சென்னை: ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து தற்போது பல ஆயிரம் கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கும் சென்னையை சேர்ந்த தொழிலதிபரின் கதை தான் இது.
ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் தியாகராஜன் சென்னையில் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவர். 1961 ஆம் ஆண்டு இந்தியாவில் இயங்கி வந்த காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அப்போது அவருக்கு பணி ஊக்கத்தொகையாக 500 ரூபாய் வழங்கப்பட்டது.

1972 ஆம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையிலான அரசு இந்த நிறுவனத்தை அரசுடைமை ஆக்கியது. அப்போது தியாகராஜனுக்கு 37 வயது.
தன்னுடையை வேலையை விட்ட அவர், சாதாரண மக்களுக்கு எளிமையாக கடன் வழங்கும் ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என விரும்பினார். அதாவது கிரெடிட் ஹிஸ்டரி பார்க்காமல் மக்களுக்கு கடன் வழங்கும் நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்பதுதான் இவரது ஐடியா.
அப்படித்தான் ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனம் தொடங்கியது. சீட்டு நடத்தி மக்களிடம் பணத்தை டெபாசிட் பெற்று , சரக்கு வாகனங்களை வாங்குபவர்களுக்கு கடன் வழங்குவது என சாமானிய மக்களுக்கு என உகந்த நிதி நிறுவனமாக உருவெடுத்தது.
1974 ஆம் ஆண்டு இது அதிகாரப்பூர்வமாக ஸ்ரீராம் சிட் பண்ட்ஸ் நிறுவனம் என்றானது. 1979 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் பெயரை ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் கம்பெனி என மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிறுவனம் 2 லட்சம் டெபாசிட்டர்களிடமிருந்து சுமார் 800 கோடி டெபாசிட் பெற்று 1984 ஆம் ஆண்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. இதனை அடுத்து டாடா மோட்டார்ஸ் மற்றும் அசோக் லேலாண்ட் ஆகிய நிறுவனங்கள் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் கம்பெனியின் 15 சதவீத பங்குகளை கையகப்படுத்தின.
2006 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் 100 கோடி ரூபாய் லாபத்தில் இயங்கும் நிறுவனமாக மாறியது. பல்வேறு சவால்கள் வந்த போதிலும் டெபாசிட்டர்கள் இவரது நிறுவனத்தை நம்பி முதலீடு செய்தனர். அந்த வகையில் 2019 ஆம் ஆண்டில் 1 லட்சம் கோடி பணத்தை கையாளும் நிறுவனமாக ஸ்ரீராம் பைனான்ஸ் மாறியது. இந்த நிறுவனம் தற்போது வீட்டு கடன், காப்பீடு ,போக்குவரத்து, நிதி மேலாண்மை மற்றும் ரியல் எஸ்டேட் என பல்வேறு துறைகளில் இயங்கி வருகிறது. 23 மில்லியன் வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்திற்கு இருக்கிறார்கள்.
இந்த நிறுவனம் 2,33,443 கோடி மதிப்பிலான சொத்துகளை மேலாண்மை செய்கிறது. இந்த நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 70 ,400 கோடி ரூபாய் ஆகும். ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தை இவ்வளவு பெரிய உயரத்திற்கு அழைத்து சென்ற தியாகராஜன் இதுவரை சொந்தமாக மொபைல் போன் கூட பயன்படுத்துவதில்லையாம். இவர் தன்னிடம் இருந்து 6,120 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ஊழியர்களுக்கு வழங்கியதில் தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தார்.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications