ஸ்டாலின் கார் திடீரென சிறுசேரி பக்கம் திரும்பியது ஏன்..?

தமிழ்நாடு பொருளாதாரம், தனிநபர் வருமானத்தின் அளவு வேகமாக வளர்ச்சி அடைய மிக முக்கியமான காரணங்களில் ஒன்று ஐடி சேவைத் துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப திறன் வாய்ந்த பட்டதாரிகளை உருவாக்கியது தான்.

இந்த நிலையில் இத்துறையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குச் சிறப்பான அடித்தளம் அமைக்கும் விதமாக தமிழ்நாடு அரசு டேட்டா சென்டர் அமைக்கும் திட்டங்களை வேமாக செயல்படுத்தி வரும் வேளையில் தமிழக முதல்வர் இன்று மிகப்பெரிய டேட்டா சென்டரை திறந்து வைத்துள்ளார்.

ஸ்டாலின் கார் திடீரென சிறுசேரி பக்கம் திரும்பியது ஏன்..?

தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பைக் கூடுதலாக வலுப்பெறும் வகையில், சென்னை சிறுசேரி சிப்காட் தொழிற்பூங்காவில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) டேட்டா சென்டர் கேம்பஸ் நிறுவப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான வளாகத்தை இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

சிஃபி இன்ஃபினிட் ஸ்பேசஸ் லிமிடெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த அதிநவீன டேட்டா சென்டர் மொத்தம் 1,882 கோடி முதலீட்டில் 130 மெகாவாட் திறன் கொண்ட டேட்டா சென்டரை உருவாக்கியுள்ளது. இது தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய AI-ரெடி டேட்டா சென்டர் கேம்பஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டை, இந்தியாவின் டேட்டா சென்டர் ஹப் ஆக நிலைநிறுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு இந்த அதிநவீன டேட்டா சென்டர் வளாகத்தின் திறப்பு விழா முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இந்த டேட்டா சென்டர் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு தொடர்ந்து டிஜிட்டல் மயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதன் விளைவாக, இதுபோன்ற அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் அடுத்தடுத்து சென்னையில் திறக்கப்பட்டு வருகிறது.

சிஃபி டெக்னாலஜிஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜு வேகேசனா இந்தத் திறப்பு விழாவில் பேசுகையில், ஆரம்பத்தில் ரூ.2,500 கோடியாக இருந்த நிறுவனத்தின் முதலீடு தற்போது ரூ.10,000 கோடியைத் தாண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இது வெறும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவது மட்டுமல்லாமல், புதிய வாய்ப்புகளை உருவாக்கம், மாபெரும் கனவுகளை நினைவாக்குவதற்குமான ஒரு சூழலையும் உருவாக்குகிறது என்று அவர் தெரிவித்தார்.

ஸ்டாலின் கார் திடீரென சிறுசேரி பக்கம் திரும்பியது ஏன்..?

இந்த புதிய டேட்டா சென்டர் முழுமையாகச் செயல்படத் தொடங்கியவுடன், நேரடி மற்றும் மறைமுக சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று ராஜு வேகேசனா தெரிவித்தார். இந்த டேட்டா சென்டர் வெறும் உள்கட்டமைப்பு மட்டுமல்ல, AI, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் அதிவேக தரவு சொல்யூஷன் பயன்படுத்த விரும்பும் நிறுவனங்களுக்கும், அரசாங்கங்களுக்கும் இது ஒரு நுழைவாயிலாக இருக்கும் என்றும் ராஜு வேகேசனா கூறினார்.

இந்த புதிய டேட்டா சென்டர், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகள் தங்கள் டிஜிட்டல் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆராய்ச்சிகள் மற்றும் பயன்பாடுகளுக்கு இந்த டேட்டா சென்டர் ஒரு முக்கிய ஊக்கியாக செயல்படும். இதன் மூலம், தமிழகம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மேலும் ஒரு படி முன்னேறும் என்றும், புதிய முதலீடுகள் ஈர்க்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+