அமெரிக்காவின் கலிப்போர்னியா-வை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சிலிக்கான் வேலி பேங்க் பங்குகள் 85 சதவீதம் சரிந்தது அந்நாட்டு வங்கி துறையை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
Recommended Video
சிலிக்கான் வேலி பேங்க் ஸ்டார்ட்அப் மற்றும் வென்சர் கேப்பிடல் நிறுவனங்களுக்கு அதிகப்படியான டெபாசிட் பெறுவதும், நிதியுதவிகளை அளிக்கும் சேவைகளையும் செய்து வருகிறது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை சிலிக்கான் வேலி பேங்க் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு அமெரிக்காவின் Federal Deposit Insurance Corporation ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் கைப்பற்றியது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் நெட்பேங்கிங்-ல் பேலென்ஸ் தொகை காட்டுவது நீக்கப்பட்டு உள்ளது, இதன் மூலம் அமெரிக்க Deposit Insurance கீழ் இவ்வங்கியில் டெபாசிட் செய்துள்ளவர்கள் இன்சூரன்ஸ் தொகை பெற உள்ளனர்.
சிலிக்கான் வேலி பேங்க் திவால் ஆகவும், மூடப்படவும் என்ன காரணம்..?
சிலிக்கான் வேலி பேங்க்
சிலிக்கான் வேலி பேங்க்கின் சிறப்பு அம்சம் தான் இவ்விங்கி திவாலாக முக்கியமான காரணம், யாராக இருந்தாலும் தனது முதலீட்டை பல பிரிவில் முதலீடு செய்ய வேண்டும், ஒரே இடத்தில் மொத்த முதலீட்டையும் செய்தால் இதுதான் நடக்கும்.
வட்டி விகித உயர்வு
அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடந்த ஒரு வருடமாக அந்நாட்டின் பணவீக்கக்தை குறைக்க தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இதன் மூலம் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டாலும் டெக் துறையில் இருக்கும் நிறுவனங்கள் அதிலும் குறிப்பாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது.
புதிய முதலீடுகள்
இந்த பாதிப்பு காரணமாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான முதலீடுகள் பெரிய அளவில் குறைந்த காரணத்தால், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சிலிக்கான் வேலி பேங்க்-ல் டெபாசிட் செய்த தொகையை திரும்ப பெற துவங்கினர்.
பத்திர கொள்முதல்
சிலிக்கான் வேலி பேங்க் தனது வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகையை அடிப்படையாக வைத்து பல பில்லியன் டாலர் மதிப்பிலான பத்திரங்களை வாங்கியது. இது பாதுகாப்பான முதலீடுகளாக இருந்தாலும், வட்டி விகிதம் தொடர்ந்து உயர்ந்து வரும் காரணத்தால் நீண்ட காலம் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் உருவானது, முன்கூட்டியே விற்பனை செய்தால் அதிக இழப்பு ஏற்படும்.
டெபாசிட் வெளியேற்றம்
2022 ஆம் ஆண்டு முதல் வென்சர் பண்ட் முதலீடுகள் குறைந்து வந்த நிலையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் குறைவான அளவிலேயே தங்களது டெபாசிட் தொகையை வெளியேற்றி வந்த காரணத்தால் தனது நிலையான பணபுழக்கத்தை அடிப்படையாக கொண்டு ஈடு செய்து வந்தது.
பிரச்சனையின் துவக்கம்
டெபாசிட் தொகையை வெளியேற்றும் அளவு அதிகரித்த போது பத்திரங்களை பணமாக்க முடியாத காரணத்தால் தனது சொந்த முதலீடுகளை விற்பனை செய்து ஈடு செய்து வந்தது. சிலிக்கான் வேலி பேங்க்-ல் அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் குறைந்தபட்ச டெபாசிட் தொகையே 250,000 டாலர்.
பத்திரங்கள் விற்பனை
டெபாசிட் வித்டிராவல் கோரிக்கை அதிகரிக்க துவங்கிய நிலையில் சிலிக்கான் வேலி பேங்க் பத்திரங்களை வேறு வழியே இல்லாமல் நஷ்டத்தில் விற்பனை செய்ய துவங்கியது. இந்த இழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து சொத்துக்களின் இருப்பும் குறைந்து வரும் நிலையில் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
பிரச்சனை
ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வெளி சந்தையில் போதுமான முதலீடுகள் கிடைத்திருந்தால் கட்டாயம் சிலிக்கான் வேலி பேங்க் இந்த மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்காது. இதேபோல் சிலிக்கான் வேலி பேங்க் சொந்தமாக புதிய முதலீடுகளை திரட்ட முயற்சி செய்த போது பெடரல் ரிசர்வ் வங்கியின் தொடர் வட்டி விகித உயர்வால் தோல்லி அடைந்து தற்போது சிலிக்கான் வேலி பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு டெபாசிட் தொகையை கூட கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு திவாலாகியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications