அமெரிக்க முதலீட்டு சந்தையில் ஏற்பட்ட பண்டிங் வின்னடர் வாயிலாக இன்று அமெரிக்காவின் முன்னணி ஸ்டார்ட்அப் ஸ்பெஷல் வங்கியான சிலிக்கான் வேலி பேங்க் திவாலாகியுள்ளது.
Recommended Video
வெள்ளிக்கிழமை மாலையில் அமெரிக்க அரசு சிலிக்கான் வேலி பேங்க் திவாலாக அறிவித்த நிலையில் Federal Deposit Insurance Corporation மொத்த வங்கி, நிதி, சொத்துக்களை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
இந்தியாவில் எப்படி வங்கியில் டெபாசிட் செய்ய தொகைக்கு Deposit Insurance and Credit Guarantee Corporation அமைப்பு 5 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் பாதுகாப்பு அளிக்கிறதோ, அதேபோல் Federal Deposit Insurance Corporation அமெரிக்காவல் சுமார் 2,50,000 டாலருக்கு இன்சூரன்ஸ் அளிக்கிறது.
சிலிக்கான் வேலி பேங்க் போன்ற பெரும் தொகையை நிர்வாகம் செய்யும் வங்கிக்கு இந்த 250000 டாலர் இன்சூரன்ஸ் போதுமா..? பல பில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனங்களின் பணம் என்னாகும்..?
அமெரிக்க அரசு
அமெரிக்க அரசு சிலிக்கான் வேலி பேங்க் திவாலாக அறிவித்த நிலையில் Federal Deposit Insurance Corporation மொத்த வங்கி, நிதி, சொத்துக்களை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் 2 நாளில் மொத்த வங்கி தரவுகளையும் ஆய்வு செய்துவிட்டு மார்ச் 13 ஆம் தேதி சிலிக்கான் வேலி பேங்க்-ன் அனைத்து வங்கி கிளைகளும் திறக்கப்படும்.
சிலிக்கான் வேலி பேங்க்
சிலிக்கான் வேலி பேங்க் திறக்கப்பட்ட பின்பு அனைத்து கணக்காளர்களும் இன்சூரன்ஸ் பாதுகாப்பு கொண்ட 250000 டாலர் தொகையை ஆக்சிஸ் செய்ய முடியும், மீதமுள்ள தொகையை பார்க்க மட்டுமே முடியும். இன்சூரன்ஸ் செய்யப்படாத தொகைக்கு அடுத்த ஒரு வாரத்தில் அட்வான்ஸ் டிவிடென்ட் தொகை அளிக்கப்படும்.
டெபாசிட் இன்சூரன்ஸ்
மேலும் இன்சூரன்ஸ் அளிக்கப்படாத தொகைக்கு Deposit Insurance National Bank of Santa Clara அமைப்பு receivership certificate கொடுக்கும். இதை வைத்துக்கொண்டு வரும் காலத்தில் சிலிக்கான் வேலி பேங்க் சொத்துக்கள் விற்பனை செய்யப்படும் போதும் அதிலிருந்து பணத்தை பெற முடியும்.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு GOTO பேங்க் என்றால் அதில் கட்டாயம் SVB தான். இந்த நிலையில் பல முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தனது உபரி நிதி, வர்த்தக கணக்குகளை சிலிக்கான் வேலி பேங்க்-ல் வைத்துள்ளது. இது மட்டும் அல்லாமல் அமெரிக்க ஸ்டார்ட்அப் சந்தையை சேர்ந்த அதிக சொத்து மதிப்புள்ள பணக்காரர்களுக்கு தனியார் வங்கி சேவைகளை வழங்குவதோடு, வென்சர் கேப்பிடல், தனியார் பங்கு நிறுவனங்களுக்கு பல சேவைகளை வழங்குகிறது.
250000 டாலர்
இதனால் வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் நிர்வாகம் செய்யும் நிதி அளவு மிகவும் அதிகம், டிசம்பர் 2022 கணக்கின் படி சிலிக்கான் வேலி பேங்க் மொத்த சொத்து மதிப்பு 221 பில்லியன் டாலர். இதனால் 100க்கு 85 கணக்குகளில் 250000 டாலர் தொகைக்கு அதிகமாக தான் இருக்கும்.
வர்த்தகம் முடக்கம்.. பணிநீக்கம் ஆபத்து..
இந்த நிலையில் சிலிக்கான் வேலி பேங்க்-ல் இருக்கும் பணத்தை எடுக்க முடியாமல் போனால் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் நிதி இல்லாமல் வர்த்தகம் முடங்கும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாது, பையர், செல்லருக்கு பேமெண்ட் செல்லாது. இதனால் அடுத்த வாரம் முழுவதும் பணிநீக்க அறிவிப்புகள் விண்ணை முட்டலாம்.


Click it and Unblock the Notifications