வெள்ளி விலை தடாலடி உயர்வு.. 3 நாளில் 8,500 ரூபாய்.. என்ன காரணம்..?!!

எப்போதெல்லாம் சர்வதேச பங்குச்சந்தை, உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகச் சந்தை, போர் பிரச்சனை, வல்லரசு நாடுகள் சந்திக்கும் முக்கியப் பிரச்சனை, இயற்கை பேரிடர் ஏற்படும் காலகட்டத்தில் முதலீட்டுச் சந்தை மிகப்பெரிய பாதிப்பையும் மாற்றத்தையும் சந்திக்கும். இந்தக் காலகட்டத்தில் முதலீட்டுச் சந்தையைக் காப்பாற்றுவது உலோக சந்தைகள் தான், அதிலும் குறிப்பாகத் தங்கம் மற்றும் வெள்ளி தான் என்றால் மிகையில்லை.

அந்த வகையில் தற்போது கொரோனா, இந்திய - சீனா, அமெரிக்கா -சீனா, அச்சாம் வெள்ளம், சீனா மழை வெள்ளம், ரஷ்யா வரி உயர்வு, எனப் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறோம்.

வர்த்தகச் சந்தை இயல்பான நிலையில் இல்லாத இந்தச் சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் அனைவரும் தங்களது முதலீடுகளைப் பாதுகாக்க இருக்கும் ஓரே வழி உலோக முதலீடு தான்.

தடாலடி உயர்வு

தடாலடி உயர்வு

பொதுவாக வர்த்தகச் சந்தையில் தடுமாற்றம் நிலவும் போது தங்கம் மீது முதலீடு அதிகமாக இருப்பது வழக்கம், ஆனால் இப்போது வெள்ளி மீதும் அதிகளவிலான முதலீடு செய்யப்பட்டுச் சுமார் 7.5 வருட உச்சத்தை அடைந்துள்ளது.

தங்கம் வரலாற்று உச்சம்

தங்கம் வரலாற்று உச்சம்

2020ஆம் ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 28 சதவீதம் உயர்ந்து இன்று 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 52,050 ரூபாய் என வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது. இதன் மூலம் சாமானியர்கள் தங்கம் மீதான மோகம் சற்று குறையும் என்று தான் சொல்ல வேண்டும்.

வெள்ளி விலை

வெள்ளி விலை

இதேபோல் வெள்ளி விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்றைய வர்த்தகத்தில் 6.6 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி விலை பியூச்சர் சந்தையில் 61,130 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் கடந்த 3 நாட்களில் வெள்ளி விலை ஒரு கிலோவிற்கு 8000 ரூபாய் வரையில் அதிகரித்து முதலீட்டாளர்களுக்கும், சமானிய மக்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

சரி வெள்ளியின் தடாலடி உயர்வுக்கு என்ன காரணம்..??

காரணம்

காரணம்

முதலில் கொரோனா பாதிப்பிற்குப் பின் சீன பொருளாதாரம் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியிலும் உயர்ந்து வருகிறது. இதனால் சீன சந்தையில் வெள்ளியின் தேவை அதிகரித்துள்ளது. மேலும் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் சோலார் பேனல் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் வரையில் அதிகளவிலா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் புதிய உற்பத்தி வர்க்கம் உருவாக உள்ளது.

சோலார் பேனல் முதல் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வரையில் அனைத்தும் உற்பத்தி செய்ய வெள்ளி முக்கியத் தேவையாக உள்ளது. இதனால் இந்தியாவில் தற்போது வெள்ளியின் தேவை உற்பத்தி சந்தையில் அதிகமாகியுள்ளது. எனவே தான் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

 

முதலீடு

முதலீடு

அதைத் தாண்டி சர்வதேச முதலீட்டாளர்கள் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட வர்த்தகச் சரிவைச் சமாளிக்கத் தங்களது முதலீட்டை அதிகளவில் வெள்ளி மீது செய்யப்படுகிறது. குறிப்பாக மெக்சிகோ, லட்டின் அமெரிக்கப் பகுதியில் வெள்ளி மீது அதிகளவில் முதலீடு செய்யப்படுவதாகத் தெரிகிறது. இதுவும் வெள்ளி விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+