சென்னை: ஐடி மற்றும் ஐடீஸ் துறைகளில் 2024 ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் "சைலெண்ட் பணி நீக்கம்" செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய ஐடி மற்றும் ஐடீஸ் ஊழியர் சங்கம் (AIITEU) குற்றம் சாட்டியுள்ளது.
இந்திய ஐடி சேவைத் துறை மோசமான வர்த்தகத்தை எதிர்கொண்டு வருவது மட்டும் அல்லாமல், புதிய வர்த்தகத்தைப் பெறுவது பெரும் போராட்டமாகியுள்ளது. இதற்கிடையில் கடந்த வாரம் அமெரிக்க வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் டெக் சேவைக்காக செலவு செய்வதைக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் இந்திய ஐடி சேவைத் துறை குறுகிய காலத்திற்கு வர்த்தக பாதிப்பை எதிர்கொள்ளும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஐடி துறையில் கடந்த 2-3 வருடமாக மந்தநிலையை எதிர்கொண்டு இருக்கும் வேளையிலும் யாரையும் பணிநீக்கம் செய்யவில்லை என்று தான் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் 2024 ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் "சைலெண்ட் பணி நீக்கம்" செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது என்ன..?
இதுகுறித்து AIITEU-வின் பொதுச் செயலாளர் சௌபிக் பட்டாச்சார்யா கூறுகையில், "இது பிரச்சனையின் ஒரு சிறு துளியே. சைலெண்ட் பணி நீக்கத்தில் பல வகை உள்ளது, கம்பெனியில் சேர்ந்த பிறகு background verification தோல்வி அடைந்ததாகக் கூறி பணி நீக்கம் செய்வது, வேலைக்கு எடுப்பதில் தாமதம், ஓவர்டைம்-க்கு சம்பளம் வழங்காதது, சொந்த ஊரில் இருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு பாயின்ட் ஆப் கான்டெக்ட் வழங்காதது என பல பிரச்சனைகள் இந்த துறையில் நிலவி வருகின்றன" என்று தெரிவித்தார்.
உண்மையான எண்ணிக்கை 20,000-ஐ விட அதிகமாக இருக்கும் என்பது எங்கள் அமைப்பின் கருத்து. நிறுவனங்கள் செலவைக் குறைப்பதற்காக, severance pay வழங்குவதைத் தவிர்க்க ஊழியர்களை ராஜினாமா செய்யக் கட்டாயப்படுத்துகின்றன என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
நாஸென்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி எம்பிளாயிஸ் செனேட் (NITES) அமைப்பின் தலைவர் ஹர்பிரீத் சிங் சலூஜா இந்த ஆண்டு முதல் ஐந்து மாதங்களில் மட்டும் சுமார் 2,000 முதல் 3,000 ஊழியர்கள் வேலை இழந்துள்ளதாகக் கூறினார்.

"மேலும், இந்த சைலெண்ட் பணி நீக்கங்கள் பல்வேறு இடங்கள், நகரங்கள் மற்றும் திட்டங்களில் நடக்கிறது. உதாரணமாக ஒரு திட்டத்தில் 80 பேர் பணியாற்றி வந்தால், இதில் பலர் பல இடத்தில் பணியாற்றுவார்கள். இந்த நிலையில் பல்வேறு காரணங்களைச் சொல்லி இரண்டு முதல் மூன்று பேரை வேலையை விட்டு நீக்குவார்கள்" என ஹர்பிரீத் சிங் சலூஜா கூறுகிறார்.
இந்திய ஐடி துறையில், சைலெண்ட் பணிநீக்கங்கள் மூலம் நிறுவனங்கள் ஊழியர்களை தாங்களாகவே வெளியேறத் தூண்டுகின்றன. இதன் மூலம் பணி நீக்கம் என்று அறிவிக்கும்போது திறமையான ஊழியர்கள் வேறு வேலை தேடாமல் இருப்பதும் தவிர்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த முறை வேலை செய்யும் சூழலைச் சீர்குலைத்து, நம்பிக்கை மற்றும் மரியாதையைக் குறைத்துவிடும், மேலும் வொர்க் கல்சரை இது சீர்குலைக்கும். இதைத் தவிர்க்க, நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு இடையே தெளிவான தகவல் தொடர்பு அவசியம் என்று CIEL HR சேவைகளின் துணைத் தலைவர் அனூப் மேனன் கூறினார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications