான ஒரு சந்தா திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது.இது குறித்தும் விரைவில் தகவல்கள் வெளியிடப்பட உள்ளன.

எம்ஜி விண்ட்சார் எலக்ட்ரிக் கார்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 25ஆம் தேதி முதல் டெஸ்ட் டிரைவ் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 3ஆம் தேதியிலிருந்து இந்த எலக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவு தொடங்குகிறது. ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா அக்டோபர் 12ஆம் தேதியிலிருந்து விண்ட்சார் எலக்ட்ரிக் கார்கள் டெலிவரி செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
விண்ட்சார் எலக்ட்ரிக் எலக்ட்ரிக் கார்களை பொறுத்தவரை Wuling Cloud எலக்ட்ரிக் வாகனத்தைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு பெரிய காராக காட்சி தருகிறது. LED headlamps, LED taillights மற்றும் flush-fitting door handles, diamond-cut 18-inch aero alloy wheels என பல வித்தியாசமான வடிவமைப்பினை காண முடிகிறது.
பொதுவாகவே எம்ஜி கார்கள் பல்வேறு புதிய வசதிகளை கொண்டிருக்கும் அந்த வகையில் விண்ட்சார் எலக்ட்ரிக் கார்கள், மிகப்பெரிய டச் ஸ்கிரீன் இன்போடைன்மென்ட் சிஸ்டம் ,பல்வேறு கருவிகளை எளிதாக இணைத்துக் கொள்ளும் வசதிகள், பேனோராமிக் சன்ரூஃப், 135 டிகிரி அளவுக்கு சாயம் திறன் கொண்ட பின்பக்க இருக்கைகள் என்பன உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது.
விண்ட்சார் எலக்ட்ரிக் கார் 38 38 kWh பேட்டரி பேக்கினை கொண்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 331 கிலோமீட்டர் வரை பயணம் செய்யும் என இந்த நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த பேட்டரியினை பொறுத்தவரை முழுவதுமாக சார்ஜ் பெறுவதற்கு 3.3 kW சார்ஜர் என்றால் 15 மணி நேரங்களும் 7.4 kW சார்ஜர் என்றால் 7.30 மணி நேரங்களும் ஆகும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஃபாஸ்ட் சார்ஜரைக் கொண்டு சார்ஜ் செய்தால் இந்த பேட்டரி பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதத்தை அடைய 55 நிமிடங்களே போதுமானது.
இந்த காரில் ஆறு ஏர் பேக்குகள் இருக்கின்றன, நான்கு சக்கரங்களிலுமே டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ரியர் பார்க்கிங் சென்சார்கள், எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், அனைத்து இருக்கைகளுக்குமான சீட் பெல்டுகள், உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் உள்ளன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications