தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மோசடிகள் பற்றி சொல்லவே வேண்டாம். அகில உலகுக்கே தெரியும். ஆனால் அவர் எப்படி கவிழ்ந்தார் என்பது பரவலாகத் தெரியாது.
ஒரு காலத்தில் தி கிங் ஆப் குட் டைம்ஸ் என்று பெருமையுடன் அழைக்கப்பட்ட விஜய் மல்லையா தனது கண்மூடித்தனமான உல்லாச வாழ்க்கையால் சமூக அந்தஸ்தில் அதல பாதாளத்துக்குச் சென்று விட்டார் என கூறப்பட்டாலும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் வீழ்ச்சியை தடுக்க கடனுக்கு மேல் கடன் வாங்கியதாலேயே வீழ்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் கடன் தலைக்கு மேல் சென்ற நிலையில் கிங்பிஷர் ஏர்லைன்ஸின் கடனைத் திரும்பச் செலுத்தவில்லையென்பதால் வங்கி மோசடியாளர் என்று மதுபான சக்கரவர்த்தியான விஜய் மல்லையா அறிவிக்கப்பட்டார். இதையடுத்து 2022 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தால் ரூ.2000 கோடி அபராதமும் நான்கு மாத சிறைவாசமும் விதிக்கப்பட்டது.

அவரது மோசடிகள் அவரை மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினரையும் பாதித்துள்ளது. நடிப்பு வாய்ப்பைத் தேடிவரும் அவரது மகன் சித்தார்த் மல்லையா இந்திய சினிமா துறையில் தனக்கென்று ஒரு இடத்தைப் பெறுவதில் தோல்வி அடைந்து விட்டார்.
விஜய் மல்லையா, சாமீரா தியாப்ஜீ மல்லையா தம்பதிக்கு 1987 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சித்தார்த் மல்லையா பிறந்தார். அவரது பிறப்புக்குப் பின்னர் சித்தார்த்தின் குடும்பம் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்துவிட்டதால் அவரது இளமைக்காலம் பெரும்பாலும் இங்கிலாந்திலேயே கழிந்தது.
ஆஸ்காட்டில் உள்ள பாப்பிள்விக் ஸ்கூலில் ஹாஸ்டலில் தங்கி சித்தார்த் படித்தார்.
பின்னர் பெர்க்ஷையரில் உள்ள வெல்லிங்டன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். இதைத் தொடர்ந்து லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தில் பிஸினஸ் மேனேஜ்மென்ட் இளங்கலைப் பட்டத்தை முடித்தார். அந்தப் பல்கலைக்கழகத்தின் ஹாக்கி அணியில் சித்தார்த் இடம் பெற்றிருந்தார்.
லண்டன் பல்கலைக்கழகத்தின் ராயல் சென்ட்ரல் ஸ்கூலில் ஸ்பீச் மற்றும் டிராமாவில் முதுகலை பட்டத்தை முடித்தார். அவரது பட்டப்படிப்புக்குப் பின்னர் கின்னஸின் அசிஸ்டென்ட் பிராண்டு மேனேஜராக ஓராண்டு பணியாற்றினார். யுனைடெட் ப்ரூவரிஸீன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இயக்குநராக 2010 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
ஆர்சிபியை சித்தார்த் கையாண்டபோது முதன்முறையாக ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்ய வைத்தார். 2012இல் நோ பவுண்டரிஸ் என்ற ஒரு இன்டர்நெட் புரோகிராமை தொடங்கினார். அவரே நிகழ்ச்சிகளை தயாரித்து தொகுத்து அளித்தார். பின்னர் அவரது டீமின் வெப்சைட் எபிசோடுகளை அப்லோடு செய்தது.
பல்வேறு துறைகளில் தனது அதிர்ஷ்டத்தை சித்தார்த் சோதித்தார். 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற லாக்மே பேஷன் வீக் நிகழ்ச்சியின்போது டிசைனர் கோமல் சூட்டின் ஷோ-ஸ்டாப்பராக இருந்தார். இதைத் தொடர்ந்து இந்தியன் பிரைடல் வீக்கில் டிசைனர்கள் ஷாந்தனு, நிகில் ஆகியோருக்கு ஒரு மாடலாகக் கலந்து கொண்டார். 7000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலநது கொண்டதில் ஏபிசி டேலன்ட் ஷோகேஸ் நிகழ்ச்சிக்கான 20 பேரில் சித்தார்த்தும் தேர்வானார்.
சித் செஷன்ஸ் என்ற யூடியூப் நிகழ்ச்சியை 2014இல் தொடங்கினார். பிராமன் நமன் செக்ஸ் காமெடி நிகழ்ச்சியில் நடிப்பில் அறிமுகமானார். ஸ்டீவ் பேர்ரன் தயாரித்து இயக்கிய இந்த நிகழ்ச்சியில் சித்தார்த் ஒரு பணக்கார, கவர்ச்சிகரமான, பெண்களால் ஈர்க்கப்பட்ட நபராக நடித்திருந்தார்.
If I'm Honest: A Memoir of My Mental Health Journey- என்ற தனது வாழ்க்கை வரலாற்றில் அவர் சந்தித்த மதுபழக்கம், மன உளைச்சல்கள், பெற்றோரின் விவாகரத்து பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தகம் 2021 ஆம் ஆண்டில் வெளியானது.
அப்பாவைப் போலவே சித்தார்த்தும் பல பிரச்னைகளில் சிக்கிக் கொண்டார்.
நடிகை தீபிகா படுகோனுடன் உறவில் இருப்பதாக அவர் கிளப்பிய வதந்தி செய்தியில் பலமாக அடிபட்டது. இருவரும் எப்போதும் தாங்கள் ஒரு ஜோடி என்று வெளிப்படையாகக் கூறியதில்லை. இருப்பினும் இருவரும் சட்டென்று உறவைத் துண்டித்துக் கொண்டனர்.
இப்போது சித்தார்த் மல்லையா தனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். ஜாஸ்மின் என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது தந்தையை நம்பாமல் தனது வாழ்க்கையை தானே ஒவ்வொரு செங்கல் ஆக கட்டியமைத்து எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications