யாரு சாமி நீங்க..? MBBS, MD உட்பட 42 பட்டப்படிப்பு; IAS, IPS பதவி.. கடைசியில் அரசியல்வாதி - Shrikant Jichkar

ஒரு டிகிரியை முடித்து வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுவதே பெரும் சவாலாக இருக்கும் வேளையில், இங்கு ஒருவர் 42 பட்ட படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார். இது மட்டும் அல்லாமல் சிவில் சர்வீஸ் தேர்வை முடித்து அரசியலிலும் இறங்கியுள்ளார்.. உடம்பு முழுக்க மூலையா இருக்குமோ என்ற கேள்வி வருதுல்ல..? யார் இவர்..?

ஸ்ரீகாந்த் ஜிச்கர் பல்வேறு திறன்களை ஒருங்கே பெற்ற சிறந்த திறமைசாலி. அவர் ஒரு அரசியல்வாதியாகவும், சிவில் சர்வீஸ் அதிகாரியாகவும் மற்றும் ஆராய்ச்சியாளர், மருத்துவர், வழக்குரைஞர், பத்திரிகையாளர், நன்கொடையாளர் என பன்முகங்கள் கொண்ட மனிதர்.

யாரு சாமி நீங்க..?MBBS,MD உட்பட 42 பட்டப்படிப்பு;IAS, IPSபதவி.கடைசியில் அரசியல்வாதி-Shrikant Jichkar

2004 ஆம் ஆண்டில் நிகழந்து மிக மோசமான கார் விபத்தில் ஸ்ரீகாந்த் ஜிச்கர் உயிரிழந்தார். ஆனால் அவர் தனது பெயரை இந்திய வரலாற்றில் நிரந்தரமாக பொறிக்க வைத்தார்.

ஸ்ரீகாந்த் ஜிச்கர் ஒரு மராத்தி குடும்பத்தைச் சேர்ந்தவர், அவர் செப்டம்பர் 14, 1954 இல் பிறந்தார், இந்தியாவின் மிகவும் படித்த நபராக பலரால் பரவலாகக் கருதப்படுகிறார். ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த ஸ்ரீகாந்த் ஜிச்கர் பணியில் இருந்து விலகி அரசியலில் நுழைந்தார்.

ஸ்ரீகாந்த் ஜிச்கர் வெறும் 26 வயதில், அவர் இந்தியாவின் இளம் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். ஜிச்கர் சுமார் 20 பல்கலைக்கழகங்களில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? நாக்பூர் பல்கலைகழகத்தில் மருத்துவ துறையில் இருந்து எம்பிபிஎஸ், எம்டி பட்டங்களைப் பெற்ற பிறகு..

யாரு சாமி நீங்க..?MBBS,MD உட்பட 42 பட்டப்படிப்பு;IAS, IPSபதவி.கடைசியில் அரசியல்வாதி-Shrikant Jichkar

ஸ்ரீகாந்த் ஜிச்கர் பொது நிர்வாகம், சமூகவியல், பொருளாதாரம், சம்ஸ்கிருதம், வரலாறு, ஆங்கில இலக்கியம், தத்துவம், அரசியல் அறிவியல், பண்டைய இந்திய வரலாறு, கலாசாரம் மற்றும் தொல்லியல் ஆகியவற்றில் பட்டங்களைப் பெற்றார்.

சர்வதேச சட்டத்தில் முதுகலைப் பட்டம், வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம், வணிக மேலாண்மை மருத்துவர், இதழியலில் இளங்கலைப் பட்டம், சம்ஸ்கிருதத்தில் இலக்கிய முனைவர் ஆகிய பட்டங்களையும் பெற்றார். ஸ்ரீகாந்த் ஜிச்கர் மிகவும் பிரகாசமான மாணவராக இருந்தார். அவர் தனது சிறந்த கல்வி பட்டங்களுக்காக பல தங்கப் பதக்கங்களைப் பெற்றார்.

1973 மற்றும் 1990 க்கு இடையில், ஸ்ரீகாந்த் ஜிச்கர் 42 பல்கலைக்கழக தேர்வுகளில் பங்கேற்றார். ஒவ்வொரு கோடை மற்றும் குளிர்காலத்திலும் அவர் இந்த தேர்வுகளை எழுதியுள்ளார். ஸ்ரீகாந்த் ஜிச்கர் 1978 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய காவல்துறை சேவை கேடரில் மத்திய அரசு ஊழியராக நியமிக்கப்பட்டார்.

ஐஏஎஸ் அதிகாரி ஆவதற்காக யுபிஎஸ்சி தேர்வை மீண்டும் எடுப்பதற்கு முன்பு 1980 இல் ஜிச்கர் கேடரில் இருந்து ராஜிநாமா செய்தார். ஐஏஎஸ் பணியில் சேர்ந்த சில வாரங்களிலேயே ஜிச்கர் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ-வாக வெற்றி பெற்றார். ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்து அமைச்சரானார்.

ஜூன் 2, 2004 அன்று, நாக்பூரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொண்டலிக்கு அருகில், அப்போது 49 வயதான ஸ்ரீகாந்த் ஜிச்கர் கார் விபத்தில் உயிரிழந்தார்.

மகாராஷ்டிரா அரசாங்கத்தில் மாநில அமைச்சராகப் பணியாற்றிய ஸ்ரீகாந்த், 1980 முதல் 1985 வரை மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராகவும், 1986 முதல் 1992 வரை மகாராஷ்டிர சட்டப் பேரவை உறுப்பினராகவும் இருந்தார். 1992-1998 இல் அவர் ராஜ்யசபா எம்பியாகவும் பணியாற்றினார். ஸ்ரீகாந்த் ஜிச்கர் 1992 இல் நாக்பூரில் சாந்திபானி பள்ளியை நிறுவினார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+