இந்திய கிரிக்கெட் வீரரான சுப்மன் கில், தனது திறமையான ஆட்டத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார். பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்ப முடியாத வகையில் சதம் அடித்தார். அவருடைய சிறந்த ஆட்டம் காரணமாக, இந்தியாவின் மிகவும் நம்பகமான பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும், அணியின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்து வருகிறார்.
இவர் இந்திய அணிக்காக அதிவேகமாக சதங்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சச்சின் டெண்டுல்கர், ஷிகர் தவான், கவுதம் கம்பீர், விராட் கோலி போன்ற வீரர்களின் சாதனையையும் முறியடித்துள்ளார்.

ரசிகர்களை பொறுத்தவரையில்.. அது கிரிக்கெட் ரசிகர்களானாலும் சரி, திரைப்பட ரசிகர்களானாலும் சரி.,. அதில் வரும் பிரபலங்களின் சம்பளம் என்ன? அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறை என்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கும். அந்த வகையில் சுப்மன் கில் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்? அவருடைய நிகர மதிப்பு என்ன? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
சுப்மன் கில் தனது நம்ப முடியாத ஆட்டத்தின் மூலம் விரைவாகப் பிரபலமானார். மைதானத்தை தாண்டி பல்வேறு ஒப்பந்தங்களையும் பெற்றுள்ளார். 2025-ஆம் ஆண்டு நிலவரப்படி சுப்மன் கில்லின் நிகர மதிப்பு ரூ. 32 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது அவருடைய பிசிசிஐ காண்ட்ராக்ட், ஐபிஎல் வருமானம் போன்றவற்றிலிருந்து பெறப்பட்டது.
ஐபிஎல் மற்றும் பிசிசிஐ சம்பளம்: 2025-ஆம் ஆண்டின் இந்தியன் பிரிமியர் லீக்கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ரூ.16.50 கோடிக்கு கையெழுத்திட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டில் அவருக்கு சம்பளமாக ரூ.1.80 கோடி வழங்கப்பட்டது. அதன் பிறகு சுப்மன் கில்லின் வருமானம் வியக்கத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. அதோடு சுப்மன் கில் பிசிசிஐ காண்ட்ராக்ட் மூலமாக ஆண்டுக்கு ரூ. 5 கோடி சம்பளம் பெறுகிறார்.
பிராண்ட் விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் வருமானம்: கிரிக்கெட்டை தாண்டி விளம்பரங்களின் மூலமாகவும் சுப்மன் கில் வருமானம் பெறுகிறார். ஜில்லட், டாட்டா கேபிடல் மற்றும் மை11சர்க்கிள் போன்ற பிரபலமான நிறுவனங்களுடன் இணைந்து விளம்பரங்களின் மூலமும் வருமானம் பெறுகிறார். 14.9 மில்லியன் இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ்களை கொண்ட இவர் சமூக ஊடக விளம்பரங்கள் மற்றும் நிறுவன விளம்பரங்களில் இருந்தும் வருமானம் பெறுகிறார்.
சுப்மன் கில்லின் ஆடம்பர சொத்துக்கள்: இவரிடம் சொகுசு கார்கள் மற்றும் உயர்ரக கைக்கடிகாரங்கள் உள்ளன.
மெர்சிடிஸ் பென்ஸ் E350: 90 லட்சம் ரூபாய்.
ரேஞ்ச் ரோவர் வேலார்: 80 லட்சம் ரூபாய்
ஜெரால்ட் சார்லஸ் மேஸ்ட்ரோ, ஜி-ஷாக் மற்றும் ரோலக்ஸ் போன்ற லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உயர் ரக கடிகாரங்களையும் வைத்திருக்கிறார்.
ரியல் எஸ்டேட் முதலீடுகள்: பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் நவீன வசதிகளுடன் கூடிய ஒரு ஆடம்பரமான வீட்டை சுப்மன் கில் வைத்திருக்கிறார். அவரது மற்ற ரியல் எஸ்டேட் சொத்துக்கள் பற்றிய விவரங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications