இந்திய தொழில்நுட்பத் துறையில் AI மற்றும் ஆட்டோமேஷன் ஏற்படுத்தும் மாற்றங்கள் மூலம் ஒவ்வொரு நிறுவனமும் பெரிய அளவிலான பணிநீக்கங்களை அறிவிக்க துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு பதிவான மோசமான பணிநீக்கத்தை காட்டிலும் இந்த ஆண்டு இரண்டு மடங்கு அதிக எண்ணிக்கையில் பணிநீக்கம் நடக்கும் என கூறப்படுகிறது. இதனால் இந்திய டெக் ஊழியர்கள் சோகத்திலும், அச்சத்திலும் மூழ்கியுள்ளனர்.
அமெரிக்காவின் முன்னணி டெக் நிறுவனங்கள் பெரிய அளவிலான பணிநீக்கங்களை அறிவித்துள்ள நிலையில், இந்த நிறுவனத்தின் இந்திய கிளையில் பணியாற்றும் நிறுவனங்களும் பணியை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் மட்டும் தானா என்றால் இல்லை, இந்தியாவிலும் சில நிறுவனங்கள் இதேபோன்ற பணிநீக்கத்தை பின்பற்றி வருகிறது என்பது தான் உண்மை. ஆனால் இந்தியாவில் மிகவும் கவலைக்குறிய விஷயம் என்னவென்றால் 'சைலெண்ட் பணிநீக்கங்கள்' என்ற புதிய முறையிலான பணிநீக்கம் தான். இது மற்ற துறைகளை காட்டிலும் தொழில்நுட்பத் துறை ஊழியர்களை பெரிதும் பாதிக்கிறது.
பொருளாதார நிபுணர்களின்படி, 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் மட்டும் சுமார் 50,000 பேருக்கும் அதிகமான எண்ணிக்கையிலான ஊழியர்கள் தங்கள் வேலைவாய்ப்பை இழக்கப்படலாம் என்று எகானமிக் டைம்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.
குளோபல் நிறுவனங்கள் லிஸ்டில் அமேசான், மெட்டா, சாப் என பல நிறுவனங்கள் தனது உலகளாவிய வர்த்தகத்தில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்திருக்கும் வேளையில், இதன் மூலம் இந்தியாவில் பணியாற்றும் சில ஊழியர்களும் பாதிக்கப்பட உள்ளனர்.
இதுவே இந்திய நிறுவனங்களை எடுத்துக்கொண்டால் டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் (TCS) 2025 ஜூலை மாதம் தனது ஊழியர்களின் 2 சதவீதத்தை (சுமார் 12,000 பேர்) 2026 மார்ச் மாத்திற்கும் நீக்கும் என்று அறிவித்தது. இந்த பணிநீக்கம், AI ஏற்படுத்தும் திறன் அதிகரிப்பு மற்றும் ஊழியர்களிடம் போதுமான திறன் இல்லாமை காரணமாக நடக்கிறது.
சைலெண்ட் பணிநீக்கங்கள்
தற்போது இந்தியாவில் பிரச்சனையை இந்த சைலெண்ட் பணிநீக்கங்கள் தான். இத்தகைய பணிநீக்கங்கள் பொது அறிவிப்பின்றி ஊழியர்களின் திறன் மதிப்பீடுகள், குறைந்த வேலை அளிப்பு, தாமதமான சம்பள உயர்வு மூலம் ஊழியர்களை பணிவிட்டு வெளியேற பயன்படுத்தும் புதிய அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2023-2024 இல் சுமார் 25,000 பேர் தங்களுடைய வேலையை இழந்தனர். இந்த எண்ணிக்கை 2025 இல் இரட்டிப்பாகலாம் என கணிக்கப்பட்டு உள்ளது. இதில் பிள்ளையார் சுழிப்போட்டது TCS நிறுவனம் தான். டிசிஎஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் வெளிப்படியாக பணிநீக்கத்தை அறிவித்த நிலையில் தொழிலாளர் அமைப்புகள் மூலம் கடுமையான எதிர்ப்புகளையும், பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வருகிறது.
இதனால் சிறிய நிறுவனங்கள் சைலெண்ட் பணிநீக்க முறையை கையில் எடுத்துள்ளது. இந்த முறையின் கீழ் நிறுவனம் சிறு சிறு எண்ணிக்கையிலாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. பல நிறுவனங்கள் ஊழியர்களை நேரடியாக "ரிசைன் செய்யுங்கள்" அல்லது "மற்று வேலை தேடுங்கள்" என்று கூறி அனுப்புகின்றன. இந்த போக்கு தற்போது இந்திய தொழில்நுட்பத் துறையில் அதிகரித்துள்ளது.
AI மற்றும் ஆட்டோமேஷனின் தாக்கம்
AI மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பம், தொழில்நுட்பத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இவை பெரும்பாலான பணிகளை நொடிகளில் செய்யத் தொடங்கியதால், பல ஊழியர்களின் வேலை தேவையில்லாமல் போகிறது. இந்திய IT துறையின் மொத்த ஊழியர்கள் 45 லட்சம் பேர் பணியில் உள்ளனர், ஆனால் 2025 இல் 50,000 வேலைகள் அபாயத்தில் உள்ளன. இது ஊழியர்களுக்கு புதிய திறன்களை கற்க வேண்டிய அவசியத்தை வெளிப்படையாக காட்டுகிறது.
More From GoodReturns

எங்களுக்கு இனி Engineers தேவையே இல்ல; AI போதும் – Salesforce CEO திமிர் பேச்சு..!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications