இந்திய தொழில்நுட்பத் துறையில் இந்த ஆண்டு சைலெண்ட் பணிநீக்கம் எனப்படும் மறைமுக பணிநீக்கம் அதிமாக இருந்துள்ளது. இத்தகைய பணிநீக்கங்களை நிறுவனங்கள் வெளிப்படையாக அறிவிக்காமல் ஊழியர்களை வேலையை விட்டு வெளியேற தூண்டும் முறை இது.
ஊழியர்களை வெளியேற்றுவதற்காக நிர்வாகம் ஊழியர்களின் திறன் மதிப்பீட்டில் குறைந்த மதிப்பீடு வழங்குவது, வேலை வழங்குவதை குறைப்பது, சம்பள உயர்வு தாமதம் போன்ற வழிகளில் இந்த சைலெண்ட் பணிநீக்கத்தை நிகழ்த்துகிறது. இந்த போக்கு 2026லும் தொடருமா என அச்சம் ஊழியர்களிடம் அதிகரித்துள்ளது.

2023 முதல் 2024 வரையிலான காலத்தில் நேரடி மற்றும் மறைமுக பணிநீக்கத்தால் சுமார் 25,000 ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். 2025இல் இந்த எண்ணிக்கை இரு மடங்காக உயர வாய்ப்புள்ளது என ஏற்கனவே கணிக்கப்பட்டு உள்ளது.
இதேவேளையில் இந்த ஆண்டு டெக் ஸ்டார்ட்அப் மற்றும் டெக் நிறுவனங்கள் அதிகளவில் பணிநீக்கம் செய்துள்ளதாக Layoffs.Fyi தளத்தின் தரவுகள் கூறுகிறது. உதாரணமாக ஜென்வைஸ், Junglee games, பிளிப்கார்டு, பாரத்அக்ரி, கேம்ஸ்கிராப்ட், போர்டர், ஜெப்டோ, சிபிள், ஹைக், பீப்கார்ட், கேம்ஸ் 24X7, ஓலாவின் Krutrium, கார்ஸ் 24, சோமேட்டோ, பாக்கெட் எப்எம், ஷேர்சாட் என பல 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 30, 50ல் துவங்கி 1000 பேருக்கு மேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்து பணிநீக்கம் செய்துள்ளது.
இதே ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் மறைமுகமாகவும், சிறு சிறு எண்ணிக்கையிலும் வருடம் முழுவதும் பணிநீக்கம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பெரிய நிறுவனங்கள் சைலெண்டாக பணிநீக்கம் செய்யாமல் வெளிப்படையாக பணிநீக்கம் அறிவித்த போது தொழிலாளர் அமைப்புகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. உதாரணமாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) போன்ற நிறுவனங்கள் இதை அனுபவித்தன. இதனால் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சைலெண்ட் பணிநீக்க முறையை இந்த ஆண்டு அதிகளவில் கையில் எடுத்துள்ளது. சிறு எண்ணிக்கையில் ஊழியர்களை படிப்படியாக வெளியேற்றுவது மூலம் தொழிற்துறை வட்டத்தில் பெரிய அளவிான கவனம் பெறாது என்பதை இந்த செயல்முறையின் நோக்கம்.
சைலெண்ட் பணிநீக்கம் செய்யும் பல நிறுவனங்கள் ஊழியர்களிடம் நேரடியாக வேலையை விட்டு வெளியேறுமாறு அல்லது வேறு வேலை தேடுமாறு கூறுகின்றன. இது வெளிப்படையான அறிவிப்பு இல்லாமல் நடைபெறுகிறது. இந்திய தொழில்நுட்பத் துறையில் இந்த போக்கு தற்போது வேகமாக பரவி வருகிறது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்கள் பல பணிகளை விரைவாக செய்யத் தொடங்கியுள்ளன. இதனால் பல ஊழியர்களின் திறன் அவசியம் இல்லாமல் போகிறது. இந்த மாற்றம் ஊழியர்களுக்கு புதிய திறன்களை கற்க வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது. தொழில்நுட்பத் துறையின் எதிர்காலத்தில் இது பெரும் சவாலாக உள்ளது.
இந்திய தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி தொடர்ந்தாலும் வேலை இழப்பு ஊழியர்களுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நிறுவனங்கள் செலவு குறைப்பு மற்றும் தொழில்நுட்ப மாற்றத்துக்கு ஏற்ப இந்த நடவடிக்கைகளை எடுக்கின்றன. ஊழியர்கள் தங்களது திறன்களை மேம்படுத்தி இத்தகைய மாற்றங்களுக்கு தயாராக வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
இந்திய ஸ்டார்ட்அப், ஐடி ஊழியர்களை தற்போது ஏஐ, விசா கட்டுப்பாடுகள், குறைந்த அளவிலான சம்பள உயர்வு, புதிய வேலைவாய்ப்புகளில் மந்த நிலை, நிரந்தரமில்லாத வேலை என பல அச்சங்களுக்கு மத்தியில் வாழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
More From GoodReturns

ஜெமினி, கிளாட்-க்கு வேட்டு..!! OpenAI நிறுவனத்தில் உருவாகிய புதிய பதவி..! இனி இதற்கு தான் எதிர்காலம்..!!

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications