மகாராஷ்ட்ரா : 10ஆம் வகுப்பு விடுமுறை காலத்தில் குழந்தைகள் என்ன செய்வார்கள்? விடுமுறை காலத்தை ஜாலியாக கழிக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால் மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகரை சேர்ந்த ஒரு சிறுமி தன்னுடைய பத்தாம் வகுப்பு விடுமுறை காலத்தை பயனுள்ள வகையில் கழித்து தற்போது ஒரு நிறுவனத்தையே உருவாக்கி இருக்கிறார்.
ஸ்ரத்தா தவான் இவருடைய தந்தை எருமை மாடுகளை வாங்கி விற்பனை செய்யும் நபர். எனவே இவர்கள் வீட்டில் எப்போதுமே எருமை மாடுகள் இருக்கும். அதுமட்டுமின்றி சிறிதாக இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலமும் இருக்கிறது.

தன்னுடைய பத்தாம் வகுப்பு விடுமுறையில் ஸ்ரத்தா, தன்னுடைய தந்தைக்கு தொழிலில் உதவி செய்ய சென்றுள்ளார் .அப்போது எப்படி எருமை மாடுகளை வாங்குவது என்னென்ன அடிப்படையில் அதற்கான விலையை நிர்ணயம் செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தொழில் யுத்திகளை கற்றுக் கொண்டார்.
அப்பொழுதுதான் நாம் ஏன் பால் விற்பனை செய்யக்கூடாது என்ற யோசனை ஸ்ரத்தாவுக்கு தோன்றியது. எனவே பள்ளி படிப்பை தொடர்ந்து கொண்டே பால் விற்பனையும் செய்து வந்தார். அப்படியே கல்லூரி படிப்பையும் முடித்தார். விடியற்காலையிலேயே 4 மணிக்கு எழுந்து பால் கறந்து அதனை விற்பனை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு 8 மணிக்கு இவர் கல்லூரிக்கு புறப்படுவார். மாலையில் மாடுகளை பராமரிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இப்படி 2013ஆம் ஆண்டில் தொழில் தொடங்கிய ஸ்ரத்தா 2017ஆம் ஆண்டில் ஸ்ரத்தா ஃபார்ம்ஸ் என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கினார். அப்போது இவர்களிடம் 30 எருமை மாடுகள் இருந்தன. உள்ளூரிலேயே ஆட்களை வேலைக்கு அமர்த்தி படிப்படியாக தன்னுடைய தொழிலை விரிவுபடுத்த தொடங்கினார். பாலுடன் நிறுத்தி விடாமல் பாலில் இருந்து நெய், மோர், லஸ்ஸி, தயிர், பன்னீர் உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்ய தொடங்கியுள்ளார்.
தற்போது இவர் 130 மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார். இது மட்டும் இன்றி இவர்கள் தயாரிக்கும் நெய் முற்றிலும் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதால் வாடிக்கையாளர்களிடையே இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தற்போது இவர்கள் மாட்டுச் சாணம் மற்றும் உள்ளிட்ட பிற கழிவுகளைக் கொண்டு மின்சாரம் தயாரித்து பயன்படுத்துகின்றனர். அது மட்டும் இன்றி உரம் தயாரிப்பிலும் ஈடுபடுகின்றனர். இந்த உரங்களை நேரடியாக விவசாயிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.
2024 ஆம் நிதி ஆண்டில் மட்டும் இவர்களின் நிறுவனம் 1 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளது. அதுமட்டுமின்றி சுமார் 8 லட்சம் பேர் அடங்கிய ஒரு மாபெரும் கம்யூனிட்டியையும் இந்த ஸ்டார்ட் அப் உருவாக்கியுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள், விவசாயிகள், விற்பனையாளர்கள் என ஏராளமானவர்கள் இடம்பெற்றுள்ளனர். நாள்தோறும் இவர்கள் 200 பேருக்கு தங்களுடைய பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்கின்றனர்.
ஸ்ரத்தா விவசாயிகளுக்கு பால் சம்பந்தப்பட்ட தொழில்களில் எப்படி ஈடுபடுவது என்பது குறித்த பயிற்சியையும் வழங்கி வருகிறார். தற்போது வரை இவர் 5,000 பேருக்கு பயிற்சி அளித்து இருப்பதாக தெரிவிக்கிறார்.
Story written by: Devika
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications