அமெரிக்காவின் சிலிக்கான் வேலி பேங்க் திவாலாகியுள்ள அறிவிப்பு வெளியான உடனேயே அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் எழுந்த முக்கியமான கேள்வி மீன்டும் 2008 சர்வதேச நிதிநெருக்கடி போல் ஒரு சம்பவம் உருவாகுமா என்பது தான். இதற்கான பதில் என்ன..? சந்தை நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்.
Recommended Video
சிலிக்கான் வேலி பேங்க் (SVB) பைனான்சியல் குரூப், அமெரிக்காவில் இருக்கும் டெக்னாலஜி ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய கடன் வழங்கும் நிறுவனமாக உள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக பத்திரங்களை நஷ்டத்தில் விற்பனை செய்த காரணத்தாலும், நிதி திரட்டும் முயற்சிகள் தோல்வி அடைந்த காரணத்தாலும் தற்போது திவாலாகி அமெரிக்க அரசின் Federal Deposit Insurance Corporation கட்டுப்பாட்டிற்கு இவ்வங்கி சென்றுள்ளது.
2008 நிதிநெருக்கடியின் போது லெமேன் பிரதர்ஸ் திவாலானது மூலம் சீட்டுக்கட்டுகளை போல சர்வதே நிதியியல் சந்தை தடுமாறி கீழே விழுந்தது. இந்த நிலையில் ரெசிஷன் அச்சம் நிறைந்த இக்காலக்கட்டத்தில் சிலிக்கான் வேலி பேங்க் திவாலாகியுள்ள அறிவிப்பு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
SVB என்றால் என்ன?
கலிபோர்னியாவை தளமாகக் கொண்டு 1983-ல் நிறுவப்பட்ட சிலிக்கான் வேலி பேங்க், சிலிக்கான் வேலி பகுதியில் இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு சேவை அளிப்பதில் அதிகப்படியான கவனம் செலுத்துகிறது. அதிக நிகர சொத்து மதிப்புள்ள நபர்களுக்கு தனியார் வங்கி சேவைகளை வழங்குவதோடு, வென்சர் கேப்பிடல், தனியார் பங்கு நிறுவனங்களுக்கு இது பல சேவைகளை வழங்குகிறது.
அது எவ்வளவு பெரியது?
சிலிக்கான் வேலி பேங்க் கிட்டத்தட்ட அமெரிக்காவில் இருக்கும் 50 சதவீதம் வென்சர் கேப்பிடல் ஆதரவுடன் இயங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களிலும், 44% அமெரிக்க வென்சர் கேபிடல் தொழில்நுட்பம், ஹெல்த்கேர் நிறுவனங்களுடன் கடந்த ஆண்டு வணிகம் செய்துள்ளது.
212 பில்லியன் டாலர்
டிசம்பர் 31 நிலவரப்படி, சிலிக்கான் வேலி பேங்க் சுமார் 212 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களைக் கொண்டுள்ளது, இவ்வங்கியின் முக்கியமான வாடிக்கையாளர்களில் Shopify, Pinterest போன்ற பெரிய பிராண்டுகளும் அடங்கும். இந்த நிறுவனங்கள் தனது உபரி நிதி, வர்த்தக கணக்குகளை சிலிக்கான் வேலி பேங்க்-ல் வைத்துள்ளது.
அமெரிக்க ஸ்டார்ட்அப் சந்தை
அமெரிக்க ஸ்டார்ட்அப் சந்தையில் உருவான Funding Winter மூலம் இவ்வங்கியில் பணம் வைத்திருந்த பெரும்பாலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பணத்தை திரும்ப பெற்று பயன்படுத்த துவங்கிய நிலையில், பணத்தை அளிக்க தனது சொத்த சொத்துகளை விற்பனை செய்தும், பத்திரங்களை நஷ்டத்திற்கும் விற்பனை செய்து பணத்தை கொடுத்துள்ளது.
பத்திர விற்பனை
உதாரணமாக சிலிக்கான் வேலி பேங்க் விற்பனை செய்த 21 பில்லியன் டாலர் மதிப்பிலான பத்திரங்கள் மூலம் இவ்வங்கிக்கு 1.8 பில்லியன் டாலர் நஷ்டம், இதை சரி செய்ய தனது பங்குகளை விற்பனை செய்து 2.25 பில்லியன் டாலர் நிதியை திரட்டும் முயற்சியில் தோல்வி அடைந்து திவாலாகியுள்ளது.
2008 சம்பவமா..?
சிலிக்கான் வேலி பேங்க் திவாலாகும் காரணத்தால் இந்த தாக்கம் பிற வங்கிகளையும், வங்கி அமைப்பையும் பாதிக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு அல்லது வாய்ப்புகள் இல்லை என்று தான் நிபுணர்கள் கூறுகின்றனர்.
என்ன காரணம்
சிலிக்கான் வேலி பேங்க் சுமார் 221 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்ட பெரிய வங்கியாக இருந்தாலும் இதன் வர்த்தக வட்டம் மிகவும் சிறியது அதாவது ஸ்டார்ட்அப், வென்சர் கேபிடல், ப்ரைவேட் ஈக்விட்டி, பத்திரங்கள், டெக் ஸ்டார்ட்அப் ஆகிய பிரிவில் மட்டுமே இயங்கி வருகிறது.
உண்மை
இதனால் சிலிக்கான் வேலி பேங்க் திவாலாகும் காரணத்தால் பொருளாதாரத்திற்கு நேரடியாக பாதிப்பு இருக்காது எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இதன் சங்கிலி தொடர் பாதிப்பு எப்படி இருக்கும் என இப்போதைக்கு கணிக்க முடியாது என்பது தான் உண்மை. அடுத்த சில நாட்களில் இதன் உண்மையான பாதிப்பு வெளிச்சத்திற்கு வரும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications