சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று எண்ணும் பெரும்பாலானோர் வங்கியில் ஹோம் லோன் பெறுகின்றனர். இந்த வகைக் கடன்களை 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள், 25 ஆண்டுகள் மற்றும் 30 ஆண்டுகள் என ஒருவர் வாங்கும் கடன் தொகைக்கு ஏற்ப திருப்பிச் செலுத்த வேண்டும். கடன் வாங்கிய தேதியிலிருந்து கடன் முடியும் வரை மாதா மாதம் ஈஎம்ஐ செலுத்த வேண்டும்.
ஆனால் சில மாதங்களிலேயே சீக்கிரம் கடனை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கடன் பெற்றவர்களுக்கு வந்து விடும். அதற்கான ஒரு வழி தான் ஹோம் லோன் ப்ரீபேமெண்ட். அதாவது வாங்கிய கடனின் அசல் தொகையில் கிடைக்கும் பணத்தை வரவு வைப்பது. இந்த வசதியின் மூலம் கடன் காலம் முடிவு பெறுவதற்குள் முழுக்கடனையும் திருப்பிச் செலுத்தி விடலாம். ஆனால் ப்ரீ பேமெண்ட் வசதியை கருத்தில் கொள்வதற்கு முன்பு சில விஷயங்களை ஆராய வேண்டும்.

பிற தேவைகளுக்கான நிதி: உங்கள் வீட்டுக் கடனை முழுமையாகச் செலுத்த முடிவு செய்துவிட்டால் அதன் பிறகு வரும் திருமணம், வெளிநாட்டு பயணங்கள், அவசரகால செலவுகள் போன்ற குடும்ப தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உங்களிடம் போதிய நிதி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வீட்டு கடனை செலுத்துவதற்காக அதிக சுமையை ஏற்றுக் கொண்டாலும் நிதி பற்றாக்குறையில் சிக்கிக் கொள்ளும் ஆபத்து ஏற்படலாம். இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேறு எங்கிருந்தாவது கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். எனவே பிற்காலத்தில் வரும் செலவுகளை கருத்தில் கொண்டு முன் பணம் செலுத்துங்கள்.
முதலீட்டு திட்டங்களைத் தேடுங்கள்: வட்டியைக் குறைக்க முயற்சி செய்யும்போது இதைவிட அதிகமாக வட்டி வருமானம் கிடைக்கக்கூடிய முதலீட்டு திட்டங்கள் இருந்தால் அதில் பணத்தை முதலீடு செய்யலாம். உதாரணமாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும் போது வருமானமும் அதிகமாக வரும். ஆனால் இவை சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
கடனின் எந்தக் கட்டத்தில் முன் பணம் செலுத்துகிறீர்கள்: பொதுவாக வீட்டுக் கடனுக்கு ஆரம்பக் கட்டத்தில் ஈஎம்ஐ செலுத்தும் போது வட்டி பகுதி அதிகமாக இருக்கும்.. இத்தகைய சூழ்நிலையில் கடனின் ஆரம்பகட்டத்திலேயே நீங்கள் அதிகம் முன்பணம் செலுத்தினால் லட்சக்கணக்கான ரூபாய் வட்டியைச் சேமிக்கலாம். இது உங்களுக்கு இரட்டிப்புப் பலனைத் தரும். உங்கள் ஈஎம்ஐ சுமையும் குறையும். அதோடு வட்டிக்குச் செல்லும் லட்சக்கணக்கான தொகையும் சேமிக்கப்படும். ஆனால் கடனின் நடுப்பகுதியில் அல்லது கடன் முடியும்போது ப்ரீ பேமெண்ட் செய்வதால் எந்த பலனும் இல்லை.
வீட்டுக் கடனின் வரிச் சலுகைகள்: வீட்டுக் கடனின் அசல் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூ. 1.50 லட்சம் வரையில் வரி விலக்கு கோர முடியும். வீட்டுக் கடன் வட்டிக்கும் வரி விலக்கு பெறலாம்.
ப்ரீபேமெண்ட் செய்வதற்கான கட்டணம்: சில வங்கிகள் முன்கூட்டியே கடனை முடிப்பதற்கு கட்டணம் வசூலிக்கின்றன. எனவே இது போன்ற விவரங்கள் அனைத்தையும் உங்கள் கடன் வழங்குனர்களிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் பிரீ பேமெண்ட் குறித்து முடிவெடுங்கள்!
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications