சிலிக்கான் வேலி வங்கி திவாலானதைத் தொடர்ந்து, இந்தியாவில் அந்நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் 800 ஊழியர்களின் பணிநிலைக் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
பெங்களூரின் மான்யட்டா தொழில்நுட்ப வளாகத்தில் சிலிக்கான் வேலி வங்கி-யின் இந்தியக் கிளை உள்ளது. இங்கு சுமார் 800 ஊழியர்கள் பணிபுரிவதாக பிசினஸ் டுடே தரவுகள் கூறுகின்றன.
தற்போது சிலிக்கான் வேலி வங்கி திவாலானதைத் தொடர்ந்து அதன் இந்திய ஊழியர்கள் 800 பேரின் வேலைவாய்ப்பு குறித்து பல அச்சம் எழுந்துள்ளது.
சிலிக்கான் வேலி வங்கி திவால்
சிலிக்கான் வேலி வங்கி திவாலான நிலையில், இவ்வங்கியின் நிர்வாகம், நிதி ஆதாரங்கள், சொத்துக்கள் அனைத்தையும் அமெரிக்காவின் Federal Deposit Insurance Corporation வெள்ளிக்கிழமை கையில் எடுத்தது. இதன் உயர்மட்ட நிர்வாகத்தை மொத்தமாக மாற்ற வேண்டும் என முடிவு செய்துள்ளது.
FDIC அமைப்பு
இதற்காக FDIC அமைப்பு திங்கட்கிழமை Fannie Mae என்னும் அமெரிக்க அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் கடன் சேவை அமைப்பின் முன்னாள் தலைவரான Tim Mayopoulos-ஐ சிஇஓ-வாக நியமிப்பதாக அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து திங்கட்கிழமை Tim Mayopoulos சிலிக்கான் வேலி வங்கி இயல்பாக இயங்கி வருகிறது என லின்கிடுன் தளத்தில் பதிவிட்டு உள்ளது.
அமெரிக்க வங்கிகள்
பல அமெரிக்க வங்கிகளை போல இந்தியாவில் சிலிக்கான் வேலி வங்கியும் கிளையை வைத்துள்ளது. இக்கிளையில் பணியாற்றும் 800 ஊழியர்கள் தற்சமயம் பலர் வீட்டிலிருந்தே வேலை செய்வதால் தற்போது அவர்களின் பணிநிலைக் குறித்து எவ்வித தகவலும் வரவில்லை எனவும், இன்றுள்ள காலகட்டத்தில் எதுவுமே நிரந்தரமில்லை எனவும் ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் இருக்கும் வங்கியின் எதிர்காலம், ஊழியர்களின் பணிநிலைக் குறித்தும் எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை.
வட்டி விகிதம் உயர்வுதான் காரணம்!
அமெரிக்க பெடரல் வங்கியின் தொடர் வட்டி விகித உயர்வுதான் சிலிக்கான் வேலி வங்கியின் இந்நிலைக்கு காரணம் எனவும், வங்கியின் நிதி நிலைமைக் குறித்து சில சந்தேகங்கள் இருப்பதாகவும், மற்றொரு ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.
அதில் அவர், தான் ஒரு Risk Advisor எனவும், அதனால் வங்கியின் இடர்கள், நிதிக் கையாளுதல்கள், வட்டி விகித உயர்வுகள் பற்றிய புரிதல் தனக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
FDIC அறிவிப்பு!
சிலிக்கான் வேலி வங்கி திவாலானதைத் தொடர்ந்து ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் அதனை கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு 45 நாட்கள் வேலையும், தற்போது வாங்கும் சம்பளத்தில் இருந்து 1.5 மடங்கு அதிக ஊதியம் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் இது இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பொருந்துமா எனத் தெரியவில்லை என இந்திய சிலிக்கான் வேலி வங்கி ஊழியர்கள் கூறுகின்றனர்.
LinkedIn -இன் மூலம் இணைந்த ஊழியர்கள்!
இந்த நிச்சயமற்ற நிலையில் இந்தியாவில் பணிபுரியும் சிலிக்கான் வேலி வங்கி ஊழியர்கள் LinkedIn தளத்தில் ஒருவருக்கொருவர் இணைந்து ஆதரவாக இருப்பதாகக் கூறுகின்றனர்.
அதிகாரிகள் பங்கு விற்பனை!
சிலிக்கான் வேலி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கிரெக் பெக்கர் பிப்ரவரி 26 அன்று 12,450 பங்குகளை 3.57 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்துள்ளார். அதே நாளில் வங்கியின் CFO-வான டேனியல் பெக் 0.57 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்றார்.
மேலும் வங்கியின் CMO- வான மிச்செல் டிராப்பர் (chief marketing officer), முதலில் 20,000 டாலர் மதிப்புள்ள பங்குகளையும், இரண்டாவது பரிவர்த்தனையில் 809 பங்குகளை சுமார் 0.19 மில்லியன் டாலருக்கு விற்றுள்ளனர்.
வங்கியின் நிதி நிலை!
2021 இல் வங்கியின் வைப்புத்தொகை 102 பில்லியனிலிருந்து 189.20 பில்லியனாக உயர்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஃபெடரல் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து உயர்ந்து வந்ததால், பணப்புழக்கம் மற்றும் இருப்புத்தொகை குறைந்து வங்கி சென்ற வாரம் திவால் நிலைக்கு தள்ளப்பட்டது.
சிலிக்கான் வேலி வங்கி !
சிலிக்கான் வேலி வங்கி உலகெங்கிலும் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு கடன் வழங்குநராக இருந்தது. மேலு துணிகர முதலீட்டாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு சொந்தமான பெரிய வைப்புத் தொகை மற்றும் முதலீடுகளும் இவ்வங்கியில் இருக்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications