இந்த மாதம் குறைந்தது 1 லட்சம் ஸ்டார்ட்அப் ஊழியர்கள் சம்பளம் பெற முடியாமல் போகலாம், 1000த்திற்கும் அதிகமான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடியாமல் போகலாம்.
Recommended Video
அதிலும் நீங்கள் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட டெக் நிறுவனத்தில் பணியாற்றி வந்தால் இது உங்களுக்கு நடக்க வாய்ப்பு அதிகம் என குரேத்ஸ்கூல் நிறுவனர் வைபவ் சிசிண்டி தனது லின்கிடுஇன் பதிவில் தெரிவித்துள்ளார்.
Silicon Valley Bank ஆதிக்கம்
அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட டெக் நிறுவனத்தில் பணியாற்றி வந்தால் உங்கள் நிறுவனம் திவாலாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ள Silicon Valley Bank-யில் கணக்கு வைத்திருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. காரணம் அமெரிக்க சிலிக்கான் வேலியில் மட்டும் சுமார் 25 சதவீத சந்தையை Silicon Valley Bank வைத்துள்ளது.
175 பில்லியன் டாலர்
ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் சுமார் 175 பில்லியன் டாலர் மதிப்பிலான தொகை தற்போது வெளியேற்ற முடியாமல் தற்போது மாட்டிக்கொண்டு உள்ளது. இதனால் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு சம்பளம் போட கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
250000 டாலர் டெபாசிட் இன்சூரன்ஸ்
Silicon Valley Bank திவாலாகியுள்ள காரணத்தால் அமெரிக்க அரசு வைப்பு நிதிக்கு சுமார் 250000 டாலர் டெபாசிட் இன்சூரன்ஸ் கொடுத்தாலும் மொத்த 175 பில்லியன் டாலர் தொகையில் வெறும் 5 சதவீத தொகையை மட்டுமே பெற முடியும். இது அனைத்தும் கடந்த 24 மணிநேரத்தில் நடந்துள்ளது என்பது தான் வியக்கவைக்கும் விஷயம்.
வென்சர் கேப்பிடல் முதலீடுகள்
பொதுவாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெறும் முதலீடுகள் அனைத்தும் வங்கியில் தான் வைக்கும், குறிப்பாக வென்சர் கேப்பிடல் நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை பல கணக்குகளில் பிரித்து டெபாசிட் ஆக வைக்கும், இதன் மூலம் நிறுவனம் ஒரு கணக்கில் இருந்து மட்டும் செலவுகளை செய்தும். இதன் மூலம் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் செயல்பாடுகளை வென்சர் கேப்பிடல், PE நிறுவனங்கள் நிர்வாகம் செய்யும். இது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறும்.
பணவீக்கம் டூ பண்டி வின்டர்
அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடந்த ஒரு வருடமாக அந்நாட்டின் பணவீக்கக்தை குறைக்க தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இதன் மூலம் டெக் துறையில் இருக்கும் நிறுவனங்கள் அதிலும் குறிப்பாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் புதிய முதலீடுகளை பெற முடியாமல் மாட்டிக்கொண்ட காரணத்தால் இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு முதல் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் குறைவான அளவிலேயே தங்களது டெபாசிட் தொகையை வெளியேற்றி வந்தது.
பத்திரங்கள் விற்பனை
சிலிக்கான் வேலி பேங்க் தனது வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகையை அடிப்படையாக வைத்து பல பில்லியன் டாலர் மதிப்பிலான பத்திரங்களை வாங்கியது. இது பாதுகாப்பான முதலீடுகளாக இருந்தாலும், வட்டி விகிதம் தொடர்ந்து உயர்ந்த காரணத்தால் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் டெபாசிட்கள் குறைந்து வந்த நிலையில் முதலீட்டு பத்திரங்களை முன்கூட்டியே விற்பனை செய்ததால் அதிக இழப்பை எதிர்கொண்டது. இதனால் SVB பங்குகள் 85 சதவீதம் வரையில் பாதிக்கப்பட்டது.
1000 ஸ்டார்ட்அப்-கள் பாதிப்பு
Silicon Valley Bank திவாலாகியுள்ள காரணத்தால் இவ்வங்கியில் இருக்கும் 175 பில்லியன் டாலர் தொகை குறைந்தது 1000 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடைய பணமாக இருக்கலாம். இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பொதுவாக அமெரிக்கா, சிங்கப்பூரில் தான் முதலீட்டை திரட்டும். ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு Silicon Valley Bank தான் ஓற்றை தீர்வாக இருக்கும் வேளையில் கட்டாயம் கடுமையான பாதிப்பு இருக்கும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications