அண்மைக்காலமாக ஒரு பொருளை புதிதாக வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக நம் தேவைக்கேற்ப வாடகைக்கு எடுத்து பயன்படுத்திவிட்டு திரும்ப கொடுத்து விடலாம் என்ற ஒரு கருத்தாக்கம் எழுந்துள்ளது.
அந்த வகையில் வீட்டுக்கு தேவையான பர்னிச்சர் எனப்படும் மரச்சாமான்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்துவதில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து நாம் காணலாம்.

வாடகைக்கு எடுப்பது: பணி நிமித்தமாகவும், படிப்புக்காகவும் அடிக்கடி ஊர் விட்டு ஊர் மாற வேண்டிய சூழலில் இருப்பவர்கள், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்துவது என்பது நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு வாடகைக்கு எடுப்பது உங்களுக்கு பெருமளவில் பணத்தை மிச்சப்படுத்துகிறது. உதாரணத்திற்கு உங்கள் வீட்டிற்கு புதிதாக ஒரு சோபா வாங்க ரூ.25,000 தேவை, ஆனால் வாடகைக்கு எடுத்தால் கணிசமான தொகை உங்களுக்கு குறைகிறது. எனவே வீட்டு உபயோக பொருட்களை வாடகைக்கு எடுப்பது என்பது உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற தேர்வாக அமையும்.
உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு உங்களது பர்னிச்சரை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம், உதாரணமாக நீங்கள் இரண்டு சீட்டு சோபா பயன்படுத்துகிறீர்கள் எனில் அதனை மூன்று சீட்டு சோபாக்களாக மாற்றிக் கொள்ளலாம்.
பொதுவாக இதுபோல நாம் மரச்சாமான்களை வாடகைக்கு எடுக்கும்போது அதற்கான பராமரிப்பு செலவுகள் உள்ளிட்டவை அனைத்துமே நம் வாடகையிலேயே அடங்கிவிடும். எனவே அவற்றை சீர் செய்வது, அவற்றை பத்திரமாக பராமரிக்க வேண்டியது போன்ற கவலைகள் நமக்கு இருக்காது.
ஒரு சிறிது காலம் நான் ஒரு ஊரில் தங்க போகிறேன் அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே இந்த ஊரில் இருப்பேன் அடுத்து வேறு ஊருக்கு மாற்று கிடைத்துவிடும் என்பவர்கள் தாராளமாக இது போல பர்னிச்சர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக நீங்கள் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீடு மாறுகிறீர்கள் அல்லது ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு இடம் மாற வேண்டிய சூழல்கள் ஏற்படும் போது இந்த மரச்சாமான்களை கொண்டு செல்ல வேண்டியது ஏற்றுவது இறக்குவது போன்ற தொல்லைகள் இருக்காது . நீடித்த நிலையான சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்வுக்கு இதுபோல பொருட்களை வாடகைக்கு எடுப்பது சிறந்தது.
சொந்தமாக வாங்குவது: ஒரு பொருளை வாங்குவது என்பது உங்களுக்கு நீண்ட கால முதலீடாக இருக்கும். நீங்கள் ஒரு ஊரிலேயே ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு இருக்க போகிறீர்கள் அல்லது அங்கேயே செட்டிலாக போகிறீர்கள் எனும் போது உங்களுக்கு பிடித்தமான பொருளை நீங்கள் சொந்தமாக வாங்கிக் கொள்வதே சிறந்தது.
அடிக்கடி அந்த பொருளை மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது அதற்கு ஏற்ப உங்கள் வீட்டை மாற்றி அமைக்க வேண்டிய தேவைகள் இருக்காது. உங்களுக்கு பிடித்த மாதிரியான ஒரு பொருளை உங்களுக்கென தனிப்பயனாக்கப்பட்ட முறையில் வாங்கி பயன்படுத்தும் போது ஒரு தன்னிறைவு ஏற்படும்.
நல்ல தரமான ஒரு பொருளை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால் நீண்ட காலத்திற்கு அது உழைக்கும் எனவே உங்களது முதலீடு நல்ல பலனை தரக் கூடியதாக இருக்கும். உங்கள் தேவைக்கேற்பவும் நீங்கள் அதனை மாற்றி வடிவமைத்துக் கொள்ளலாம். சில பொருட்கள் காலம் காலமாக பரம்பரை பரம்பரையாக அவர்களது வாரிசுகளுக்கு வழங்கப்படும் அந்த வகையில் இது ஒரு நினைவு பொருளாகவும் உங்களது வீட்டில் இருக்கும்.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications