தொழிலதிபர் விஜய் மல்லையா தனது மகன் சித்தார்த்தா மல்லையா, மருமகள் ஜாஸ்மீன் திருமணத்தில் பங்கேற்ற படம் வெளியாகியுள்ளது. இந்த ஜோடியின் திருமணம் லண்டனில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்தியாவிலிருந்து தப்பியோடிய பிறகு மதுபான அதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்தில் ஆடம்பரமாகவே வசித்து வருகிறார். அவர் மீது 900 கோடி கடன் மோசடி வழக்கை அமலாக்கத் துறையும் மற்றும் சிபிஐ தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

68 வயதான முன்னாள் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் அதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் பல வங்கிகளில் முறைகேடாக கடன் பெற்று, வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பியோடிவிட்டார். இதன் மூலம் இவர் மீது பணப் பரிவர்த்தனை மற்றும் கடன் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது விஜய் மல்லையாவை லண்டனில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சிகள் நடந்து வருகிறது.
விஜய் மல்லையாவுடன் மற்றொரு தேடப்பட்டு வரும் குற்றவாளியான தொழிலதிபரும் முன்னாள் ஐபிஎல் தலைவருமான லலித் மோடியும் இந்தத் திருமணத்தில் பங்கேற்றுள்ளார். லலித் மோடி மீது வரி ஏய்ப்பு தொடர்பாக ரூ.700 கோடிக்கு மேலாக சட்ட விரோத பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளன.
ஐபிஎல் 2010க்குப் பின்னர் லலித் மோடியை இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கியது. கிரிக்கெட் வாரியத்தின் ரூ.753 கோடியை லலித் மோடி ஏய்த்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த்தா மல்லையா, ஜாஸ்மின் திருமணம் முதலில் கிருஸ்துவ முறைப்படியும், அதை தொடர்ந்து ஹிந்து முறைப்படியும் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சி சமூக தளத்தில் வெளியிடப்பட்டது.
தங்களது திருமணம் பற்றி சித்தார்த்தாவும் ஜாஸ்மினும் சமுக தளங்களில் கடந்த வாரம் தகவல் வெளியிட்டனர்.
விஜய் மல்லையா மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையிலும் அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் அமலாக்கத் துறையும் சிபிஐயும் ஈடுபட்டுள்ளன. அதேபோல லலித் மோடியையும் இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரிக்கும் நடவடிக்கையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தனது மகன் சித்தார்த்தா மல்லையாவின் திருமணத்துக்கு விஜய் மல்லையா வந்து கலந்து கொள்வாரா என்ற கேள்வி வந்தது. ஆனால் அவர் வந்து கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி ஆசி வழங்கினார். அதேபோல் லலித் மோடியும் எதிர்பாராத விருந்தாளியாக இந்த திருமணத்துக்கு வந்திருந்தார்.
கோடிக்கணக்கில் பண மோசடியை செய்து விட்டு விஜய் மல்லையாவும் லலித் மோடியும் பகிரங்கமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்துள்ளது.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications