ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் ரூ.2,739.6 கோடி ஒருங்கிணைந்த லாபம்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த லாபம் 2,739.6 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

 

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 432.7 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது இந்த நிறுவனம்.

 
ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் ரூ.2,739.6 கோடி ஒருங்கிணைந்த லாபம்.. !

இந்த நிலையில் இந்த நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 411.7 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான வருமானம் 1,413 கோடி ரூபாய் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 1,001 கோடி ரூபாயாக இருந்தது என்றும் செபிக்கு அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் ரூ.2,739.6 கோடி ஒருங்கிணைந்த லாபம்.. !

கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் மொத்த செலவு 1,636.50 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 1,330.4 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த செப்டம்பர் மாத காலாண்டில், இந்த நிறுவனத்தின் நிகர நஷ்டம் 36 கோடி ரூபாயாகவும், இது முந்தைய ஆண்டில் 159 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே வருவாய் 1,295.1 கோடி ரூபாய் என்றும், இது முந்தைய ஆண்டு 956.40 கோடி ரூபாயாகவும் உள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் கடன் அளவு கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்த சொத்து மதிப்பு 31,771 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.

எனினும் அடுத்த பன்னிரண்டு மாதங்களில் செயல்பாட்டு பணப்பரிவர்த்தனையை உருவாக்க குழு நிர்வாகம் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது. இது இந்த குழுமத்தின் எதிர்காலம் பணக் கடமைகளை பூர்த்தி செய்ய உதவும் என்றும் செபிக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் நல்ல விஷயம் என்னவெனில் கடந்த ஆண்டை விட நஷ்டம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எனினும் கடந்த நிதியாண்டிலேயே நஷ்டத்தினை கண்ட இந்த நிறுவனம், நடப்பு நிதியாண்டில் எடுத்து வரும் நடவடிக்கைக்களால் இதன் லாபம் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கின் விலையானது 13 சதவிகிதம் அதிகரித்து 9.14 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Shree Renuka Sugars last sep quarter consolidated net profit increased to Rs 2,739 cr

Shree Renuka Sugars last sep quarter consolidated net profit increased to Rs 2,739 cr. and its share price up 13% now
Story first published: Monday, November 11, 2019, 11:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X