டெல்லி: ஸ்ரீ ராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் (ஸ்ரீ ராம் சிட்டி) இரு சக்கர வாகன நிதி நிறுவனமானது, குறைந்த வட்டியில் கடன் திட்டத்தினை அறிவித்துள்ளது
இந்த விழாகால சலுகை மூலம் குறைந்தபட்சமாக 5.5% வரையில் வட்டி விகிதத்தினை பெறலாம்.
வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தில் சரியாக மாத தவணை செலுத்தும்பட்சத்தில், ஒரு இஎம்ஐ-யினை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
என்னென்ன சலுகைகள்?
இந்த ஆஃபரின் மூலம் கடன் பெறுபவர்களுக்கு உடனடி ஒப்புதல், செயல்பாட்டுக் கட்டணம் என்பது இல்லை. மறைமுக செலவுகள் என்பது இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் முன்னதாக ஒரு தொகையை கட்ட வேண்டிய அவசியம் என்பது இல்லை. ஸ்ரீ ராமின் அனைத்து சலுகைகளும் நவம்பர் 30 வரையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
ஸ்ரீ ராமின் இருசக்கர வாகன கடன் சலுகையில் வட்டி குறைந்தபட்சமாக 5.5% ஆகும்.
100% வாகனத்தின் முழு மதிப்பும் கடனாக கிடைக்கும். இது விழாக்கால பருவத்தில் வாடிக்கையாளர்களின் செலவினை குறைக்க வழிவகுக்கும். இந்த நிதி சலுகையானது அனைத்து நிறுவன வாகனங்களுக்கும் கிடைக்கும் என கூறப்படுகின்றது.
Triple zero scheme
இந்த கடனுக்கு 2 நிமிடத்தில் ஒப்புதல் வழங்கப்படுகின்றது. இது ஒரு Triple zero scheme ஆகும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் செயல்பாட்டு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. ஆவணக் கட்டணம் எதுவும் இல்லை. வாகனம் வாங்கும்போது முன்ன கூட்டியேயான தொகையை (EMI) கட்ட வேண்டிய அவசியம் என்பது இல்லை.
கேஸ்பேக் ஆஃபர்
வாடிக்கையாளர்கள் இந்த சலுகையின் மூலம் பெறும் கடனை சரியாக செலுத்தினால், ஒரு மாத தவணை தொகையை திரும்ப பெறலாம்.
விழாகால பருவத்தில் தேவையானது அதிகரிக்கலாம். குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் தேவை அதிகரிக்கலாம். நகர்ப்புற பகுதிகளிலும் தேவை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாக்கால பருவத்திற்கு முன்பே ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் வாகனங்களின் தேவையான அதிகரித்தே காணப்படுகிறது.
தேவை அதிகரிக்கலாம்
ஸ்ரீ ராமின் இந்த சலுகையானது விழாக்கால பருவத்தில், மேற்கொண்டு விற்பனையை அதிகரிக்க வழிவகுக்கலாம் எனலாம். கொரோனாவுக்கு முன்பை விட தற்போது பொருளாதாரம் வளர்ச்சியினை எட்டத் தொடங்கியுள்ள நிலையில், தேவை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications