அமெரிக்காவின் சிலிக்கான் வேலி பேங்க் திவாலாக அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு முன்னரே இவ்வங்கி திவாலாகும் என முன்கூட்டியே அறிந்துக்கொண்ட பெரும் முதலீட்டாளர்களான Coatue Management, Y Combinator, Peter Thiel's Founders Fund நிறுவனங்கள் தாங்கள் முதலீடு செய்துள்ள நிறுவவனங்களிடம் SVB வங்கியில் இருக்கும் பணம், டெபாசிட் ஆகியவைற்றை வெளியேற்றும் படி அறிவுறுத்தியுள்ளது.
Recommended Video
இது மட்டும் அல்லாமல் முன்னணி ஸ்டார்ட்அப் முதலீட்டாளரான Peter Thiel கூட பல மில்லியன் டாலர் மதிப்பிலான சொந்த பணத்தை வெளியேற்றியுள்ளார். ஆனால் இந்த காலக்கட்டத்திலும் சிலிக்கான் வேலி வங்கி தனது வாடிக்கையாளர்களிடம் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்தது. ஆனால் அடுத்த சில நாட்களிலேயே திவாலாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது
இந்த அறிவிப்பு அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை மாலை வெளியானதில் இருந்து இந்திய முதலீட்டாளர்கள், இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் பீதியில் உள்ளனர். இதிலும் முக்கியமாக SAAS நிறுவனங்களை வைத்திருக்கும் நிறுவனர்கள் உச்சக்கட்ட பீதியில் உள்ளனர்.
சிலிக்கான் வேலி வங்கி
சிலிக்கான் வேலி வங்கி திவாலாக அறிவிக்கப்பட்டு, அனைத்து வங்கி சேவைகளும முடக்கப்பட்ட நிலையில் இந்திய வென்சர் கேபிடல் பண்ட் நிறுவனங்கள் இந்தியாவில் தாங்கள் முதலீடு செய்துள்ள இந்திய நிறுவனங்கள் அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டு இயங்கி வரும் நிறுவனங்களின் நிதி நிலையை ஆய்வு செய்ய துவங்கியுள்ளது.
வர்த்தகம் முடக்கம்..
சிலிக்கான் வேலி பேங்க்-ல் இருக்கும் பணத்தை இப்போதைக்கு கட்டாயம் எடுக்க முடியாது. இதனால் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் நிதி இல்லாமல் வர்த்தகம் முடங்கும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாது, பையர், செல்லருக்கு பேமெண்ட் செல்லாது. இதனால் அடுத்த வாரம் முழுவதும் பணிநீக்க அறிவிப்புகள் விண்ணை முட்டலாம்.
பணிநீக்கம் ஆபத்து..
ஏற்கனவே புதிய முதலீடுகளையும், கடன்களையும் பெற முடியாமல் மாட்டிக்கொண்டு இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு இது பெரிய செக். ஸ்டார்ட்அப் ஊழியர்களே உஷாரா இருங்க.
75 சதவீத ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
அமெரிக்காவில் இயங்கி வரும் 75 சதவீத ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களது வர்த்தக கணக்கு, டெபாசிட் ஆகிய அனைத்தையும் சிலிக்கான் வேல் பேங்க்-ல் வைத்திருக்கும் காரணத்தால் தான் இந்த பதற்றம். தற்போது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதால் திங்கட்கிழமை முதல் 250000 டாலருக்கு மேல் ஒரு டாலர் கூட எடுக்க முடியாது.
Zenoti நிறுவனம்
இந்த நிலையில் SAAS பிரிவில் இருக்கும் Zenoti நிறுவனத்தின் தலைவர் கடந்த ஆண்டே சிலிக்கான் வேலி பேங்க்-ல் இருந்த பணத்தை எடுத்துவிட்டோம் என தெரிவித்துள்ளார்.
Rezolve.ai நிறுவனம்
Rezolve.ai என்னும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிறுவனம் Saurabh Kumar சிலிக்கான் வேலி பேங்க்-ல் இருந்த பணத்தை முழுமையாக எடுக்கவில்லை எனவும் அதற்கான வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
Mercury மற்றும் Brex
கடந்த சில வருடத்தில் துவங்கப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அனைத்தும் புதிய நிதி சேவை நிறுவனங்களான Mercury மற்றும் Brex ஆகியவற்றில் கணக்கை திறக்கிறது. இவ்விரு நிறுவனங்கள் அதிகளவில் SAAS பிரிவில் இயங்குகிறது.
Rephrase.ai நிறுவனம்
Lightspeed நிறுவன முதலீட்டில் Rephrase.ai நிறுவனர் மற்றும் CEO ஆஷ்ரே மல்ஹோத்ரா சிலிக்கான் வேலி பேங்க்-ல் இருந்து 90 சதவீத பணத்தை Brex-க்கு மாற்றியுள்ளோம் என தெரிவித்தார். என்னுடைய சொந்த பணம் யெஸ் வங்கியில் மாட்டிக்கொண்டு உள்ளது பெரிய பாடமாக இருந்தது, இதனால் வென்சர் பண்ட் பரிந்துரைக்கு முன்பாகவே சிலிக்கான் வேலி பேங்க்-ல் இருந்து வெளியேறும் திட்டத்தை முன்வைத்தேன் என ஆஷ்ரே மல்ஹோத்ரா தெரிவித்தார்.
Innovaccer நிறுவனம்
ஹெல்த்கேர் SaaS யூனிகார்ன் நிறுவனமான Innovaccer நிறுவனர் மற்றும் CEO அபினவ் ஷஷாங்க் சிலிக்கான் வேலி பேங்க்-ல் இருந்து மொத்த பணத்தையும் வியாழக்கிழமையே மாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
உண்மை என்ன
தற்போது பதில் அளித்துள்ள ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் அனைவரும் தங்களது பணத்தை பெருமளவு அல்லது மொத்தமாக வெளியேற்றியவர்கள் பலர் இன்னும் வைத்துள்ளனர் என்பது தான் நிதர்சனமான உண்மை.
டாப் நிறுவனங்கள்
கிரிப்டோ பேங்க் ஆக விளங்கும் BlockFi சிலிக்கான் வேலி பேங்க்-ல் சுமார் 227 மில்லியன் டாலர் வைத்துள்ளது.
இதுபோக Airbnb, காயின்பேஸ், fitbit, linkedin, pinterest, roblox, slack, square, twitch, uber, dropbox, robinhood, moderna,illimina, bioNtech, Sequoia capital, andreessen Horowitz, deloitte, KPMG, wikmedia foundation, Khan academy போன்ற பல முன்னணி நிறுவனங்கள் சிலிக்கான் வேலி பேங்க்-ல் பல பில்லியன் டாலர் பணத்தை வைத்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications