அமெரிக்காவில் திவாலான சிலிக்கான் வேலி வங்கியை ஃபர்ஸ்ட் சிட்டிசன்ஸ் பாங்க்ஷேர்ஸ்-ன் முதன்மை துணை நிறுவனமான ஃபர்ஸ்ட் சிட்டிசன்ஸ் வங்கி வாங்கியதை அடுத்து அமெரிக்க முதலீட்டாளர்கள் திங்கட்கிழமை ஃபர்ஸ்ட் சிட்டிசன்ஸ் பாங்க்ஷேர்ஸ் பங்குகளில் தாறுமாறாக முதலீடு செய்த காரணத்தால் மிகப்பெரிய உயர்வை பதிவு செய்துள்ளது.
ஒரு காலத்தில் சிலிக்கான் வேலி பகுதியில் சிறந்த நிதி சேவை வழங்கும் வங்கியாக இருந்த SVB சமீபத்திய வட்டி விகிதங்கள் உயர்வுக்கு மத்தியில் நிதிநெருக்கடியில் சிக்கி திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்த நிலையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிதி கடவுளாக பார்க்கப்படும் சிலிக்கான் வேலி வங்கியை, வட கரோலினாவை தளமாகக் கொண்ட ஃபர்ஸ்ட் சிட்டிசன்ஸ் வங்கி வங்கியதை தொடர்ந்து இதன் பங்கு விலை 49% வரை உயர்ந்துள்ளது.
First Citizens Bancshares
ஃபர்ஸ்ட் சிட்டிசன்ஸ் வங்கியின் தாய் நிறுவனமான First Citizens Bancshares Inc பங்குகள் இன்று அமெரிக்க நாஸ்டாக் சந்தையில் 48.14 சதவீதம் உயர்ந்து 863 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 583.55 ரூபாயாக மட்டுமே இருந்தது.
இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் 870.15 டாலர் வரையில் அதாவது 49.4% வரையில உயர்ந்துள்ளது. இந்த பங்கு அதன் 52 வார உயர்வான $885.38க்கு அருகில் இருந்தது.
FDIC அமைப்பு
ஃபர்ஸ்ட் சிட்டிசன்ஸ் பேங்க் & டிரஸ்ட் நிறுவனம் திங்களன்று பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (FDIC) உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. சிலிக்கான் வேலி வங்கி தற்போது FDIC கட்டுப்பாட்டில் இருக்கும் வேளையில் இந்த ஒப்பந்தம் மூலம் அனைத்து கடன்களையும், இதர சில சொத்துக்களையும் வாங்குவதற்கு ஒப்புக்கொண்டது.
சிலிக்கான் வேலி பிரிட்ஜ் வங்கி
இதோடு சிலிக்கான் வேலி பிரிட்ஜ் வங்கியின் (இது FDIC அமைப்பு சிலிக்கான் வேலி வங்கியை கட்டுப்பாட்டில் எடுத்த பின்பு உருவாக்கப்பட்ட டம்மி வங்கி பெயர்) அனைத்து வாடிக்கையாளர் வைப்புகளையும் மற்ற சில பொறுப்புகளையும் ஏற்கிறது ஃபர்ஸ்ட் சிட்டிசன்ஸ் பேங்க் & டிரஸ்ட் நிறுவனம்.
இதன் மூலம் சிலிக்கான் வேலி வங்கி வாடிக்கையாளர் அனைத்தும் இனி ஃபர்ஸ்ட் சிட்டிசன்ஸ் பேங்க் வாடிக்கையாளர்களாக மாறுவார்கள்.
500 மில்லியன் டாலர்
சிட்டிசன்ஸ் பேங்க் & டிரஸ்ட் நிறுவனம், சிலிக்கான் வேலி பிரிட்ஜ் வங்கியின் கீழ் இருக்கும் அனைத்து கடன், டெபாசிட், பங்குகள், பங்கு உரிமை என அனைத்தையும் சேர்த்து வெறும் 500 மில்லியன் டாலர் தொகைக்கு வாங்க உள்ளது.
இந்த 500 மில்லியன் டாலர் தொகையை First Citizens அதன் பங்குகளாக கொடுத்துள்ளது.
Deutsche Bank பங்குகள்
இந்த அறிவிப்பு மூலம் அமெரிக்காவில் இன்று அனைத்து பிராந்திய வங்கிகளின் பங்குகளும் பெரிய அளவிலான உயர்வை பதிவு செய்துள்ளது. இதோபோல் Deutsche Bank-ன் பங்குகளும் இன்று 6.15 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க, ஐரோப்பிய வங்கி நெருக்கடிகள் தீர்ந்துள்ளாதா..?


Click it and Unblock the Notifications