இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லையா.. டிசம்பர் மாதத்திலும் வீழ்ச்சி தானா.. கதறும் உற்பத்தியாளர்கள்!

டெல்லி: கடந்த பல மாதங்களாகவே ஆட்டோமொபைல் துறைக்கு மிக மோசமான காலமே.

சொல்லப்போனால் மிக மோசமான காலமே. ஏனெனில் ஒரு புறம் விற்பனை சரிவு. மறுபுறம் உற்பத்தி குறைப்பு. இதன் எதிரொலியாக பணி நீக்கம் என பிரச்சனைகள் போட்டி போட்டு கொண்டு விமானத்தில் வந்து இறங்கின.

ஆக எந்த புறம் எடுத்தாலும் அடி வாங்கிக் கொண்டிருக்கும் ஆட்டோமொபைல் துறைக்கு, இன்னும் விடிவுகாலம் வரவில்லை என்று தான் கூற வேண்டும்.

விற்பனை வீழ்ச்சி

விற்பனை வீழ்ச்சி

இதனை எதிரொலிக்கும் விதமாக கடந்த டிசம்பர் மாதத்தில் கார் விற்பனையானது 8.4% சதவிகிதம் வீழ்ச்சி கண்டு 1,42,126 யூனிட்களாக வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவே முந்தைய ஆண்டில் இதே மாதத்தில் 1,55,159 யூனிட்களாக விற்பனை செய்யப்பட்டு இருந்தது என்றும் சியாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

பயணிகள் வாகன விற்பனை

பயணிகள் வாகன விற்பனை

உள்நாட்டு சந்தையில் பயணிகள் வாகன விற்பனையானது 1.24% குறைந்து, 2,35,786 யூனிட்கள் மட்டும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவே முந்தைய ஆண்டு இதே மாதத்தில் 2,38,753 யூனிட்களாக விற்பனை செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே போல் மோட்டார் சைக்கிள் வாகன விற்பனையும் 12.01% வீழ்ச்சி கண்டுள்ளது.

இரு சக்கர வாகன விற்பனை

இரு சக்கர வாகன விற்பனை

கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது மோட்டார் சைக்கிள் வாகன விற்பனையும் 12.01% வீழ்ச்சி கண்டு, 6,97,819 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டில் டிசம்பர் 2018ல் 7,93,042 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் சியாம் அறிக்கைகள் கூறுகின்றன.

ஒட்டுமொத்த இருசக்கர வாகன விற்பனை

ஒட்டுமொத்த இருசக்கர வாகன விற்பனை

சியாம் அறிக்கையின் படி, ஒட்டுமொத்த இரு சக்கர வாகன விற்பனையானது, 16.6% குறைந்து, 10,50,038 யூனிட்கள் ஆக குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது முந்தைய ஆண்டில் 12,59,007 யூனிட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே வர்த்தக வாகன விற்பனையும் 12.32% குறைந்து 66,622 யூனிட்களாக இருந்தது.

பல்வேறு வாகன விற்பனை

பல்வேறு வாகன விற்பனை

இதோடு பல்வேறு பிரிவுகளின் வாகன விற்பனையானது 13.08% வீழ்ச்சி கண்டு 14,05,776 யூனிட்களாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டு டிசம்பரில் 16,17,398 யூனிட்கள் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர் வீழ்ச்சி கண்டு வரும் இந்த வாகன விற்பனையானது, இனி வரவிருக்கும் மாதங்களில் ஆவது அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 ஒட்டுமொத்த காலாண்டு

ஒட்டுமொத்த காலாண்டு

2019ம் ஆண்டின் டிசம்பர் காலாண்டில் பயணிகள் வாகனங்களின் விற்பனை 29,62,052 யூனிட்களாக குறைந்துள்ளது. இதே 2018ல் 33,94,790 யூனிட்களாக இருந்துள்ளது. இது கிட்டதட்ட 12.75% குறைந்துள்ளது. பிரிவுகள் வாரியாக வாகன விற்பனை 13.77% சரிந்து 2,30,73,438 ஆகவும், இது 2018ல் 2,67,58,787 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுசூகி அபாரம்

மாருதி சுசூகி அபாரம்

ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையும் வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், மாருதி சுசூகி டிசம்பர் மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 1,24,375 யூனிட்களாக அதிகரித்துள்ளாதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது முந்தைய ஆண்டில் 1,21,479 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது சுமார் 2.4% வளர்ச்சியாகும்.

எம்&எம் வளர்ச்சி

எம்&எம் வளர்ச்சி

இதே போல் மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனமும் கடந்த டிசம்பர் மாதத்தில் 1% உள்நாட்டு விற்பனை அதிகரித்து, 37,081 யூனிட்களாக இருந்ததாகவும், இதுவே முந்தைய ஆண்டு இதே டிசம்பர் மாதத்தில் 36,690 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+